ஆங்கில புத்தாண்டு பலன்கள் 2018 – மீன ராசி
இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் மீன ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் சில பலன்களை பார்ப்போம்.
இந்த வருடம் 2018ல் முக்கிய கிரகமான சனி பகவான் உங்களுக்கு சாதமாக நிலையில் உள்ளார். அவர் நிச்சயம் பல நன்மைகளை செய்வர். தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள்.
துணிவும், பணிவும் கொண்டிருப்பதால் தான், எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கிறீர்கள். எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். எதைக்கண்டும் பயம் கொள்ள மாட்டீர்கள். எந்த ஒரு விஷயத்துக்காகவும் கவலைப்பட மாட்டீர்கள்.
குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சியும் ஏற்படும். குடும்ப நிர்வாகம் சிறக்கும். உங்கள் தேவைகள் நிறைவேறும். செலவுகள் அதிகமாகும். உடன்பிறந்தவர்களால் மன உலைச்சல் உண்டாகும். திருமண சுபகாரியங்கள் கைகூடும்.
கணவன் மனைவி இடையே ஒற்றுமை நிலவும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். உங்களுக்கு அலைச்சல்களும் உடல் அசதியும்,
ஏற்படும். தொழில் வியாபாரம் இவற்றில் முன்னேற்றமும் ஆதாயமும் பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டிவரும்.
வாழ்வின் சுகபோகங்களை பெறுவதற்கு நீங்கள் பலவிதமான தர்மசங்கடமான சூழ்நிலைகளை சமாளிக்க வேண்டிவரும். தொழில் வகையில் மந்த நிலை இருந்தாலும் புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள்.
உடன் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சாதிக்கும் ஆற்றலை பெறுவீர்கள். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.
ஆண்டின் பிற்பகுதியில் குரு பெயர்ச்சிக்கு பின் குடும்பத்தில் மகிழ்ச்சியும், திருமண சுப காரியங்கள் கைகூடும்.
கணவன் மனைவிடையே நெருக்கம் உண்டாகும். பூர்விக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில தொந்தரவு இருக்கும்.
தேவையற்ற அலைச்சலை தவிர்க்க பாருங்கள். முக்கிய காரியங்களில் எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கும். தூக்கம் கெடும், மன நிம்மதி பாதிக்கும். ஆண்டின் பிற்பகுதியில் குரு பெயர்ச்சிக்கு பிறகு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புண்டு, ஆகையால் விட்டுக்கொடுத்து போவது நல்லது. பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் தேவை.
பொருளாதார நெருக்கடி தீரும். சுப காரிய முயற்சி ஏற்பாடுகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைகூடும். வீட்டில் பொருள் சேர்க்கை உண்டாகும்.
உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும். உங்கள் முன் கோபத்தை குறைத்து பேசும் வார்த்தையில் நிதானத்தை கடைபிடிக்கவும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் பணிவாக நடந்து கொள்ளவும்.
பணிகளில் சுமைகள் கூடுதலாகும். உத்யோகத்தில் பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.
பணியில் உங்கள் திறமைக்கு ஏற்ற பாராட்டுக்கள் கிடைக்கும். புதிய வேலை முயற்சி செய்பவர்களுக்கு கிடைக்கும் வேலையை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவும்.
தொழில், வியபாரத்தில் முடிந்தவரை பெரிய முதலீடு செய்து தொழில் செய்ய வேண்டாம். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம் :
வருடம் முழுவதும் வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்கி வழிபடவும்.
முக்கிய குறிப்பு :
இந்த 2018ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.










