மனிதன் எப்போது முக்தியை அடைகிறான் தெரியுமா?
நாம் இறந்தவுடன் நமது உடலிலிருந்து பிரிந்த உயிர் எங்கே செல்கிறது? சொர்க்கத்திற்குச் செல்கிறதா? இல்லை நரகத்திற்குச் செல்கிறதா?
இல்லை ஆவியாக உலாவிக்கொண்டு இருக்கிறதா? இல்லை மீண்டும் இந்த பூமியில் மறுபிறவி எடுக்கிறதா? இல்லை இறைவன் திருவடியில் ஐக்கியமாகி விடுகிறதா?
என்று பலவாறு நமக்குள் கேள்விகள் எழுகிறது அல்லவா:
வாருங்கள் அந்த வினாக்களுக்கு விடை காணலாம்.
ஏன் ஒருவன் காரில் செல்கிறான்? ஏன் ஒருவன் நடந்து செல்கிறான்? ஏன் பெரிய மாளிகையில் வாழ்கிறான்? ஏன் ஒருவன் சாலையோரம் வாழ்கிறான்?
ஏன் ஒரு குழந்தை மாளிகையில் பிறந்து மகிழ்வோடு வாழ்கிறது? ஏன் ஒரு குழந்தை குடிசையில் பிறந்து உண்ண உணவின்றி துன்பப்படுகிறது? என்று நாம் எப்போதாவது சிந்தித்தது உண்டா?
அன்பும் கருணையும் கொண்ட இறைவன் படைப்பில் ஏன் இத்தனை பாகுபாடுகள் என்று நாம் என்றாவது சிந்தித்தது உண்டா?. அன்பர்களே ஒன்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் இன்று நாம் வாழும் வாழ்விற்கு நாம்தான் காரணமே தவிர இறைவன் இல்லை.
நாம் முற்பிறவில் செய்த நல்விணை தீவிணையின் அடிப்படையிலேயே, நாம் பிறக்கும் இடமும் வாழும் வாழ்வும் தீர்மானிக்கப்படுகிறது.
இதைதான், உன் வாழ்க்கை உன் கையில் என்று ஆன்மீகச் சான்றோர்கள் சொல்லி வைத்தார்கள். அன்பர்களே இறைவன் கருணை கொண்டவன். ஆகையால்தான் மீண்டும் மீண்டும் பிறவிகளை நமக்கு தருக்கிறான்.
ஏன் தெரியுமா? எப்படியாவது இறைவன் இருக்கும் இடம் அறிந்து இறைவனோடு கலந்து விடமாட்டானா என்று ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறான்.
ஆனால் மனிதர்களோ மாயையை உண்மை என்று எண்ணி, அதன் பின்னால் சென்று கொண்டிருக்கிறார்கள்.
அன்பு அன்பர்களே மாயை மீது நீங்கள் பற்று வைக்க வைக்க நீங்கள் பிறப்பெனும் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவே முடியாது.
உங்கள் மனதிலுள்ள ஆசைகள் அனைத்தும் முழுமை பெறும்வரை நீங்கள் மீண்டும் மீண்டும் இந்த பூமியில் பிறந்து இன்பதுன்பங்களை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பீர்கள்.
என்று மாயையிலிருந்து (உலக ஆசைகளிலிருந்து) முழுமையாக விடுபடுகிறீர்களோ அன்றுதான் நீங்கள் முக்தியை பெறுவீர்கள். அதாவது இறைவனோடு இறைவனாக இரண்டறக்கலப்பீர்கள். இதுவே முக்தியாகும்.
இதுவே மனிதப் பிறப்பின் நோக்கமாகும்.











