சில காயங்கள் “ மருந்தால் ” சரியாகும்.
சில காயங்கள் ” மறந்தால் ” சரியாகும்.
” ஆடம்பரம் “ அழிவைத்தரும். ” ஆரோக்கியம் “ நல்வாழ்க்கை தரும்.
கார் இருந்தால் ” ஆடம்பரமாக “ வாழலாம்.
மீதி வண்டி இருந்தால் ” ஆரோக்கியமாக “ வாழலாம்.
மனிதனுக்கு ” பிரச்சனை “ அதனால்,
கடவுளுக்கு ” அர்ச்சனை “.
” வறுமை “ வந்தால் வாடக்கூடாது.
” வசதி “ வந்தால் ஆடக்கூடாது.
வீரன் சாவதே இல்லை.
” கோழை “ வாழ்வதே இல்லை.
தவறான பாதையில் ” வேகமாக “ செல்வதைவிட.
சரியான பாதையில் ” மெதுவாக “ செல்லுங்கள்.
நீ ” ரசிக்க “ என்னிடம் அழகு இல்லை. ஆனால்,
நீ ” வசிக்க “ என் இதயத்தில் இடம் இருக்கிறது.
மனிதனுக்கு ABCD ” தெரியும் ” ஆனா “Q” ல போகத் “தெரியாது”.
எறும்புகளுக்கு ABCD ” தெரியாது ” ஆனா “Q” ல போகத் “தெரியும்”.
ஆயிரம் பேரைக்கூட ” எதிர்த்து “ நில்.
ஒருவரையும் ” எதிர்பார்த்து “ நிற்காதே.
தேவைக்காக கடன் ” வாங்கு “.
கிடைக்கிறதே என்பதற்காக ” வாங்காதே “.
உண்மை எப்போதும் ” சுருக்கமாக “ பேசப்படுகிறது.
பொய் எப்போதும் ” விரிவாக “ பேசப்படுகிறது.
” கருப்பு “ மனிதனின் இரத்தமும் சிவப்புதான்.
” சிவப்பு “ மனிதனின் நிழலும் கருப்புதான்.
வண்ணங்களில் ” இல்லை வாழ்க்கை.
மனித ” எண்ணங்களில் “ உள்ளது வாழ்க்கை
” கடினமாய் “ உழைத்தவர்கள் முன்னேறவில்லை.
” கவனமாய் “ உழைத்தவர்கள் முன்னேறியுள்ளனர்.
வியர்வை துளிகள் ” உப்பாக “ இருக்கலாம். ஆனால்,
அவை வாழ்க்கையை ” இனிப்பாக “ மாற்றும்.
கடனாக இருந்தாலும்சரி,
” அன்பாக “ இருந்தாலும் சரி, திருப்பி செலுத்தினால்தான் மதிப்பு.
” செலவு “ போக மீதியை சேமிக்காதே.
” சேமிப்பு “ போக மீதியை செலவுசெய்.
உன்னை நீ செதுக்கி கொண்டே இரு ” வெற்றி “ பெற்றால் சிலை, ” தோல்வி “ அடைந்தால் சிற்பி.
உறவினர்களில் யார் முக்கியம் என்பதை ” உயிரற்ற “ பணமே முடிவு செய்கிறது.
கடன் கொடுத்துப்பார் நீ எவ்வளவு ” முட்டாள் “ என்று தெரியும்.
கடன் கேட்டுப்பார் அடுத்தவன் எவ்வளவு ” புத்திசாலி “ என்பது புரியும்.
பணம் கொடுத்துப்பார் உறவுகள் உன்னை ” போற்றும் “.
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுப்பார் மண்ணை வாரி
” தூற்றும் “.
பேசிப்பேசியே நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் ” பொய் “.
அவர்கள் பேச்சில் நாம் ஏமாந்து விடுகிறோம் என்பதே ” உண்மை “.
மனைவி கேட்பதை எல்லாம் வாங்கி கொடுத்து சமாளிப்பவன் ” புத்திசாலி “.
வாங்கி கொடுக்கிறேன் என்று சொல்லியே சமாளிப்பவன் ” திறமைசாலி “.
கவலைகள் கற்பனையானவை.” மீதி “ தற்காலிகமானவை.
குறைகளை ” தன்னிடம் “ தேடுபவன் தெளிவடைகிறான்.
குறைகளை ” பிறரிடம் “ தேடுபவன் களங்கப்படுகிறான்.
அறுந்து போன செருப்புக்கு வீட்டில் ஒரு இடம் ” உண்டு “.
இறந்து போன மனித உடலுக்கு வீட்டில் ஒரு இடமும் ” இல்லை “.
விழுதல் என்பது ” வேதனை “.
விழுந்த இடத்தில் மீண்டும் எழுதல் என்பது ” ~சாதனை~ “.











