மாசிலாமணி சுவாமிகள்
சென்னை, திருமுல்லைவாயிலில் உள்ள சோழம்பேடு என்ற கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமாசிலாமணி சுவாமிகளின் பாலபருவத்துச் செய்திகள் எதுவும் நமக்குக்கிடைக்கப்பெறவில்லை.
அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.ராணுவத்தில் பணிபுரியும்போதே, இவர் ஆஞ்சநேயரை வழிபட்டுவந்தார்.
ஒருமுறைஇவர், ராணுவ வண்டியில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநர் மிக விரைவாகவும், அபாயமான முறையிலும் வண்டியை ஓட்டிச் செல்வதைக் கண்டு, ஓட்டுநரைஎச்சரித்தார் .
ஓட்டுநர் அதனைச் சட்டை செய்யாமல், மேலும் விரைவாக வண்டியைஓட்டினார் .
சுவாமிகள் வண்டியை நிறுத்துமாறு கூறி, வண்டியிலிருந்து இறங்கிக்கொண்டார் .அந்த ஓட்டுநர், சுவாமிகளை விட்டுவிட்டு வண்டியைக் கிளப்ப முயன்றார் .
என்னசெய்தும் வண்டியைக் கிளப்ப முடியவில்லை . சுவாமிகள் வண்டியில் ஏறிஅமர்ந்ததும் வண்டி கிளம்பியது . அப்போதுதான் சுவாமிகளிடம் ஏதோ ஒரு சக்திஇருக்கிறது என்று அனைவரும் உணர்ந்து கொண்டனர்.
சுவாமிகள் ராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின் சோழம்பேடு கிராமத்தில் உள்ளபொங்குலக் கரையில் (குளத்தின் கரையில்) ஆஞ்சநேயரின் சொரூபத்தைப் பிரதிஷ்டைசெய்து வழிபட்டு வந்தார் .
ஆஞ்சநேயர் எவ்வாறு தம் தலைவரான ஸ்ரீ ராமரின்நாமத்தை எப்போதும் ‘ராம் ராம்’ என்று உச்சரித்துக்கொண்டிருந்தாரோ, அதுபோன்றே சுவாமிகளும் ‘ராம் ராம்’ என்று மூச்சுக்கொரு முறை கூறிவந்தார் .
1982-ம் ஆண்டில் தாம் வழிபட்டு வந்த ஆஞ்சநேயருக்கு ஒரு சிறு மண்டபத்தைஎழுப்பி, கார்த்திகை மாதம் கும்பாபிஷேகமும் செய்தார்.
சுவாமிகள் அடிக்கடிதாம் நிறுவிய ஆஞ்சநேயரைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘ராம் ராம்’ என்றுகூறிக் கண்ணீர் விடுவாராம் .
அவரைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்குஉபதேசமும் செய்வார். “காடு நாடாகிறது நாடு காடாகிறது – மனிதர்களின் மன நிலைவிலங்குகளைப் போல் மாறிவிடும்” என்று அடிக்கடி கூறுவாராம்.
ஆஞ்சநேயர் ஆலயத்தில் அடிக்கடி பஜனைகள் நடக்கும்போதும், பக்தியின்வெளிப்பாடு அதிகமாகும்போதும் வானரம் போன்று சப்தமிட்டுக்கொண்டு அங்கும்இங்கும் தாவுவாராம்.
கீழே விழுந்து புரள்வதும் பல்ட்டி அடிப்பதும், பக்தர்கள் கொண்டு வந்திருக்கும் வாழைப்பழங்களைக் கடித்துவிட்டு மீண்டும்பக்தர்களின் மீது எறிவதுமாக இருப்பாராம்.
சுவாமிகள் யாசகம் செய்து அரிசி, காய்கறிகளை வாங்கி வந்து அனைத்தையும்ஒன்றாகப் போட்டு, உப்பு சேர்க்காமல் தாமே சமையல் செய்வார் . அது பாதிவேகும்போதே, சூட்டுடன் எடுத்து இரண்டுவாய் உண்பார்.
இதுதான் அவருக்குஅன்றைய உணவு. சோறு வெந்தபின், வந்திருக்கும் பக்தர்களுக்குக்கொடுத்துவிட்டுக் காக்கை, குருவிகளுக்கும் ஆகாரமிடுவார் .
சுவாமிகளின் மகிமையைப் பற்றி அறிந்த மக்கள், ஆலயத்தில் தொடர்ந்து அன்னதானம்நடைபெறவேண்டுமென்று,
சமையலுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கினர் . அதுஇன்றளவும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சுவாமிகள் அடிக்கடி பருத்திப்பட்டில் உள்ள தமது உறவினர் ஒருவரின்இல்லத்திற்குச் சென்று வருவார் . 1995 – ம் ஆண்டு டிசம்பர் மாதம், 4-ம்தேதி, யுவ ஆண்டு, கார்த்திகை மாதம், 18-ம் தேதி, திங்கட்கிழமை, திரயோதசிதிதி, பரணி நட்சத்திரத்தின்று காலை 9.10 மணிக்கு அங்கிருந்தவர்களிடம்
“ராம்ராம் இவனுக்கு நேரம் வந்துவிட்டது” என்று கூறிவிட்டுப் படுத்தார். அடுத்தகணம் சமாதியடைந்தார்.
பருத்திப்பட்டிலிருந்து சுவாமிகளின் பூதவுடலை ஊர்வலமாக சோழம்பேட்டிற்குக்கொண்டு வந்தனர். இதனை அறிந்த அவரது பக்தர்கள் ஆஞ்சநேயர் ஆலயத்தில் அவரைஎதிர்பார்த்துப் பஜனைகள் செய்து கொண்டிருந்தனர் .
சுவாமிகள் பிரதிஷ்டைசெய்த ஆஞ்சநேயருக்கு அருகில் சமாதி தோண்டப்பட்டுத் தயாராக இருந்தது.
சுவாமிகள் படுத்த நிலையில் சமாதியடைந்ததால், அவரை எப்படிச் சமாதிக்குள்உட்கார வைப்பது என்ற குழப்பம் ஏற்பட்டது .
சுவாமிகளின் சீடரான துக்காராம்அவர்கள், சுவாமிகளிடம் கால்களை மடக்கிக்கொள்ளுங்கள் என்று கூறியதும்சுவாமிகள் பத்மாசனமிடுவது போல் கால்களை மடக்கிக் கொண்டாராம்.
பின்னர் 108 குடங்களில் நீர் எடுத்து வந்து அபிஷேகம் செய்து, புத்தாடைஅணிவித்து அவரைச் சமாதியினுள் அமர வைத்தனர் .
அவரைச் சுற்றி வில்வம், துளசி, விபூதி, ஆகியவற்றை நிரப்பி சமாதியை மூடினர்.பல அதிசயங்களை நிகழ்த்திய சுவாமிகள் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை .
அவரது சீடரான துக்காராம் அவர்கள், சுவாமிகளின் சமாதிப் பீடத்தின் மீதுசுவாமிகளின் திருஉருவச் சிலையை ஸ்தாபிதம் செய்துள்ளார்.அம்பத்தூர் ஓ.டி. பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள சோழம்பேடு மெயின்ரோட்டில் சுமார் ஒரு கிலோ மீட்டர் பயணம் செய்த பின்,
குளக்கரைக்குச்செல்லும் பாதையில் சென்றால் ஆஞ்சநேயர் ஆலயத்தை அடையலாம்.










