பழந்தமிழர்களின் குறிஞ்சி நிலத்தின்(மலையும், மலையைச் சார்ந்த இடங்களும்) தெய்வம் முருகப்பெருமான். கந்தன் , கடம்பன், கார்த்திகேயன், காங்கேயன் என்றெல்லாம் அழைக்கப்பட்ட முருகன், இளமையும், அழகும் நிறைந்தவர்.
முருகுஎன்றாலே அழகு என்றே பொருள். முருகப்பெருமானுக்கு “தைப்பூசம்” மிகவும் சிறப்பானது. தை மாத பௌர்ணமியன்று. தைப்பூச விழா முருகன் கோயில்களில் விமரிசையாக நடைபெறும்.
தைப்பூச நாளில் குமரன் குடிக்கொணாடிருக்கும் மலைகளைச் சுற்றி வந்தால், நிலவின் குளிர்ச்சியான கதிர்கள் உடலில் படுவதால் நமது மனோசக்தி அதிகரிக்கும். இதனால் நாம் செய்யும் செயல், தொழிலில் வெற்றிக் கிட்டும். தை மாதப் பௌர்ணமியில் சூரியனும், சந்திரனும் பலம் பெறுகின்றனர்.
தெய்வீகம் மிக்க மலைக்கோயில்களில் நிலவின் ஒளி உடலில் விழுவதால், நமது ஆரோக்கியம் மேம்படும். எனவே தைப்பூச நாள் முருகனின் வழிபாட்டுக்குரியதாக அமைந்தது மேலும் சிறப்பானதாகும்.
உலககத்தை இறைவன் உருவாக்கிய நாள் தைப்பூசம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களும் இந்நாளில் தான் தோன்றின.
எனவே அவற்றை பாதுகாக்க வேண்டும்! என்ற அடிப்படையில் சிவபார்வதியை இந்நாளில் மக்கள் வழிபட்டனர்.
சிவனின்றி சக்தியில்லை! என்ற தத்துவத்தின் அடிப்படையில், சக்தியும், சிவனும் இணைந்து “அர்த்தநாரீஸ்வரர்” ஆனதும் தைப்பூச நன்னாளில் தான். சூரபத்மனை அழிக்க முருகனுக்குத் தன் சக்தியைத் திரட்டி, பார்வதி தேவி வேலாயுதத்தை வழங்கியதும் தைப்பூச நாளிலேயே.
இதன் பிறகே இந்நாள் முருகனுக்கு உரியதாக ஆனது. மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் தான் மலைக்குறமகள் வள்ளியை, முருகப்பெருமான் திருத்தணியில்(தணிகை மலை) திருமணம் செய்தார்.











