யாருடைய அனுமதியுடன் சிவனை வணங்க வேண்டும் ?
சிவன் கோவிலுக்கு உள்ளே நுழைகின்ற போது பலபேர் நேராக சன்னதியை நோக்கி போய்விடுகிறார்கள்,
விநாயகர் முருகன் மற்றும் சுற்றி இருக்கும் அணைத்து தெய்வங்களையும் வணங்கிவிட்டு, ஒரு விசயத்தை பலரும் நியாபகம் வைத்துக்கொள்வதில்லை ,
நந்திதேவர்னு ஒருவர் இருக்கிறார் அவரை வணங்கி விட்டுத்தான் உள்ளே போகவேண்டும் என்பதை மறந்து விடுகிறார்கள், நேராக சென்று சிவபெருமானை வணங்கிவிட்டு வெளியே வரும்போதுதான் வணங்குகிறார்கள்,
அது தவறு ஒவ்வொரு நபரும் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டிய விசையம் எப்போது கோவிலுக்கு சென்றாலும் முதலில் நந்திதேவர்- ஐ வணங்கி அவரின் அனுமதி பெற்றுதான் சிவபெருமானை வணங்க வேண்டும்.
ஏன் என்றால் சிவபெருமானுக்கு நந்திதேவர் மெய்க்காவலர் மட்டும் அல்ல,
சிவனை வணங்க அனுமதி தருகின்ற நிலையில் இருக்கின்றவர் நந்திகேஸ்வரர் ,இந்த நந்திகேஸ்வரர் ஈஸ்வரர் பட்டமும் பெற்றவர் எனவே நந்திகேஸ்வரரை வணங்கி அவர் அனுமதி வாங்கிய பிறகு சிவனை சேவித்து மகிழவேண்டும் .
திருச்சிற்றம்பலம்.











