*மாசிலாமணி மங்களம்மாள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த காந்தியவாதியும்,
இந்திய விடுதலைப் போராளியும் , சமூக சீர்திருத்தவாதியும், பெண்கள் முன்னேற்றத்துக்காக உழைத்த பெருமகளும் ஆவார்.
*யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் கல்வியில் முன்னணியில் திகழ்ந்த, வசதி படைத்த குடும்பம் ஒன்றில் பிறந்த இவர், இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு சமூக, அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
*மங்களம்மாளின் தாய்வழிப் பாட்டனார் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கதிரவேலுப்பிள்ளை என்பவர்.
*19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் ஒரு வழக்கறிஞர். அக்காலத்தில் பி. ஏ பட்டம் பெறுவது யாழ்ப்பாணத்தில் மிக அரிதாக இருந்ததால், பி. ஏ. பட்டதாரியான இவரை மக்கள் பிஏ தம்பி என்றே அழைத்துவந்தனர்.
*இன்றும் யாழ்ப்பாணத்தில் அவர் வாழ்ந்த வீட்டுக்கு அருகில் உள்ள ஒழுங்கை ,
பி. ஏ. தம்பி ஒழுங்கை என அழைக்கப்படுகிறது.
*பி. ஏ. தம்பியின் ஆண் மக்களான செல்லப்பாபிள்ளை, பொன்னம்பலபிள்ளை, சின்னப்பாபிள்ளை ஆகியோர் இந்தியாவின் திருவிதாங்கூரில் உயர் பதவிகளை வகித்துவந்துடன், இந்தியாவின் சுதந்திர இயக்கத்திலும் பங்குகொண்டிருந்தனர்.
*பி. ஏ. தம்பியின் மகளுக்குப் பிறந்தவரே மங்களம்பாள்.
*1884ம் ஆண்டு மார்ச்சு (பங்குனி) மாதம் 10ம் நாள் இவர் குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாகப் பிறந்தார் மங்களம்மாள்.
*இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றது குறித்துத் தகவல் இல்லை. யாழ்ப்பாணத்தில் அக்கால உயர்குடி இந்துக்களின் வழக்கப்படி பெண்ணான இவருக்கு வீட்டிலேயே கல்வி அளிக்கப்பட்டிருக்கக்கூடும். மாமனாரான பொன்னம்பலபிள்ளையின் ஒரே மகனான மாசிலாமணிப்பிள்ளையை மங்களம்மாள் திருமணம் செய்துகொண்டார்.
*மாசிலாமணிப்பிள்ளை யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த “தேசாபிமானி” பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததுடன், இந்தியாவிலும், இலங்கையிலும் பல்வேறு பொதுப்பணிகளில் ஈடுபட்டவர்.
*திருமணத்துக்குப் பின் மாசிலாமணிப்பிள்ளை அக்காலத்தில் இந்தியாவில் வாழ்ந்துவந்ததால் மங்களம்மாளும் இந்தியாவுக்குச்சென்றார்.
*கணவரின் தூண்டுதலினால் மங்களம்மாள் காங்கிரசில் இணைந்து தீவிரமாக உழைத்தார்.
1924 இல் கோயில்பட்டியில் இடம்பெற்றகாங்கிரஸ்மாநாட்டில் பெண்கள்அரங்குக்கு இவரே தலைமைதாங்கினார்.
*1927ல் மகாத்மாகாந்தியின் முன்னிலையில் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரசு மாநாட்டிற்கான வரவேற்புக்குழுவில் இவரும் இருந்ததுடன், பெண்கள் அரங்கத்தில் வரவேற்புரையையும் நிகழ்த்தினார்.
*இந்தியாவில், 1926க்கு முன்னர் பெண்கள் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கக்கூடாது என்ற தடை இருந்தது.
*இது நீக்கப்பட்டபின்னர் சென்னை மாநகரசபைக்கு இடம்பெற்ற தேர்தலில் நீதிக் கட்சித் தலைவரான நாயுடுவை எதிர்த்து, எழும்பூரில் மங்களம்மாளைக் காங்கிரசுக் கட்சி நிறுத்தியது.
*அத்தேர்தலில் மங்களம்மாள் வெற்றி பெறாவிட்டாலும், யாழ்ப்பாணத்துப் பெண்மணி தமிழ்நாட்டுஅரசியலில் இந்த நிலையை அடைந்தது முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
*மங்களம்மாள் இந்தியாவில் இருந்த காலத்தில் 1923ல் பெண்களுக்கான “தமிழ்மகள்” என்னும் மாத இதழ் ஒன்றைத் தொடங்கி நடத்திவந்தார்.
*இவர் மீண்டும் யாழ்ப்பாணம் வந்த பின்னரும் தொடர்ந்து இந்த இதழ் 40 ஆண்டுகாலம் வெளிவந்தது.
*இதன் பின்னர், பல்வேறு காரணங்களினால், காலாண்டு, அரையாண்டு இடைவெளிகளிலேயே வெளியிட முடிந்தாலும் 1971 ஆம் ஆண்டு, 87 வயதில் அவர் இறக்கும்வரை இவ்விதழை அவர் வெளியிட்டு வந்தார்.
*கடைசி இதழ் முற்றுப்பெறுமுன்னரே அவர் இறந்து விட்டாலும், அவ்விதழ் அட்டையில் அவரது படத்தையும், அவர் பற்றிய இரண்டு கட்டுரைகளையும் உள்ளடக்கி அவரது நினைவாக வெளியானது.
*மங்களம்மாள் மாசிலாமணிப்பிள்ளை இணையரின்யின் மூத்த மகள் , மகேசுவரிதேவி கலைப்புலவர் க நவரத்தினத்தை மணந்தவர் ,A First Book of Indian Music, Veena Tutor ஆகிய நூல்களை எழுதியவர்.
*யாழ்ப்பாணத்தில் பல்வேறு சமூகப் பணிகளிலும் , பெண்கள் முன்னேற்றத்திலும் அக்கறையுடன் பாடுபட்ட மாசிலாமணி மங்களம்மாள் தனது 87 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.
*இந்தியா , இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் தன் அயரா உழைப்பால் முத்திரை பதித்தவர்.
*யாழ்ப்பாணத்து வீரத் தமிழச்சி , தியாகச்சுடர் “மாசிலாமணி ப்பிள்ளை மங்களம்மாளின் “புகழ் பாடி வீரவணக்கம் செலுத்துவோம்










