யோகி ஸ்ரீ வீரராகவ சுவாமிகள் – திருவொற்றியூர்
இவரது பூர்விகம் பற்றி துல்லியமான தகவல்கள் இல்லை. வடநாட்டிலிருந்துவந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச்சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு, திகம்பரராக திரிந்தவர் இவர்.
சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும்விரட்டியபோதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டவர் இவர்.
இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல்துறையினர், ஒருநாள் இவரைப்பிடித்துப்போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்துவைத்தனர். இரவுநேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்தபோது, சுவாமிகளின்உடல்பாகங்கள் தனித்தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனதுமேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தாராம்.
அவர்கள் வந்து பார்த்தபோதுசுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தாராம்.இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது.சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது.
அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரைசுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவாராம்.சுவாமிகளைத் தேடி வரும் பக்தர்கள் வாங்கிக் கொடுக்கும் டீயை சிறிதுபருகிவிட்டு யாராவது ஒரு பக்தரிடம் கொடுத்து,
அவரும் பருகிவிட்டால் அந்தநபரின் துன்பங்கள் அனைத்தையும் சுவாமிகள் ஏற்றுக்கொண்டதாக ஒரு நம்பிக்கைஇப்பகுதி மக்களுக்கு இருந்துள்ளது.
வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்தவீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒருநம்பிக்கை இருந்தது.
பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள்தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து, தமது சமாதியின் மீதுபிரதிஷ்டை செய்யவேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார்.
1964-ம் ஆண்டுசித்திரை மாதம் முதல் தேதி, சதயநட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவைநீக்கிக்கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளலிங்கத்தை,
இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம்செய்யவும் பூஜை செய்யவும் இங்குஅனுமதிக்கப்படுகிறது.திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.
நடக்கட்டும் நம்புகிறோம் ஏன்பது மனிதர்களின் வாக்கு.
நம்பினால் நடக்கும் என்பது சித்தர்களின் வாக்கு–அகத்தியர்–
“சித்தர் பூமி” தினசரி ஆன்மீக செய்திகள் Online ல் படியுங்கள்..! www.siddharbhoomi.com
உங்கள் நண்பர்களுக்கு Forward செய்யுங்கள். சித்தர் அருள் கிடைக்கும்..!
Mobile:+91-7305018180











