வள்ளல் பெருமானாரின் சன்மார்க்கப் பெருநெறிகள்.
உண்மை அன்பால் அருட்பெருஞ்ஜோதியை வழிபாடு செய்து அருள் ஒளியை
நமக்குள் காணுதல்.
காய்க்கும் பருவம் தன்னைப் பழுத்த பருவம் ஆக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே
நாய்க்குத் தவிசிட் டொரு பொன் முடியும் நன்று சூட்டியே
நட்ட நடுவே வைத்தாய் கருணை அமுதம் ஊட்டியே.
கல்லை நோக்கிக் கனிந்துபழுத்த கனிய தாக்கியே
கனகசபையில் நடிக்கின்றாய் ஓர் காலைத் தூக்கியே
புல்லை முடிக்கும் அணிகின்றாய் என் புன்சொல் மாலையே
புனைந்து என் உளத்தில் இருக்கப் புரிந்தாய் நின் பொற் காலையே.
நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்
பண்புற எனக்கருள் பண்புடைத் தாயே.
கடந்தென தறிவாம் கனகமேற் சபைநடு
நடந்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே.
வள்ளலார்.










