வாழ்க்கையில் வெற்றிகாண வேண்டுமென
செயல்படுபவர்கள், முதலில் கவனத்தை
ஒருமுகப்படுத்த வேண்டும். இதற்கென
பெரியளவில் செயல்படத் தேவையில்லை;
சிதறிக்கிடக்கும் உணர்வுகளை ஒரே
முனையில் கொண்டு சேர்த்தாலே போதும்.
கவனம், உணர்வு நிலை இவ்விரண்டையும்
ஒன்றாக்கி செயல்படும்போது, வேறெந்த
சக்தியாலும் வெல்ல முடியாத அளவிற்கு
அது பலன் பெற்று விடுகிறது!










