ஸ்ரீமத் சிதம்பர பெரிய ஸ்வாமிகள், வேளச்சேரி.
நம் சுவாமிகள் திருச்சியை அடுத்த ஆரியம்பாக்கம் கிராமத்திலிருந்து தன்தாய்தந்தையரை தன்னுடைய இளம் வயதிலேயே விட்டுவிலகி துறவறம் மேற்கொண்டு விருத்தாச்சலத்திலிருந்து பல சிவதலங்களையும் தரிசித்து
சுமார் 200 வருடங்களுக்கு முன் வேதஸ்ரேணி எனும் வேளச்சேரி சிவத்தலத்தை வந்தடைந்தார்.
இங்குள்ள குளத்தில் குளித்தபிறகு கரையில் ஒரு வயதானமூதாட்டி நம் சுவாமிகளிடம் இந்த கோயிலை நீதான் சீர்படுத்தி இறைபணி செய்யவேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்.
வந்தவர் வேறுயாருமல்லஎல்லாம்வல்ல அன்னை கருணாம்பிகை தாயேதான் என்பதை உணர்ந்து ஆலயத்தைச்சீர்செய்ய திருவுளம் கொண்டார்.
இங்கு அருள்மிகு தண்டபாணீஸ்வரர் ஆலயத்தில்ஈசனை வணங்கிய பின்னர் இறைபணியை செய்யும்போது ஓய்விற்காக ஆழ்ந்தநித்திரையிலிருந்தபோது அவர்மீது
சூரிய ஒளி படுவதை கண்ட நாகமொன்று அவ்வொளியைதடுத்து நிழல் கொடுத்தது. இந்த அதிசயத்தை கண்ட ஊர் மக்கள் வியந்து அவர்திருவடியை பணிந்து வணங்கினர்.
அருள்மிகு தண்டபாணியானார். திருக்கோயிலை புதுப்பித்துகட்டுமான பணிகளை செய்யும் பணியாளர்களுக்கு தினக்கூலி கொடுப்பதற்குபணமில்லாமல் விபூதியை எடுத்து கையில் கொடுக்கும்போது அவரவர் உழைப்பிற்கேற்றபணமாக மாறியது.
சுவாமிகள் இரவில் ஊருக்குள் உலா வரும் பொழுது தேங்காய்களைதிருட திருடர்கள், மரத்தின் மேலே இருப்பவர்களை சுவாமிகள் பார்த்தமாத்திரத்தில் மரத்திலேயே ஒட்டிக்கொண்டார்கள்.
நம் சுவாமிகள் அவர்களைஇறங்கி வா என்று கூறிய பின்னர்தான் அவர்களால் இறங்கிவர முடிந்தது. பிறகுசுவாமிகளிடம் மன்னிப்புக்கேட்டு வணங்கி நின்றார்கள்.
சுவாமிகளுக்கு இரவில் ஒரு வீட்டில் வழக்கமாக உணவுஇடுவார்கள். ஒரு நாள் அந்த வீட்டின் குடும்பத்தலைவி தன் கடுமையான வேலையின்காரணமாக உணவு இன்னும் தயார் செய்யவில்லை என்று பொய் உரைத்துவிட்டார்.
நம்சுவாமிகளும் உண்மைநிலை அறிந்து தண்டபாணியானார் கோயில் திண்ணையில்அமர்ந்துவிட்டார்.
பொய் உரைத்த அந்த குடும்பத்தலைவி தன் குழந்தைகளுக்குஉணவு ஊட்டுவதற்காக பானையை திறந்து பார்த்தபொழுதுசோற்றுப் பானை காலியாகஇருந்ததைக் கண்டு சுவாமிகளிடம் வந்து வருந்தி மன்னிப்பு வேண்டியதும்
நம்சுவாமிகள் “உணவு இருக்கிறது போய் குழந்தைகளுக்கு கொடு தாயே” என்ற பிறகுவீட்டிற்கு வந்து சோற்றுப்பானையில் உணவு இருந்ததைக்கண்டு வியந்தார்.
மேலும்நம் சுவாமிகள் தண்டபாணியனார் கோயிலுக்கு செய்த சிவத்தொண்டு மகத்தானது.அளவிடற்கரியது.
நம் சுவாமிகள் திருக்கோயிலை புதுப்பித்தது மட்டுமல்லாமல்நித்திய வழிபாட்டிற்கு வழி வகுத்ததும்,
பிரமோற்சவப் பெருவிழா எடுத்ததும்அருள்மிகு தண்டபாணியானார்க்கு திருத்தேர் செய்ததும் மிகப்பெரியசிவத்தொண்டாகும்.
நம் சுவாமிகள் தண்டபாணியனார் கோயிலை புதுப்பித்து தம்கடமை முடிந்தது என்று நினைத்தும் மற்ற சிவாலயங்களுக்கு செல்லலாம் என்றும்நினைத்து புறப்பட்டபொழுது
நாகமொன்று கோபுரவாசலில் வழி மறித்தது கண்டு வேறுகோபுரவாசல் வழியே செல்லலாம் என்று முற்பட்டபோதும் அதே நாகம் மீண்டும் வழிமறித்தது.
நம் சுவாமிகள் ஈசன் தம்மை இத்தலத்திலேயே தங்கி மேலும்சிவத்தொண்டினை செய்யச் சொல்கிறார் என்று உணர்ந்து நம் சுவாமிகள்இத்தலத்திலேயே தங்கி மென்மேலும் பல சிவத்தொண்டுகளைச் செய்தார்கள்.
நம்சுவாமிகள் விருத்தாச்சலம் திருத்துருத்தி இந்திரபீடம் குமார தேவரின்பரம்பரையில் வந்த குழந்தைவேல் என்னும் குருவின் சீடராவார்.
நம் சுவாமிகளைவேளச்சேரி மகான் என்றும் “சிதம்பர பெரிய சுவாமிகள்” என்றும் ஞானிகளாலும், பக்தர்களாலும்போற்றி வழிபாடு செய்யப்படுகிறார்.
ஒரு சமயம் நவாப் ஒருவர் தீராத வயிற்றுவலியில் துடித்துக்கொண்டிருக்கும்போது நவாப்பை நம் சுவாமிகளிடம் அழைத்துவந்தார்கள்.
நம் சுவாமிகளும்அவருக்கு திருநீறு கொடுத்த மாத்திரத்தில் வலி முற்றிலும் குணமானது கண்டுநவாப் அவர்கள் நெஞ்சுருகி,
நெகிழ்ந்து நம் சுவாமிகளுக்கு தங்கியிருக்கஇடமும் பல இடங்களில் பயிர் செய்ய விளை நிலங்களும் வழங்கியதாக வரலாறுகூறுகிறது.
தற்போதைய ஐஐடி (ஐஐகூ) அன்றைய காலகட்டத்தில் நவாப்புக்குசொந்தமான தோட்டத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. இத்தோட்டத்தின் ஒரு பகுதியைபரசுராமர் என்பவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார்கள்.
அப்படி விவசாயம் செய்து வந்தகாலத்தில் தன் சகோதரர்களுடன் ஏற்பட்டமனஸ்தாபத்தினால் தான் தங்கியிருந்த வீட்டைவிட்டு விலகிவிவசாயம் செய்து வந்தநிலத்திலேயே குடிசை அமைத்து தங்கியிருந்தபோதுதான் நம் சுவாமிகளின் பரிபூரணஅருள் பெற்ற
உத்தமச் சீடர் ஐயா ஊ.ளு. செல்வமணிஅவர்கள் சின்னப்ப நாயக்கர்என்னும் தந்தையாருக்கும் தாயார் சகுந்தலா அம்மையாருக்கும் மகனாகப்பிறந்தார். இவருடைய பாட்டனார்தான் பரசுராமர் ஆகும்.
மேலும் 1946ம் வருடம் அப்புகுட்டி செட்டியாரின் மனைவி அன்னம்மாள்என்பவர் நம் சுவாமிகளின் வேண்டுதலின்படி குழந்தை பாக்கியம் பெற்றார்.குழந்தை பேறு பெற்ற ஆனந்தத்தினால் அப்பெண்மணி அந்த வருடத்திலேயே நம்சுவாமிகளின் சன்னிதானத்தை முழுமையாக கருங்கல்லால் ஆன பெரிய மண்டபம் அமைத்துகொடுத்தார்கள்.
மேலும்ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள் திருக்கோயிலைவேளச்சேரி மக்களுக்கு பயன்படும்படி சுமார் 20 வருடங்களுக்கு மேலாகபள்ளிக்கூடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டதும் இதில் படித்த இளைஞர்கள் பலர்உயர் அதிகாரிகளாக அரசுப்பணிகளிலும்,
பலருக்கு இங்கு திருமணம் நடந்துசுவாமிகளின் அருளாலும் நலமாகவும் இருக்கிறார்கள்.நம் சுவாமிகள் “உபதேச உண்மை” என்னும் மகத்தான நூலினை இயற்றிஉள்ளார்கள்
இந்நூல் கலியுகம் 4956 ஆங்கில வருடம் 1855-ம் ஆண்டு மூன்றாவதுமுறையாக புதுப்பிக்கப் பட்டுள்ளது. இந்நூலில் தண்டபாணியனார் பதிகம், உபதேசஉண்மை, உபதேச உண்மைக்கட்டளை, பூங்குயிற்கண்ணி, ஆனந்தகளிப்பு, தோத்திரமாலை, எந்நாட்கண்ணி, என்னேயோ என்கண்ணி ஆகியவை இடம்பெற்றுள்ளன.
நம் சுவாமிகள் முக்தி அடையும் நேரம் அறிந்து ஜீவசமாதி நிலைஅடைந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
நம் சுவாமிகள் காளயுத்தி ஆண்டுகார்த்திகை மாதம் 16-ம்தேதி அமரபட்சம், சதுர்தசி, விசாக நட்சத்திரம் ஆங்கிலஆண்டு 4.12.1858 சனிக்கிழமை காலை 9.45 மணிக்கு சிந்தனைக் கெட்டாதசிவரூபமானபோது அப்போதைய
ஆங்கிலேயே அரசு அதிகரிகள் மருத்துவரைக் கொண்டு நம்சுவாமிகளின் நாடித்துடிப்பை பார்க்கும்போது அடங்கியிருந்ததை கண்டு வியந்துவணங்கிச் சென்றார்கள். இந்நன்நாளை வருடந்தோறும் கார்த்திகை விசாகநட்சத்திரத்தில் குரு பூஜையாக வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது ஸ்ரீமத் சிதம்பர பெரிய சுவாமிகள் ஜீவத் திருக்கோயில், 1 வேளச்சேரி மெயின் ரோடு,சென்னை-42.
கோயில் திறக்கும் நேரம்: காலை 6.00 மணி முதல் 11.00 மணிவரை மாலை 5.00 மணி முதல் 8.30 மணிவரை விசேஷ நாட்களில் : காலை 5.30 மணி முதல் 12.00 மணிவரை மாலை 4.30 மணி முதல் 9.00 மணிவரை.










