ஸ்ரீமத் மௌன சுவாமிகள், திருப்போரூர்
ஸ்ரீமத் மௌனசுவாமிகள் 1872 ஆம் ஆண்டு தை மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். தாய், தந்தை வைத்த திருநாமம் சிங்காரவேலன்.
திருப்போரூர் முருகனிடத்தில் தீராத பக்தி கொண்டு 15 ஆண்டுகள் பிள்ளைப்பேறு வேண்டி பிறந்தவர். சிறு வயது முதல் சிவபூசையில் ஈடுபட்டார்.

ஆன்மிக நூலில் அதிக ஆர்வத்துடன் கற்றார். ஓவியம் தீட்டுவதில் தேர்ச்சி பெற்றவர். அவர் தீட்டிய ஓவியங்கள் இன்றும் மடத்தில் உள்ளன.
அவருக்கு இருபது வயதில் திருமணம் நடைபெற்றது. இரண்டு ஆண்டுகள் தான் குடும்பத்துடன் இருந்தார். பிறகு துறவு மேற்கொண்டார்.
மௌன சுவாமிகளுக்கு மூன்று முறை தரிசனம் தந்து சிதம்பர சுவாமிகள் மௌன விரதம் இருக்கும்படி கூறினார். அன்று முதல் மௌன விரதம் இருந்தார். சுமார் 27 ஆண்டுகள் விரதம் இருந்தார்.
அக்காலத்தில் மிகவும் செல்வந்தரும் தொழில் அதிபருமான திருவாளர் ராஜமாணிக்கம் பிள்ளை, M.R.சிவசங்கர முதலியார், போன்ற ஆன்மிக அன்பர்கள் சுவாமிகளிடம் பக்தியும் நட்புடன் இருந்தனர்.
தான் மோட்சம் அடையும் நாள் அறிந்து மூன்று மாதத்திற்கு முன் பக்தர்களிடம் பேசினார். பிறகு 14.1.1926ல் வெள்ளிக்கிழமைஅன்று ராஜமாணிக்கம் இல்லத்தில் மௌன சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்வித்தார்.
மௌனசுவாமிகள் கூறியபடி குரோதன ஆண்டு 15.1.1926சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு இறைவனுடன் கலந்தார். திருப்போரூர்கண்ணுவர்பேட்டை, சிதம்பர சுவாமிகள் மடத்திற்கு அருகில் மௌன சுவாமிகள் மடம் உள்ளது.











