ஈரோடு மாவட்டம் கோபி செட்டிய பாளையம் சுமார் 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது .கோபி பஸ் நிலையத்தில் இருந்து மார்க்கெட் சென்று சிறிய பாலம் ஒன்று அமைந்துள்ளது .
அதன் வழியாக சென்றால் துரையப்பா காம்பிளக்ஸ் பின்புறம் ஸ்ரீ ஆறுமுக சித்தரின் ஜீவசமாதி அமைந்துள்ளது . திருவண்ணாமலையில் ஜீவசமாதியான ஸ்ரீ குகை
நமச்சிவாயரை அல்லது குகநாதரை குருவாக கொண்டு பூஜித்து வந்த ஸ்ரீ ஆறுமுக சித்தர் தாந்தீரிக வல்லுனராக இருந்தவர் .
ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில் இவரின் வம்சாவழிக்கோவிலாகும் . ஸ்ரீ ஆறுமுக சித்தர் ஜீவசமாதி நெரிசல் மிக்க நகரில் அமைதியாய் அமைந்திருக்கிறது . எம் அனுபவத்தில்
சில ஜீவசமாதிகள் கண்டுற்ற போதிலும் அதிக ஈர்ப்புடைய மறுபடி செல்லத்தூண்டுகிற அற்புத இடம் .
விஷேசநாட்கள் :
பெளர்ணமி நாளில் காலைமுதல் இரவு 7.30மணி வரை திறக்கப்பட்டிருக்கும் . அன்று விஷேச பூஜைகள் நடைபெறுகிறது . மற்ற நாட்களில் மாலை 05.30 07.30 மணி வரை திறந்திருக்கும் பூஜைகள் நடைபெறும் ..
நம் ஆர்வமெல்லாம் ஸ்ரீ ஆறுமுகசித்தரின் ஜீவசமாதியை எல்லோரும் கண்டுற்று வணங்கி நல்வாழ்வு பெற வேண்டுமென்பதே . மேலும் ஸ்ரீ ஆறுமுக சித்தர் ஜீவசமாதி பற்றி விபரங்கள் தெரிந்தவர்கள் , வம்சாவழியினர் விபரங்கள் அனுப்பினால் கட்டுரை விருவாக்கப்படும் .
ஜீவசமாதியை தரிசிக்க வேண்டுவோர் விபரங்களுக்காக தொடர்பு கொள்ளலாம் .இப்பதிவை காண வந்த உங்களுக்கு ஸ்ரீ ஆறுமுக சித்தரின் அருளாசி கிடைக்கவேண்டி விரும்புகிறேன் . பதிவை படித்து கருத்துரையிடுக்கள் நன்றி .
ஒம்சிவ சிவ ஓம்










