ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஸன்னதி
சென்னையிலிருந்து 2 மணி நேர பயண தூரத்தில், செய்யாறு அருகில் உள்ள சிருங்கட்டூர் கிராமத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஸன்னதியில் பிப்ரவரி 2ம் தேதி (ஞாயிறன்று) காலை வருடாந்திர உற்சவம் நடைபெற உள்ளது.
அமைதியான கிராமத்து சூழ்நிலையில் உற்சவம் & ஊஞ்சல் சேவையை கண்குளிரக் கண்டு எம்பெருமான் ஆசி பெற தவறாதீர். உற்சவம் முடிந்ததும் பகவத் பிரசாதம் உண்டு.
எம்பெருமானின் நல்லாசிகளைப் பெற, அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். குழந்தைகளை கண்டிப்பாக அழைத்து வாருங்கள். பக்தியையும் நம் கலாச்சாரத்தையும் அறிய ஓர் அருமையான வாய்ப்பு இது.
தங்கள் வரவை முன் கூட்டியே (ஸ்ரீ ஸ்ரீனிவாசன் அவர்களிடம் 94444 75810 என்ற எண்ணில்) தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்ய வசதியாக இருக்கும்.
செய்யாறில் இருந்து சிருங்கட்டூர் சுமார் 7 கிலோ மீட்டர்.
காஞ்சிபுரம் & செய்யாறில் இருந்து சிருங்கட்டூருக்கு பேருந்து வசதி உண்டு.
சென்னை to காஞ்சி, பின் வந்தவாசி செல்லும் சாலையில் ஐயங்கார்குளம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பினால் வெம்பாக்கம், பெருங்கட்டூர் வழி சிருங்கட்டூர்
ஆரணி to செய்யாறு பின் சிருங்கட்டூர்.
வேலூர் / ஆற்காடு to செய்யாறு வழியில் மோரணம் தாண்டியதும் சிருங்கட்டூர்.
வந்தவாசி to செய்யாறு பின் சிருங்கட்டூர்.










