2019 ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
2019 மேஷ ராசிக்காரர்களுக்கு :
நிகழும் விளம்பி வருடம், மார்கழி மாதம் 17-ம் தேதி செவ்வாய்க்கிழமை, நள்ளிரவு 12 மணிக்கு
குரு பகவானின் ஆதிக்கத்தில் ஆங்கிலப் புத்தாண்டு (2019) பிறக்கிறது. எண் கணித ஜோதிடப்படி
2019ன் கூட்டுத்தொகை (2+0+1+9=12,1+2=3). குரு பகவானின் ஆதிக்கம் என்பதால், இந்த ஆண்டு
பணப்புழக்கம் அதிகரிக்கும். அந்த வகையில், மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த புது வருடம் எப்படி
இருக்கப் போகிறது என்று இங்கு பார்ப்போம்.
வீர உணர்வு கொண்ட மேஷ ராசிக்காரர்களே, 2019 தொடக்கத்தில் பொருளாதார நிலையில் சில
நெருக்கடிகள் வரும். இருந்தாலும் பிற்பகுதியில் வருமானத்துக்கு குறை இருக்காது.
எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம். தாய்,
தந்தையின் உடல்நலனிலும் கவனம் தேவை. தந்தையுடன் மன வருத்தம் ஏற்படும்.
வேலையில் இருப்பவர்களுக்கு அதிகமான வேலைப்பளு இருக்கும். புது வேலை தேடும்
நபர்களுக்கும் தடங்கல்களுக்கு பின் நல்ல வேலை அமையும். வெளியூர், வெளிநாடுகளின்
வேலைக்கான முயற்சிகள் வெற்றி பெரும். நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும்.
அரசியல், பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை ஏற்படும்.
விவசாயிகளுக்கு பயிர்கடன்கள் சற்று தாமதத்திற்கு பின் கிடைக்கும். கலைத்தொழிலில்
உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
குருபகவானின் அதிசாரம் இருப்பதால், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்கள் உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பிள்ளைகள் வழியில் ஒரு சில சங்கடங்கள் ஏற்படலாம். மாணவ – மாணவியர் கல்வியில் அக்கறை செலுத்தினால் சிறக்கலாம். மொத்தத்தில் இந்த புதுவருடம் மனதில் சலனத்தை ஏற்படுத்தினாலும், பின்பகுதியில், சாதிக்க வைக்கும்.
பணிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் ஏற்படும். கலைத்துறையினர் கிடைக்கும் வாய்ப்பை, பயன்படுத்திக்கொள்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் சில காலம் மந்த நிலையை அடைந்தாலும், பின் சிறந்து விளங்குவார்கள்.
வருடம் முழுவதும் சனி 7ல் கண்டகச் சனியாக இருப்பதால், கணவன் – மனைவிக்கிடையே சின்ன சின்ன பிரச்சனை ஏற்பட்டு சந்தேகத்தின் அடிப்படையில் பிரிவு ஏற்படும். பணப்பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். பொருள்கள் களவு போக நேரிடும். வாழ்க்கைத் துணைக்கு அடிக்கடி மருத்துவச்செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.
பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். நண்பர்கள் வீட்டு விஷேசங்களை முன்னின்று நடத்துவீர்கள். மொத்தத்தில் இந்த புது வருடம் உங்களது நீண்டகால விருப்பங்களை நிறைவேற்றுவதுடன் மன அமைதியைத் தருவதாகவும் இருக்கும்.










