கோவில்கள் எத்தனை விதமாக உள்ளது என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. கோவிலின் அமைவிடத்தை வைத்து அந்த கோவிலுக்கு என்ன பெயர் என்று பார்க்காலாம். கோவில்கள் 8 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.மலைகள் மீது அமைக்கப்படும் கோவில்கள், பெருங்கோவில் என்று அழைக்கப்படுகின்றன.
2.உயர்வான மேடைகளின் மீது அமைந்த ஆலயங்கள் மாடக்கோவில் என்று பெயர் கூறப்படும்.
3.தேர் போன்ற அமைப்பில் கட்டப்பட்ட கோவில்கள் கரக்கோவில் எனப்படுகின்றன.
4.கொடிகள் சூழ்ந்த நிலையில் அமைந்த கோவில்கள் கொகுடிக்கோவில் என்று அழைக்கப்படுகின்றது.
5.மரங்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுக்கு ஞாழற்கோவில் என்று பெயர்.
6.கோவில்களைப் பழுது பார்க்கும் போது பாலாலயம் அமைப்பது இளங்கோவில் எனப்படுகின்றன.
7.மணி போல விமானங்கள் அமையப்பெற்ற கோவில்கள் மணிக்கோவில் ஆகும்.
8.ஆல மரத்தின் அடியில் அமைக்கப்பட்ட ஆலயங்கள் ஆலக்கோவில் எனப்படுகிறது.
கோவிலின் அமைவிடத்தை வைத்து அதன் வகையினை தெரிந்து கொண்டு கோவிலுக்கு சென்று வருவது நல்லதாகும். கோவிலுக்கு பல பெயர் இருந்தாலும் இறைவன் அனைவருக்கும் ஒருவன் தான். நம்பியவரை கைவிடமாட்டார் நாளும் அவனை தொழுகையில்.
https://darkorange-dove-343949.hostingersite.com அனைத்து உறவுகளுக்கும் வணக்கம். நாம் “SiddharBhoomi ” என்ற தினசரி ஆன்மீக செய்திகள் தொடங்கியுள்ளோம்.இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு கொடுங்கள்..!உங்கள் நண்களுக்கு Forward செய்யுங்கள் சித்தர் அருள் கிடைக்கும்..! அதிகம் பகிருங்கள் – சித்தர் பூமி










