வாழ்க்கையில் சந்தோஷமாக பறப்பதற்கு – சுமைகளை குறை.
நம் மனதில் மற்றவர்கள் நமக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த தீமைகளை இறக்கி வைக்க எண்ணம் இல்லாமல் பெரும்பாலும் இன்றளவும் சேர்த்து வைத்துள்ளோம்
அந்த நினைவுகளில், எத்தனையோ, நம் மனதில் இன்று வரை இரணங்களாக இருக்கின்றன.
நமக்கு பிடிக்காததை நினைவுபடுத்தப்படும் போதெல்லாம், நாம் நிம்மதி இல்லாமல் தவிக்கிறோம்.
பிரபல ஆங்கில் தன்னம்பிக்கை எழுத்தாளர் டேல் கார்னகி கூறுவார்.
நம் எதிரிகளை மனதளவில் நாம் அதிகமாய் வெறுக்க வெறுக்க அவர்களுக்கு அதிக அதிகாரத்தை கொடுக்கிறோம்.
அவர்களால்
நாம் நம் தூக்கத்தையும் மகிழ்ச்சியையும் இழக்கிறோம்.
அவர்களால் நாம் எப்படி நிம்மதியின்றி தவிக்கிறோம் என்று மட்டும் அவர்களுக்குத் தெரிய வந்தால் ஆனந்த கூத்தாடுவார்கள்.
நமது வெறுப்பு அவர்களை ஒன்றும் செய்வதில்லை. மாறாக நமது நாட்களை அது நரகமாக்குகின்றது.”
அவர் கூறியதில் பெரிய உண்மை அடங்கி இருக்கிறது.
விழிப்புணர்வுக்கு ஒரு சிறுகதை.
ஒரு துறவி ஒரு நல்ல வெய்யிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு அறுந்து விட்டது.
தொடர்ந்து நடக்க முடியாதவராக, அருகே இருந்த செருப்பு தைப்பவரிடம் சென்று கொடுத்தார்.
அவரோ அந்த செருப்பை பார்த்து விட்டு “ஐயா நிறைய தைக்க வேண்டி இருக்கிறது.
நீங்கள் உங்கள் செருப்பை தந்து விட்டு மாலை வாருங்கள். அதற்குள் தைத்து வைக்கிறேன்” என்றார்.
துறவியோ அந்த செருப்பு தைப்பவரிடம் ஐயா இந்த வெய்யிலில் நான் எவ்வாறு நடந்து போவேன்? என்றார்.
அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி ” ஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்பு தருகிறேன். இதை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
மாலை வரும் போது இந்த செருப்பை தந்து விட்டு உங்கள் செருப்பை பெற்று செல்லுங்கள்” என்றார்.
ஒரு நொடி சிந்தித்த அந்த துறவி, என்னது வேறு இன்னொருவர் செருப்பை நான் அணிவதா? என்று சிந்தித்தார்
இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே.
இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், அவர் மீதான கோபத்தையும், பொறாமையையும் மனதில் இறக்கி வைக்காமல் தூக்கிச் சுமக்கிறோமே என்று.
குறைகளும் நிறைகளும் எல்லோரிடமும் இருக்கின்றன. எதைப் பெரிதுபடுத்துகிறோமே அவையே அதிகமாய் மனதில் தங்குகின்றன..
வாழ்வதுஒருமுறை.
அது குறைகளின் கணக்கு எடுப்பாக இருக்க வேண்டாம்.
கவலைகளின் தொகுப்பாக இருக்க வேண்டாம்.
தீயதை மறக்க கற்போம்.
நல்லதை நினைவில் வைப்போம்.
ஏனென்றால் நாம் சேர்ந்து பயணிக்க போவது சிறிது காலமே. வீணாக எதையும் சுமக்காதே.










