
சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!
உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.
சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும் என நம்புகிறோம். மேலும் சித்தர்கள் அருளிய மூலிகை மருத்துவக் குறிப்புகள், உடல் ஆரோக்கிய கட்டுரைகள், தியானம் மூலம் வாழ்வை வளமாக்கும் ரகசியங்கள், பிரபஞ்ச ரகசியம் சித்தர்கள் ஜீவ சமாதி ஆலயம் மற்றும் சித்தர்களின் வாழ்க்கை குறிப்பு, திருக்கோயில்கள் மற்றும் ஸ்தல வரலாறு, ஆன்மீக கதைகள், ஜோதிடம் என அனைத்து தகவல்களையும் அலசி, ஆராய்ந்து மக்கள் பயன்பெறும் வகையில், சித்தர்பூமி இணைய தளத்தில் தொகுத்து வழங்கும் பணியை,
இறைவன் எங்களுக்கு அளித்ததை பெரும்பாக்கியமாக கருதுகிறோம்.
நமது பாரத பூமியே சித்தர்கள் பூமிதான் என்றாலும், குறிப்பாக நம் தமிழகத்தில் தான் பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் வாழ்ந்த வரலாற்றுச் செய்திகளை நாம் அறியும் பொழுது நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
சாதாரண மனிதப்பிறவியால் இது சாத்தியமா! என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று அறிவியல் அறிஞர்களாலும் மருத்துவ வல்லுனர்களாலும் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்தையும் நம் முன்னோர்களான சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டுணர்ந்து, கண்டறிந்து சென்றுள்ளார்கள்.
“ஒன்றே குலம் ஒருவனே தேவன்
யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்ற கொள்கை கோட்பாட்டோடு மானுடம் மேம்பட ஆன்மீகத்தையும், உடல் ஆரோக்கியம் மேம்பட சித்த மருத்துவத்தையும், இந்த உடலுக்குள் இருக்கும் இறை பொருளான ஜீவாத்மா அந்த பரமாத்மாவோடு ஐக்கியமாக வழி முறைகளையும் நமக்காக அருளிச் சென்றுள்ளனர். இச்செய்திகள் அடங்கிய புத்தகங்கள் அனைத்தும், புத்தக நிலையங்களில் கிடைக்கும் என்றாலும் நம்மில் எத்தனை பேர் அவற்றை தேடிச் சென்று வாங்கி படிப்போம் என்று பார்த்தால்,
அவர்களின் சதவீதம் மிகமிகக் குறைவாகத் தான் உள்ளது. எனவே, இந்த அரிய பொக்கிஷங்களை சித்தர்பூமி இணைய தளம் வாயிலாக உங்கள் இல்லத்திற்கே கொண்டு வந்து சேர்ப்பதில் எங்கள் மனம் மகிழ்கிறது.
என்றும் இறைபணியில்
பா.சுதாகர், M.பூமான்
சித்தர் பூமி
மற்றும் இணைய தள குழுவினர்
+91-73050 18180


