பிரபஞ்ச சக்தியின் சத்தியமான வாழ்வியல் கோட்பாடுகள் வாழ்க்கை நெறி முறைகள் 🥝🍉🧿
🧿நம் சிந்தனைகளை செயலாக்கி முடிக்க இன்றே நல்ல நாள் என்று நினையுங்கள்.
🧿 போதிக்கும் போது கற்றுக் கொள்ளாத பாடத்தை பாதிக்கும் போது தான் கற்றுக் கொள்கிறோம்.
🧿 மனம் விட்டு பேசினால் தீராத பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. ஆனால், மனம் விட்டு பேசத் தான் யாருக்கும் மனம் வருவதில்லை.
🧿யாராவது உங்களை ஒதுக்கி வைத்தால் கவலை கொள்ளாதீர்கள். யார் உங்களை எந்த தூரத்தில் வைக்கிறார்களோ அந்த தூரத்தில் வாழ கற்றுக் கொள்ளுங்கள். அதனால் ஒரு நஷ்டமுமில்லை. உங்களோடு தான் இறைவன் இருக்கிறான்.
🧿ஆயிரம் தடவை சரியாக செய்திருந்தாலும் ஒரு தவறை வைத்தே எடை போடுவது மனித இயல்பு.
🧿நம்பிக்கை மற்றும் பொறுமை இருந்தால் வாழ்வில் ஒருவருக்கு அனைத்தும் கிடைக்கும்.
🧿கடந்து போகும் வாழ்க்கையில் நிலையானது அன்பு மட்டுமே. என்றும் அன்பின் பாதையில் செல்லுங்கள். அதுவே உங்களை இறைவனிடம் சேர்க்கும்.
🧿இரவுக்குப் பின் பகலை தருகின்ற இறைவன் குளிருக்கு பின் வெயிலைத் தருகின்ற இறைவன் நிச்சயம் ஒவ்வொரு துன்பதுக்கு பின் இன்பத்தையும் தருவான் என்று நம்புங்கள்.
🧿கற்றுக் கொள்ளும் மனம் இருந்தால் நீங்கள் முட்டாள்களிடம் இருந்து கூட பாடம் கற்க முடியும். அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் ஒருத்தரிடம் இருந்தும் எதையும் கற்க முடியாது.
🧿நாம் சிந்திக்கும் எண்ணங்கள் நல்லதாய் இருந்தால் வாழ்க்கையில் சந்திக்கும் சூழ்நிலை நன்கு அமையும்.
🧿இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்கவில்லையே என்று கவலைப் படாதீர்கள். நமக்கு உயிர் என்னும் பெரிய செல்வத்தைக் கொடுத்திருக்கிறான். அதைக் கொண்டு எதையும் சாதிக்கலாம்.
🧿 சில மோசமான நாட்களை போராடி கடந்தால் தான் பல சிறந்த நாட்களை காண முடியும்.
🧿யார் நமக்கு என்ன செய்தார்கள் என்று நினைப்பதை விட நம்மால் யாருக்கு என்ன செய்ய முடியும் என்று நினையுங்கள்.
🧿குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
🧿உங்களின் திறமையை பலர் கர்வமாக கூட நினைக்கலாம். மாற்றிக் கொள்ள வேண்டியது அவர்களின் பார்வையைத் தானே தவிர உங்கள் திறமையை அல்ல.
🧿இன்று கை கொடுக்க யாரும் இல்லை என்று வருந்தாதீர்கள். நாளை கை தட்ட உலகமே காத்திருக்கும், நீங்கள் முயற்சி செய்தால்.
நல்லதே நினை.
நல்லதே நடக்கும்.
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
மேலும். இது போன்ற அரிய தகவல்கள் தொடர்ந்து பெற்றிட நமது ஆன்மீக தகவல்கள் குழுவில் இனையுங்கள் . குழுவில் இனைய தொடர்பு கொள்ள : +91-7305018180











