உழவாரப் பணி ..உழவாரப் பணி என்று சொல்கிறார்களே. அப்படி என்றால் என்ன என்று சுருக்கமாக கீழே காண்போம்.இது நமக்கு நல்ல புரிதலைக் கொடுக்கும்.
ஆலயத்திற்குள் சென்றவுடன் இறைவன் நமக்கு தரும் அல்லது உணர்த்தும் பணியே உழவாரப்பணி.
அவையாவன:
1. பக்தர்கள் கோயிலில் போடும் குப்பைகளை, குப்பை கூடங்களில் போடுவது.
2. பக்தர்கள் இறைவன் அருள் வேண்டாம் என சொல்லி தூண்களில் திருநீறு போடுவதை சுத்தம் செய்வது.
3. திருக்கோயில்களில் சூழ்ந்திருக்கும் ஒட்டடைகள் அழுக்குகள் ஆகியவைகள் நீக்குவது.
4. சுவாயின் ஆடைகளை துவைப்பது.
5. அழுக்கு படிந்த விளக்குகளை தூய்மையாக்குவது.
6. நந்தவனத்தை தூய்மைப்படுத்துவது.
7. தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்தப்படுத்துவது.
8. கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றுவது.
9. சிவாச்சாரியார்களின் அனுமதி பெற்று திருக்கோயிலின் கொடிமரம் உற்சவ மூர்த்திகளை இயற்கை மூலிகை கொண்டு தூய்மைபடுத்துவது.
10. அறுபத்து மூவர் மற்றும் கல் திருமேனிகளுக்கு மாவு , தயிர் சாற்றி அதன்மீது படிந்திருக்கும் அழுக்குகளை நீக்குவது.
11. திருக்கோயில்களில் உள்ள மின்விளக்குகளை சரிசெய்வது.
12. வாரம் ஒரு முறை திருக்கோயிலை பசுஞ்சாணம் இட்டு மெழுகிடுவது.
13. திருக்கோயிலை சுற்றி கோலமிடுவது.
14. கோயிலில் படிந்திருக்கும் எண்ணை பிசுபிசுப்பை எடுப்பது.
15. கற்பூர புகையால் படிந்திருக்கும் கரும்புகைகளை துடைப்பது..
என்று சொல்லிக் கொண்டே போகலாம்.இங்கே சிலவற்றை மட்டும் தொட்டுக் காட்டி இருக்கின்றோம்.
இப்பணிகளை தினந்தோறும் செய்வோமானால் உடலும் , மனதும் வலிமை பெறும்.
இப்போது உழவாரப் பணி என்பது பற்றி சற்று புரிந்திருக்கும் என்று நம்புகின்றோம்.











