• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க?

siddharbhoomi by siddharbhoomi
October 30, 2022
in பொது
0
பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க?
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

பித்தக்கற்களை இயற்கையாகவே கரைக்க?

#உதவும்சிலஇயற்கை #வழிகளைக்_காண்போம்.

#ஆப்பிள்சீடர்வினிகர்

* 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
* இல்லாவிட்டால் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸில் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடிக்கலாம். இதனால் பித்தக்கற்கள் இயற்கையாக கரைந்து வெளியேறிவிடும்.

#ஆப்பிள்_ஜூஸ்

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் ஆப்பிள் ஜூஸை குடித்து வருவது நல்லது. அதுவும் தோல் நீக்காத ஆப்பிளை அரைத்து ஜூஸ் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி தினமும் ஒரு டம்ளர் குடித்து வர, வலிமிக்க பித்தக்கற்கள் இயற்கையாகவே வெளியேறிவிடும்.

#மஞ்சள்

1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால், பித்தக்கற்கள் மாயமாய் மறைந்துவிடும். இதற்கு மஞ்சள் மற்றும் தேனில் உள்ள மருத்துவ குணங்கள் தான் முக்கிய காரணமாகும். இதனை அனைவருமே பின்பற்றலாம். இதனால் பித்தப்பையின் ஆரோக்கியம் மேம்படும்.

#பால்_நெருஞ்சில்

ஒரு பாத்திரத்தில் 3 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் பால் நெருஞ்சில் விதைகளைத் தட்டிப் போட்டு, நன்கு 20 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் குடித்து வந்தால், பித்தப்பையில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.

#எலுமிச்சை_ஜூஸ்

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வாருங்கள். வேண்டுமானால் நாள் முழுவதும் எலுமிச்சை ஜூஸைக் குடித்து வரலாம். இதனால் வலிமிக்க பித்தப்பை கற்களை எளிதில் வெளியேற்றலாம்.

#கிரான்பெர்ரி_ஜூஸ்

பித்தக்கற்கள் இருப்பவர்கள் தினமும் கிரான்பெர்ரி ஜூஸை ஒரு டம்ளர் குடித்து வந்தால், பித்தக்கற்கள் மற்றும் பித்தப்பை பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். முக்கியமாக கிரான்பெர்ரி ஜூஸ் உடன் சிறிது நீர் கலந்து கொள்ளுங்கள். ஏனெனில் கிரான்பெர்ரி ஜூஸ் சற்று அதிக அமிலத்தன்மை வாய்ந்தவை.

தேங்காய் எண்ணெய்
3 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதில் 1/4 டம்ளர் ஆப்பிள் ஜூஸ், பாதி எலுமிச்சையின் சாறு, ஒரு சிறிய துண்டு இஞ்சி சேர்த்து இறக்கி, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தினமும் ஒருமுறை உட்கொள்ள வேண்டும். இதனால் பித்தப்பையில் உள்ள பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

விளக்கெண்ணெய்
ஒரு கப் விளக்கெண்ணெயை லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் ஒரு துணியை அந்த எண்ணெயில் நனைத்து பிழிந்து, வயிற்றின் வலது பக்கத்தில் வைத்து, ஒரு பிளாஸ்டிக் ஷீட்டால் சுற்றிக் கொள்ள வேண்டும். பின்பு சுடுநீர் கொண்டு அவ்விடத்தில் 30-40 நிமிடம் ஒத்தடம் கொடுங்கள். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்தால், பித்தக்கற்களில் இருந்து விடுபடலாம்.

#க்ரீன்_டீ

1 கப் சுடுநீரில் 2 டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு 5 நிமிடம் ஊற வைத்து வடிகட்டி தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடியுங்கள். இப்படி ஒரு நாளைக்கு 2-3 கப் என தினமும் குடித்து வந்தால், க்ரீன் டீயில் உள்ள பண்புகள் பித்தக்கற்களைத் தடுக்கும்.

#காபி

பித்தக்கற்கள் இருப்பவர்கள், தினமும் 2 கப் சூடாக காபி குடிப்பதன் மூலம், பித்தக்கற்களை அகற்றலாம். ஆய்வுகளில் கூட இது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காபியில் உள்ள காப்ஃபைன் பித்தப்பையை சுருங்கச் செய்து, பித்தக்கற்களை எளிதில் வெளியேற்றச் செய்கிறது.

#வைட்டமின்சிஉணவுகள்

வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு மட்டும் நல்லதல்ல, பித்தப்பை கற்கள் உருவாவதையும் தடுக்கும். ஒருவரது உடலில் போதிய அளவில் வைட்டமின் சி இருந்தால், கொலஸ்ட்ரால் உற்பத்தி குறைந்து, பித்தக்கற்கள் உருவாகும் வாய்ப்பு குறையும். எனவே வைட்டமின் சி நிறைந்த உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, பப்பாளி, மாம்பழம், கொய்யா போன்றவற்றை உட்கொள்ளுங்கள்.

#டேன்டேலியன்

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் 1 டேபிள் ஸ்பூன் உலர்ந்த டேன்டேலியன் வேரை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி தேன் கலந்து குடித்து வாருங்கள். இந்த டீயை ஒருவர் தினமும் 2 முறை குடித்து வந்தால், பித்தப்பை கற்கள் இயற்கையாக வெளியேறிவிடும். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள், இந்த டீயைக் குடிக்கும் முன் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வது நல்லது.

#பீட்ரூட்

பீட்ரூட்டை சிறு துண்டுகளாக்கி, மிக்ஸியில் போட்டு சிறிது நீர் சேர்த்து அரைத்து ஜூஸ் தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பீட்ரூட் ஜூஸை தினமும் ஒரு கப் குடித்து வந்தால், பித்தப்பை கற்களில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

#முள்ளங்கி

முள்ளங்கியின் தோலை நீக்கிவிட்டு துண்டுகளாக்கி, மிக்ஸியில் சிறிது போட்டு நீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். பின் இந்த ஜூஸை 2 டேபிள் ஸ்பூன் உட்கொள்ள வேண்டும். இந்த ஜூஸை பெரிய அளவிலான பித்தக்கல் கொண்டவர்கள் தினமும் 5-6 டேபிள் ஸ்பூன் குடித்து வருவதன் மூலம், பித்தக்கற்களை கரைத்து வெளியேற்றலாம். சிறிய அளவிலான கற்களைக் கொண்டவர்கள், 1-2 டேபிள் ஸ்பூன் குடிப்பது நல்லது.

#புதினா

ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி, அதில் சிறிது புதினா இலைகளைப் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, பின் வடிகட்டி தேன் கலந்து குடியுங்கள். இந்த டீயை உணவு இடைவேளையின் போது குடிப்பது நல்லது. ஒருவர் தினமும் புதினா டீயைக் குடித்து வந்தால், பித்தப்பை சம்பந்தமான பிரச்சனைகள் முற்றிலும் அகலும்.

#பேரிக்காய்_ஜூஸ்

1/2 டம்ளர் பேரிக்காய் ஜூஸ் உடன், 1/2 டம்ளர் சுடுநீர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை குடித்து வந்தால், பித்தக்கற்கள் வளர்வதைத் தடுக்கலாம். குறிப்பாக பேரிக்காயில் உள்ள பெக்டின் கொலஸ்ட்ராலைக் கரைப்பதோடு, கொலஸ்ட்ரால் கற்கள் உருவாவதைத் தடுக்கும்.

Previous Post

கந்தசஷ்டி சூரசம்ஹாரம் கொண்டாடப்படுவது ஏன்?

Next Post

முருகப்பெருமான் திருக்கல்யாணம்..!

Next Post
முருகப்பெருமான் திருக்கல்யாணம்..!

முருகப்பெருமான் திருக்கல்யாணம்..!

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

ஸ்ரீ வராஹி ஹோமம் & எலுமிச்சை தீப வழிபாடு

March 4, 2026
சூரிய பகவான் – தெய்வீக மகிமை

சூரிய பகவான் – தெய்வீக மகிமை

March 3, 2026
நாளை சந்திர கிரகணம்

நாளை சந்திர கிரகணம்

March 2, 2026
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »