உயர்ந்த நிலைக்கு வர என்ன கிரஹ அமைப்புகள் ஜாதகத்தில் அமைய வேண்டும் ?
ஒருவர் வேலை அல்லது உத்தியோ கத்தில் உயர்ந்த நிலைக்கு செல்
வாரா என்பதை கீழ்கண்ட கிரஹ அமைப்புகளை வைத்து அறிந்து
கொள்ளலாம் .
1.லக்கினத்தில் இருந்து 10ம் இடம்
2.10ம் இடத்தில் இருக்கும் கிரகம்
3.10இடத்தில இருக்கும் கிரஹத் தோடு இணைந்துள்ள கிரகம்
4.ஜீவனஸ்தானமான 10ம் இடத்தை பார்வை இடும் கிரகம்
5.10ம் வீட்டின் அதிபதியான கிரகம்
6.10ம் இடத்தை பார்வையிடும் கிரகம் – 4ம் வீட்டில் அமர்ந்த கிரகம் 10
இடத்தை பார்வையிடும் – 4இடத்தில அமர்ந்த கிரகம் சுபரா அல்லது
பாவியா ?
7.10ம் அதிபதியை பார்வை இடும் கிரகம்
8.10ம் வீட்டில் அமர்ந்த கிரகம் பெற்ற சாரம்
10ம் அதிபதி ஆட்சி , உச்சம் , மூல திரிகோணம் , திக்பலம்
இதேபோல் எந்த லக்னமாக இருந் தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம்
அதிபதி ஆட்சி , உச்சம் , மூல திரிகோணம் , திக்பலம் பெற்றால்
போதும்.ஜாதகர் தனது கடைசிக் காலம் வரை உட்கார்ந்து சாப்பிடுவார்.
கஷ்டமில்லை.பெரிய பதவிக ள் பொறுப்புகள் அவரைத் தேடி வந்து
கொண்டிருக்கும்.
சூரியன் லக்னத்திற்கு பத்தில் இருந்தால் திக் பலம்
பத்தாம் வீட்டில் சூரியன் பலமாக இருந்தால் பல சாதனை படைக்கு ம்
அமைப்பு , அதிகம் சம்பாதிக் கூடிய யோகம் அமையப்பெறும். நல்ல
நிர்வாக திறனம் அமையப் பெறும்.
முக்கியமாக மூளை நன் றாக வேலை செய்யும். சூரியனு டன் ராகு கேது
சனி கிரகங்கள் சம்பந்தம் பெறாமல் இருப்பது யோகத்தை அதிகரிக்க
செய்யும் .
10ல் குரு குரு ஒரு சுபக் கிரகம். அவர் 10-ம் வீட்டில் இருந்தால்
புகழையும், பதவியையும் கொடுப்பார். குரு வானவர் உயர்ந்த பதவியைக்
கொடுப்பார். இவருக்குப் பாவரின் சேர்க்கையோ அல்லது பார்வை யோ
இருப்பின் மிகச் சாதாரண பதவியிலேயே இருப்பார்
தசம அங்காரஹா
செவ்வாய் பத்தாமிடத்தில் ஆட்சி பெறுவதை விட அங்கே திக்பலம்
பெறுவதே நல்லது. இதைத்தான் நமது ஜாதக நூல்கள் “தசம
அங்காரஹா” என்று கூறுகின்றன .துலா லக்கினத்திற்கு 10ம் இடமான
கடகத்தில் நீசம் பெற்றாலும் செவ்வாய் அங்கே தன் திக்பலத்தால்
உயர்தர யோகத்தை தருவார்
10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் மற்றும் திக் பலம் – நன்மை தருமா ?
10ல் செவ்வாய் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலுவினைப் பெற்று
திக்பலமும் பெறுவது நல்ல நிலை அல்ல. இதுபோன்ற அமைப்பில் அவர்
சந்திரனுடனோ, குருவுடனோ தொடர்பு கொள்ளும்போது மட்டு மே
நன்மைகள் இருக்கும்.
10ல் செவ்வாய் திக்பலம் நிர்வாக காரகனான செவ்வாய் 10-ல்
அமைந்தால் திக்பலம் பெறுவார். அந்த ஜாதகர் சிறந்த நிர்வாகத்
திறமையுடனிருப்பது மட்டுமின்றி, தன்னுடைய திறமையால் செய்யும்
பணியில் படிப்படியாக உயர்ந்து சமுதயாத்தில் ஓர் உன்னதமான
உயர்வினைப் பெறுவார்.
சுபகிரக மான குருவின் பார்வையானது செவ்வாய்க்கோ, 10-ஆம் வீட்டிற்
கோ இருக்குமேயானால் நல்ல உத்தியோகம், கௌரவமான பதவிகள்
மூலம் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டாகும் அல்லது செய்யும் தொழில்
மேன்மை அடைவர்.
பலம் பெற்ற செவ்வாய்
நவகிரகங்களில் உத்தியோக கார கன் செவ்வாயாவார்.
செவ்வாய் பலம்பெற்றிருந்தால் நல்ல நிர்வா கத் திறமை, எந்தவொரு
காரியத்தி லும் திறம்பட செயல்பட்டு தீர்க்க மான முடிவெடுக்கும்
ஆற்றல் இருக்கும். சொத்து, சுகம், புகழ் என அனைத்துமே ஜாதகருக்கு
கிடைக்கப்பெறும்.
வேலையில் உயர்ந்த நிலைக்கு செல்ல ஜாதகத்தில் 5ம் அதிபதி
வலுப்பெற வேண்டும்
ஜாதகத்தில் 5ம் இடம் / 5ம் அதிபதி வலுவாக இருக்க வேண்டும். இந்த
ஐந்தாம் கட்ட அதிபதி கெட்டு போகாமல் இருந்தால் நன்கு பலம் பெற்று
இருந்தால் நல்லவர்கள் சம்பந்தம் பெற்று இருந்தால் அப்படிப்பட்ட
ஜாதகர்களைத்தான் நாம் பூர்வ ஜென்ம புண்ணிய யோகம் பெற்றவர்கள்
என்று சொல்கிறோம்.
வேலை அல்லது உத்யோகத்தில் முன்னேற்றம் பெற ஜாதகத்தில்
லக்கினாதிபதி வலு பெற வேண்டும்
ஒருவனின் உத்தியோகம் சம்மந் தம்பட்ட விஷயங்கள் வலிமையாக
அமைய ஜாதகனின் ஜென்ம லக்ன ம் வலிமை வாய்ந்ததாக அமைய
வேண்டும். எந்த ஒரு யோகமும் லக்னம், லக்ன அதிபதியோடு
சம்பந்தப்படும் போது மட்டுமே அந்த யோகம் முழு யோகத்தை தரும்.
லக்னம் எந்தளவுக்கு வலுத்திருக்கிறதோ அந்தளவுக்கு ஜாதகனது
உயர்வு இருக்கும்.










