நெரூரில் சமாதி கொண்ட சித்தர் சதாசிவ பிரம்மேந்திரர். இவரைப் பற்றி ..
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு நெரூர் வந்து சேர்ந்தர் சதாசிவ பிரம்மேந்திரர் ..
தனது சீடர்களான புதுக்கோட்டை மகாராஜா, மைசூர் மகாராஜா, தஞ்சாவூர் மகா ராஜா ஆகியோரை அழைத்து “இங்கு குகை அமையுங்கள். நான் உட்கார்ந்ததும் விபூதி, உப்பு, மஞ்சள் தூள், செங்கற்பொடி போட்டு மூடி விடுங்கள்.
ஒன்பதாம் நாள் சிரசின் மேல் வில்வ விருட்சம் தோன்றும். பன்னிரெண்டாம் நாள் காசி யிலிருந்து ஒருவர் சிவ லிங்கம் கொண்டு வருவார். அதை வைத்து கோயில் எழுப்புங்கள்.
இந்த வில்வ விருட்சத்திற்கு எந்த மறைப்பும் வேண்டாம். மேடை போட்டு விடுங்கள்” என்று அருளினார் . அதே போல் செய்தார்கள்
>> கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்த நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிறுவயது முதலே அறிவுக் கொழுந்தாக விளங்கியவர்..
சிறு வயதில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந் திராளின் இயற் பெயர் “சிவராமன்” லௌகீக வாழ்வை வெறுத்து கும்ப கோணம் மடத்தில் தம்முடைய குரு அப்போதைய காஞ்சி காம கோடி பீடாதிபாதியாக இருந்த பரம சிவேந்திர சரஸ்வதியை சந்திக்கிறார் …
குருவின் திரு வடியில் சரண் அடைந்த சிவ ராமனுக்கு ஞான குரு மந்திர உபதேசம் செய்தார் ..
சிவராமனின் மன உறுதியையும் பக்குவ நிலை அடைந்து விட்டதை குரு அறிந்து “” *சதாசிவன்* ”” என்ற புதிய திருநாமம் வழங்கினார் .
மேலும் பிரம்ம சூத்திரம் விளக்கும் ‘’ தத்துவமசி ’’ என்ற நிலையை யோக நிஷ்டையில் அனுபவித்தார்
>> மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் திருமூலர் கடை பிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழி முறைகள் மற்றும் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளை எல்லாம் சுய அனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் ஆவார்..
>> வேதாந்த சித்தாந்தங்களுக்கெல்லாம் மணி மகுடமாக திகழும் மூன்று மகா வாக்கியங்கள்
1.தத்துவ மசி ..
2.அகம் பிரம்மாஸ்மி 3.சர்வம் பிரம்ம மயம் –
இந்த யோக நிஷ்டையின் உயர்ந்த மூன்று நிலைகளில் சதாசிவ பிரம்மேந் திராள் தேர்ந்தெ டுத்த வழிமுறை என்பது சர்வம் பிரம்ம மயம் என்ற வழிமுறை ஆகும் …
>> தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் பிரதிஷ்டை செய்தவர் இந்த சதாசிவ பிரம்மேந்திரர் .
இவர் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பேசப் படுகின்றன..
கொடுமுடிக்கருகில் ஆற்றுக்கிடையே இருந்த அகத்தியம் பாறை எனும் இடத்தில் சதாசிவ பிரம்மேந்திரர் தவத்தில் இருந்தார்.
அப்படியொரு நாள் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சதாசிவ பிரம்மேந்திரரை ஆற்று வெள்ளம் பெருக்கெடுத்து அவரை அடித்துச் சென்றுவிட்டது .
தேடிப் பார்த்தும் அவர் கிடைக்க வில்லை என்றதும், மக்களும் சோர்ந்து போய் தேடுதலை விட்டுவிட்டார்கள். மறந்தும் விட்டார்கள்.
சில காலம் ஆன பின்பு ஆற்றில் மணல் அள்ள மாட்டு வண்டிகள் வந்த வண்ணம் இருந்தன..
சற்று ஆழத் தோண்டிய ஒரு இடத்தில் மணல் எடுத்தவன் ஓங்கி மண்வெட்டியால் வெட்டியபோது, மணல் அல்லாத ஏதோவொரு பொருளின் மீது மண்வெட்டி பட்டதை உணர்ந்தான்.
உடனே அந்த இடத்தை சர்வ ஜாக்கிரதையாக தோண்டி மணலை விலக்கிப் பார்த்தான்.
அங்கு ஒரு மனிதரின் தலை. அதில் மண் வெட்டியின் வெட்டுப் பட்டு குருதி கசிந்தது.
சுற்றிலும் இருந்த மணலை விலக்கி அந்த மனிதரை வெளியே எடுத்தனர். ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட பாறையின் மீது யோகத்தில் ஆழ்ந்திருந்த சதாசிவ பிரம்மேந்திரர்தான் அவர்.
இத்தனை நாள் மணலுக்கடியில் தன்னுணர்வு இன்றி சதா சிவ தியானத்தில் ஆழ்நிலையில் உறைந்திருந் திருக்கிறார்.
பரப்பிரம்மமான ஞானி ஒருவர் மணலுக்கடியில் யோக நிலையில் இருந்தவர் தலையில் மண் வெட்டி பட்டு இரத்தம் கசிகிறது,
அந்த ஞானி உயிருடன் தான் இருக்கிறார் எனும் செய்தி ஊருக்குள் தெரிந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து பார்த்தனர்.
>> அதே போல …வைக்கோல் போர்வைக்குள் பல காலம் யோக நிஷ்டையில் இருந்து இருக்கிறார் ..
>> ஒருமுறை குறுநில நவாப் ஒருவன் தன்னுடைய நகரத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் உடம்பில் எந்த ஆடையும் இன்றி நிர்வாண கோலத்தில் யாரையும் லட்சியம் செய்யாமல் உலவி வரும் காட்சியை கண்டான்..
இதன் காரணத்தை அறிய வேண்டி பக்கத்தில் நிற்கும் படி உத்தரவும் இட்டான் ..சர்வ காலமும் பிரம்ம நிஷ்டையில் இருந்த சதாசிவ பிரம்மேந் திராளின் செவிகளில் அவன் கட்டளை விழவில்லை ..
இதனால் கோபமுற்ற நவாப் அவமானம் அடைந்ததாக கருதி தன் வாளை உருவி ஒரு கையை வெட்டி வீழ்த்த …….
கை துண்டாக தரையில் விழுந்தது …
ஆனால் இதை எல்லாம் சிறிதும் அலட்சியம் செய்யாமல் பிரம்மேந்திராள் வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தார்..
பின்பு இவர் பெரிய மகான் என்பதை உணர்ந்த நவாப் வெட்டுண்ட கையை எடுத்து கொண்டு அவர் பின் ஓடிச் சென்று மன்னிப்பு கோர கையை வாங்கி தனது தொள்பட்டையில் வைக்க கை ஒட்டிக் கொண்டதாம் …
>> இவர் மூன்று இடங்களில் ஜீவசமாதி கொண்டுள்ளார்
1.ஸ்தூல சரீரத்தை கரூர்க்கு 7 கிலோ மிட்டர் தொலைவில் நெரூர் எனும் இடத்திலும் ..
- சூட்சும சரீரத்தை மானா மதுரையிலும்,
3.காரண சரீரத்தை தற்போது பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் என மூன்று இடங்களில் சமாதி கொண்டுள்ளார் ..
>> இங்கே படத்தில் காண்பது கரூர் அருகே உள்ள நெரூர் ஜீவசமாதி மிகவும் அருமையாக இருந்தது .
கரூரில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .நெரூர் “”சதா சிவம் கோவில்””என்றே பேருந்து வசதி உள்ளது .
ஒருமுறை சென்று வாருங்கள் ..மிகவும் அருமையாக உள்ளது …
>> நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்-
அவர்களை ஆராதனை செய்து முக்தி பெற்ற அடியாரின் சமாதி அருகில் இருக்கும் ஆசிரமத்தில் உள்ளது…
மானஸ சஞ்சர ரே என்ற இனிய எளிய கர்நாடக இசைப் பாடலை நம்மில் பலர் கேட்டிருப் போம். இதனை இயற்றியவர் சதாசிவ பிரம்மேந்திரர் தான் ..









