இந்துஸ்தானில் அந்நிய ஆட்சிகள் வரும் வரை தொழிலாளர் நலம், உழைப்பவன் நலம் உச்சத்தில் இருந்தது, மிலேச்சர் ஆட்சியிலேதான் அடிமைமுறை, அடக்குமுறை, சுரண்டல் என எல்லா தொழிலாளர் விரோதமும் அறிமுகமானது.
ஆனால் வரலாற்றில் மானிடரை மானிடராக அடிமைபடுத்தாத மதம் இந்துமதம், 1674ல் வீரசிவாஜி அமைத்த இந்துராஜ்ஜியத்தில் அடிமை முறை இல்லை, தடை செய்யபட்டது
இந்திய இந்துமண்ணில் அடிமைமுறை எக்காலமும் இல்லை, தொழிலாளர் நலமே முக்கியம் என மீட்டெடுத்தவன் வீரசிவாஜி
சென்னை ஜார்ஜ் கோட்டை வரை வந்து அவன் அந்த கொடுமையினை தடை செய்தான்
மனிதனை மனிதன் விலை கொடுத்து ஆடுமாடுகளை பொல விற்பதும் வாங்குவதும் இந்துமதத்தில் இல்லை என கண்டித்து தடை செய்யபட்டது
வீரசிவாஜியின் இந்த முடிவுதான் அடுத்த 200 ஆண்டுகளில் அடிமை முறையினையே உலகில் இருந்து ஒழித்தது
இந்துமதம் உலகிற்கு எக்காலமும் வழிகாட்டிய மதம், மனிதனை மனிதனாக மதிக்க சொன்னமதம்
ஆம், அவன் இந்து மன்னனாக அதை செய்தான், இந்துக்கள் சொன்ன தொழிலாளர் நலம் அப்படியானது
இந்த உலகில் அடிமை முறை இல்லா ஒரே சமூகமாக அன்று இருந்த சமூகம் இந்துமத சமூகம், இந்த மதம் ஒன்றுதான் அடிமை என தொழிலாளியினை வைக்காமல் அவனுக்குரிய உரிமை எல்லாம் கொடுத்து அவனை வாழ்வாங்கு வாழவைத்தது
உழைப்பவனை அடிமை என்றும், வாய்பேசும் மாடு என்றும் பல மதங்கள் வைத்திருந்த காலத்தில், தொழிலாளியே உலகின் இயக்கம், அவனே இந்த சமூகத்தினை இயக்குபவன், அவனே சூத்ரதாரி என அவனை சூத்திரன் அதாவது இயக்குபவன் என பெரும் இடம் கொடுத்தது இந்துமதமே
அது உழைப்பவன் தெய்வம், அவனுக்கு மந்திரம் வேண்டாம் வழிபாடு வேண்டாம் அவனும் சூரியனும் ஒன்று என பெரிய இடத்தில் வைத்திருந்தது
இந்து புராணங்களை கவனித்தால் தவம் செய்த முனிகள் ரிஷிகளை விட தெய்வங்களின் அன்பும் தரிசனமும் உழைப்பாளிகளுக்கே கிடைத்ததை காணமுடியும்
இந்துமத தெய்வங்களே வந்து மாடுமேய்த்தன, உழவு செய்தன, படகோட்டியினை கொண்டாடின, தொழிலாளியின் உரிமை சந்தேகத்துக்காக தன் மனைவியினையே தீயில் இறக்கின
தெய்வங்களே வந்து மீணவன், விறகுவெட்டி என எல்லா தொழிலையும் செய்து உழைப்பினை மேன்மைபடுத்தின
அப்படி ஒரு உன்னதமான மதம் இந்துதம், அதன் வடிவமே உழைப்பாளிகளை கொண்டாடுவதும் உயர்த்துவதும் போற்றுவதுமகவே இருந்தது
தொழிலாளர் நலத்தை பற்றி யோசித்ததிலும் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்ததிலும் இந்துமதம் உன்னதமான இடத்தில் இருந்தது
கண்ணனை அது ஆடுமேய்ப்பனவாக காட்டிற்று, பலராம அவதாரத்தை உழவனாக காட்டிற்று
தொழிலாளரின் சிரமம் புரியவும் தொழிலின் அருமை சொல்லவும் சிவனே விறகுவெட்டியாகவும், மீனவணாகவும் இன்னும் பல தொழில்கள் செய்பவனாகவும் அது திருவிளையாடலில் சொல்லிற்று
தொழிலாளரை வல்லான் அடித்தால் அவனை இறைவன் அடிப்பான் என்பதை சொல்ல ஒரு நாடகமும் நடத்திற்று
அன்று அந்த வைகை மதுரையில் கரைபுரண்டு ஓடிகொண்டிருந்தது, ஆடிமாதத்தில் அந்நதி பிரவாகமாய் பொங்குவது வழமை
அந்த ஆற்றின் குறுக்கே அணையெல்லாம் கட்டாமல் ஆற்றையே கண்மாய்களுக்குள் பாயசெய்யும் பிரமாண்ட திட்டத்தை பாண்டிய மன்னன் அரிவர்த்தன பாண்டியன் முன்னெடுத்திருந்தான்
அது மிக மகத்தான திட்டம், வைகை வற்றா நதி அல்ல. அதனால் மழைகாலத்தில் பெருக்கெடுக்கும் நதியினை பல நூறு கண்மாய்களில் தேக்கி வைத்து விவசாயத்தை பெருக்கும் பெரும் திட்டம் அது, தேனி தொடங்கி ராமநாதபுரம் வரை நீண்ட மிகபெரிய கனவு அது
அந்த திட்டத்துக்கு எல்லா குடிகளும் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் என சட்டமும் இயற்றினான், வயது வித்தியாசமின்றி எல்லோரும் வந்து வேலை செய்தாக வேண்டும்
மதுரையில் எல்லா குடிகளும் அந்த பணியினை செய்ய கட்டாயபடுத்தபட்டபொழுது “வந்தி” எனும் மூதாட்டியும் அதற்கு தப்பமுடியாமல் போனது, அவளோ பிட்டு செய்து விற்பவள்
அன்றாடம் பிட்டு செய்து முதல் பிட்டை சோமநாதபெருமானுக்கு படைத்துவிட்டு விற்க செல்பவள், அரசனின் கட்டாய சேவை அவளையும் விடவில்லை, மழைகாலம் வேறு நெருங்கிகொண்டிருந்தது
இதனால் அவளும் நிர்பந்திக்கபட்டாள், அந்த வயதான காலத்தில் மண் சுமந்து செல்ல கட்டாயபடுத்தபட்டாள், முதுமையாலும் வெயிலாலும் அவளால் முடியவில்லை எனினும் சேவர்களின் மிரட்டலில் அவளுக்கும் வேறுவழி தெரியவில்லை
ஒரு நாள் வழக்கம் போல் பிட்டை அவித்து முதல் பிட்டை சிவனுக்கு படைத்துவிட்டு குறிப்பிட நேர பணிக்கு ஆற்றங்கரைக்கு வந்தாள், மண் சுமக்க அவளால் முடியாமல் சோமநாத பெருமானே என கதறியபடி விழுந்தாள்
அந்நேரம் ஒரு சிறுவன் வந்தான், பொன்னிற மேனியும் கலைமிகுந்த முகமும் கொண்ட அவன் “ஏன் பாட்டி சிரமபடுகின்றாய், உனக்காக நான் மண் சுமக்கட்டுமா? எனக்கு என்ன தருவாய்” என்றான்
“ஏழையான என்னிடம் பிட்டு தவிர என்னய்யா உண்டு?” என்றாள் பாட்டி. “சரி நான் உனக்காக மண் சுமப்பேன் நீ எனக்கு பிட்டு தரவேண்டும்” என்றான் சிறுவன்
ஓடிவந்த சேவகர்கள் அவனை விசாரித்தார்கள், தான் கடைகோடி கிராமத்தான் எனவும் இப்பாட்டிக்கு பதிலாக வேலையினை ஏற்றுகொள்வதாகவும் கூறினான், சேவகர்கள் விட்டுவிட்டார்கள்
அரச கட்டளைபடி உழைப்பதும் பாட்டியிடம் அவன் புட்டு வாங்குவதுமாக சில நாள் கடந்தது
காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை இடைவிடாமல் கொடுக்கபட்ட உழைப்பு அது, உண்பது தவிர மாடுகளை போல் மக்கள் உழைத்து கொண்டே இருக்கவேண்டும்
அந்த தொழிலாளர் பட்ட கொடுமை கொஞ்சமல்ல, கொஞ்சம் சுணங்கினாலோ ஓய்வு தேடினாலோ பிரம்பும் சாட்டையும் முதுகில் பாயும்
ஓய்வு ஒழிச்சலே இல்லா கொடும் தொழிலாளர் துயரம் அது
அந்த கொடுமையில் அன்று அந்த சிறுவன் மதியத்துக்கு பின் கொஞ்சம் கண்ணயர்ந்துவிட்டான்
அந்நேரம் அங்குவந்த அரிமர்த்தன பாண்டியன், ஆத்திரமுற்றான். எவ்வளவு பெரிய அரசன் நான், இந்நாட்டை முன்னேற்ற எவ்வளவு பெரிய திட்டம் வைத்திருக்கின்றேன், இவன் அதை அறியாமல் தூங்குகின்றான் இவனை தொடர்ந்து எல்லோரும் ஓய்வுகேட்டால் என்னாகும் என ஆத்திரத்தில் பிரம்பை எடுத்து கொண்டு ஓடினான்
ஓடியவன் அந்த சிறுவனை எழுப்பி “ஏன் உறங்கினாய்?” என மிரட்டினான்
“ஒரு தொழிலாளிக்கு ஓய்வு இல்லாவிட்டால் எப்படி?
தேவர்களுக்கே ஓய்வு காலம் உண்டு, சூரியன் கூட இரவில் உறங்கும், வரமருளும் தெய்வம் கூட ஓய்வில் திரையிட்டு மறைக்கபடும், ஆனால் தொழிலாளர் நிலை என்ன? பாவம் அல்லவா?
ஆனால் இதை எல்லாம் சிந்திக்கும் திறம் உம்மிடம் இல்லை, அதுவும் உணவும் இங்கு சரியில்லை, மக்களை வேலை வாங்க வேண்டியதுதான் , சோம்பேறிகள் இருக்கும் தேசம் உருப்படாது, அதே நேரம் மக்களை கசக்கி பிழிபவன் நல்ல அரசனாகவும் இருக்கமுடியாது
ஏன் இந்த திட்டத்தை முன்பே செய்யமுடியாதா? இல்லை அடுத்தவருடம் மழையே வராதா? அரசனின் தெய்வத்துக்கு சமமானவன், அவனே மக்களை வதைத்தால் எப்படி?
நான் ஓய்வெடுத்துவிட்டுத்தான் வருவேன், நாங்கள் இல்லாவிட்டால் அரசனே இல்லை” என சொல்லி முதுகை காட்டி படுத்துகொண்டான்
ஆத்திரமுற்ற மன்னன் “எனக்கே அறிவுரை சொல்கின்றாயா?” என ஓங்கி அவன் முதுகில் பிரமால் அடித்தான்
அந்த அடி உலகின் எல்லா உயிர்கள் மேலும் விழுந்தது, அரசன் மேலும் விழுந்தது. அந்த சிறுவன் புன்னகை பூக்க பெரும் சிரிப்பு சிரித்தபடி மறைந்து போனான்
வந்தியிடம் விசாரித்தால் அவள் அனுதினமும் சிவனுக்கு பிட்டு வைத்ததும், அந்த பிட்டினைத்தான் கேட்டு இவனும் வந்தது தெரிந்தது
மன்னன் அங்கேயே தெண்டனிட்டு சிவனை வணங்கினான்
தொழிலாளர்கள் நிலை அவனுக்கு புரிந்தது, தான் செய்த தவறும் தெரிந்தது, சிவனே வந்து தன் கண்ணை திறந்ததை உணர்ந்தான்
அந்த சிறுவன் மேல் விழுந்த அடி எல்லா உயிர்கள் மேலும் விழுந்ததை எண்ணினான், இந்த உலகமே தொழிலாளர்களால் நிறைந்தது, உலக இயக்கமே தொழிலாளர்களால் ஆனது என்பது புரிந்தது
அதுவரை பாண்டிய நாட்டு தொழிலாளர் கண்ட துயரம் அன்றோடு தீர்ந்தது, அன்று ஆவணிமாத மூல நட்சத்திரமாய் இருந்தது
அந்த நாளை அன்றே தன் தேசத்து மக்களின் விடுமுறை தினமாக அறிவித்தான், அன்று எல்லா தொழிலாளருக்கும் மன்னன் பரிசும் உடையும் வழங்குவான்
அன்று முழுக்க அவர்கள் கொண்டாட்ட நாளாயிற்று
அன்று வைகை கரையில் தங்க மண்வெட்டியும் தங்க கூடையில் கொண்டு அவனே ஆற்றங்கரையில் மண் சுமப்பான், அந்த வழமை இன்றுவரை அங்கு கொண்டாடபடுகின்றது
ஆம், உலகில் முதன் முதலாக தொழிலாளர் தினத்தை கொண்டாடியவன் தமிழக இந்து, அதை ஏற்படுத்தி கொடுத்தது மதுரை சொக்கநாதர், தானே வந்து தன் திருவிளையாடல் மூலம் மீட்டு கொடுத்தார்
மேற்குலகம் இன்று மேதினம் தொழிலாளர் தினம் என சொல்லட்டும், உண்மையான இந்துவுக்கு அது ஆவணி மாத மூல நட்சத்திர தினமே
சில நூறு வருடங்கள் கூட மேற்குலகம் கொண்டிராத மேதின வரலாற்றினை விட பல்லாயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழக இந்து கொண்டாடிய உழைப்பாளர் தினம் அர்த்தமும் ஆழந்த தத்துவமும் கொண்டது
அடிமை முறையினை முதலில் ஒழித்தது ஆப்ரஹாம் லிங்கன் அல்ல, தொழிலாளர் நலனை முதலில் சொன்னது கம்யூனிஸ்டுகளும் அல்ல
இவற்றை முதன் முதலில் சொன்னது இந்துமதம், அடிமைமுறையினை முதலில் தடை செய்த்வன் இந்துமன்னன் வீரசிவாஜி
அப்படியான மண்ணில் கம்யூனிஸ்டுகள் சாதனை, தொழிலாளர் நலம் , தொழிலாளர் தினம் என பிதற்றுவதெல்லாம் அறியாமை, இந்துக்கள் தங்கள் பாரம்பரிய பெருமையினை ஞானத்தை இழந்துவிட்ட பரிதாபம்
தன் பாரம்பரியம், தன் பெருமை, தன் ஞானம் அறம் அறிந்த இந்து இதையெல்லாம் எளிதாக கடப்பான், எல்லா மானுட நலமும் கொண்டாட்டமும் உரிமையும் என்றோ இந்துமதம் சொன்ன அறமும் தர்மமாகத்தான் இருக்கும், எல்லா மானுட நேய சித்தாந்தங்களும் இந்துமதத்தில்தான் தோன்றும் அங்கேதான் முடியும்










