தந்த்ரா உலகம் – தந்த்ரா ரகசியங்கள்
சில ஆரம்பகட்ட விளக்கங்கள்.
முதலில் விஞ்ஞான பைரவ் தந்திராவின் உலகம் அறிவுபூர்வமானது அல்ல. அது தத்துவ ரீதியானதும் அல்ல. அதைப் பொருத்தவரை
தத்துவார்த்தமான முடிவுகள் அர்த்த மற்றவை.
அது முறையின் மீதும் டெக்னிக் மீதும் அக்கறை கொண்டுள்ளதே அன்றிக் கருத்துக்கள் மீது அக்கறை கொண்ட தல்ல. ‘தந்திரா’ என்ற
வார்த்தைக்குப் பொருள் யுக்தி, டெக்னிக் முறை, வழி என்பதுதான். ஆகவே அது தத்துவார்த்தமானது அல்ல என்பதை நன்றாகக்
குறித்துக் கொள்ளுங்கள்.
அது அறிவு பூர்வமான பிரச்சனைகள் மற்றும் தேடுதல்களைப் பற்றி அக்கறை கொண்டதல்ல, அது விஷயங்களின் ‘ஏன்’ என்பதில் அக்கறை கொண்டதல்ல, அது எப்படி’ என்பதில் அக்கறை கொண்டது. அதாவது, எது உண்மை என்பதில் அல்ல. மாறாக எப்படி உண்மையை அடையது என்பதில் அக்கறை கொண்டது.
‘தந்திரா’வின் பொருள் டெக்னிக் ஆகவே இந்தூல் விஞ்ஞான பூர்வமானது, விஞ்ஞானம் ஏன் என்பதில் அக்கறையுடையதல்ல, விஞ்ஞானம் எப்படி என்பதில் அக்கறையுடையது.
இதுவே விஞ்ஞானத்திற்கும் தத்துவத்திற்கும் ஆன அடிப்படை வித்தியாசம். தத்துவம் வினவுகிறது. “ஏன் இந்த ஜீவிதம், விஞ்ஞானம் வினவுகிறது. “எப்படி இந்த ஜீவிதம்?” எப்படி என்று கேட்கிற தருணத்திலேயே உனக்கு முறை, டெக்ளில் முக்கியமானதாகி விடுகிறது. தத்துவ வடிவம் அர்த்தமற்றதாகி விடுகிறது. அனுபவப்படுதலே முக்கியமானதாகி விடுகிறது.
சுந்த்ரா ஒரு விஞ்ஞானம், தந்த்ரா ஒரு தத்துவமல்ல. தத்துவத்தைப் புரிந்துகொள்வது சுலபம். ஏனெனில் அதற்கு உ அறிவு மட்டுமே போதும் உன்னால் ஒரு மொழியைப் புரிந்துகொள்ள முடியுமென்றால், ஒரு கருத்தைப் புரிந்துகொள்ள முடியுமென்றால், தத்துவத்தைப் புரிந்துகொண்டு யிடலாம்.
நீ மாற வேண்டியதில்லை. நீ எந்த நிலைமாற்றமும் அடைய வேண்டியதில்லை. நீ நீயாகவே தத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம், ஆனால் தந்திரா சாத்தியமில்லை.
உனக்கு ஒரு மாற்றம் தேவைப்படும்..சொல்லப் போனால், ஒரு நிலைமாற்றம் தேவைப்படும். நீ வித்தியாசப்படவில்லை என்றால் தந்திராவைப் புரிந்துகொள்ள முடியாது.
ஏனெனில் தந்த்ரா ஒரு அறிவுபூர்வமான கணிப்பு அல்ல, அது ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை வரவேற்கவும், உட்படவும் தயாராக இல்லையெனில், அது உனக்கு நிகழாது.
தத்துவம் மனம் சம்பந்தப்பட்டது. உனது தலை அதற்குப் போதும்; நீ முழுமையாகத் தேவையில்லை. தந்திராவிற்கு நீ முழுமையாகத் தேவை. அது ஒரு ஆழமான சவால். நீ அதிஸ் முழுமையாக இறங்கியாக வேண்டும்.
அது துண்டு துண்டானது அல்ல. அதைப் பெற ஒரு வித்தியாசமான அணுகுமுறை. வித்தியாசமான நடைமுறை, வித்தியாசமான மனம் வேண்டும்.
தேவி, இதனால்தான், தந்துவரீதியான கேள்விகளைப் போலக் கேட்கிறான். தந்த்ரா தேவியின் கேள்விகளோடு ஆரம்பமாகிறது. எஸ்வாக் கேள்விகளையும் தத்துவார்த்தமாக சமாலிக்க முடியும்.
உண்மையாகச் சொன்னால், எந்தக் கேள்வியையும் இரு வகையில் சமாளிக்கலாம்: தத்துவார்த்தமாக அல்லது முழுமை யுடன், அறிவுபூர்வமாக அல்லது இருத்தலிலிருந்து, உதாரண மாக, யாராவது ஒருவர் “அன்பு என்றால் என்ன? என்று கேட்டால், தீ அறிவுபூர்வமாக அதைச் சமாளிக்க முடியும்.
நீ அதை விளக்கலாம். நீ நிலவிவரும் பல கருத்துக்களைக் கூறலாம். நீ ஒரு குறிப்பிட்ட கருத்துக்கணிப்புக்காக வாதாடலாம். நீயே ஒரு நடைமுறையை, ஒரு கொள்கையைக் கூட உருவாக்க முடியும். ஆனாய் நீ அன்பைச் சிறிதும் உணராதவனாக இருக்கலாம்.
ஒரு கொள்கையை உருவாக்க, அனுபவம் தேவையில்லை. அதோடு மேலும் அனுபவம் குறைவாக இருக்குமளவு நன்மையே. ஏவெளில் அப்போது உனது கொள்கையைச் சிறிதும் தயக்கமின்றி நீ வெளியிடலாம்.
ஒரு குருடனால் மட்டுமே. ஒளி என்பது என்ன என்பதை மிகச் சுலபமாக வரையறுக்க முடியும். உனக்குத் தெரியாதபோது நீ உறுதிபடச் சொல்கிறாய். அறியாமை எப்போதும் உறுதிபடக் கூறும், அறிந்தது தயங்கும்.
நீ அதிகமாக அறிந்திருந்தால், அந்த அளவு அதை வலியுறுத்தும் உறுதியான அடித்தளம் நழுவக் காண்பாய். மேலும் உண்மையிலேயே அறிந்தவர்கள், அவர்கள் அறியாதவர்களாகி விடுவர்.
அவர்கள் ஒரு குழந்தையைப் போல எளியவர்களாய், ஒரு மடையனைப் போல எளிமையானவர்களாய் ஆகிவிடுவர். உணக்குக் குறைவாகத் தெரிந்த அளவு நல்லது. தத்துவார்த்தமாயிருக்க, கருத்துக்களை முன் வைப்பதற்கு கொள்கைகளுக்கு இப்படி இருப்பது சவுகரியமானது.
ஒரு பிரச்சனையை அறிவுபூர்வமாக மட்டும் சமாளிப்பது மிகவும் சுலபம் ஆனால் ஒரு பிரச்சனையை இருந்து சமாளிப்பது அதாவது பிரச்சனையைப் பற்றி வெறுமனே யோசிப்பதல்ல.
அதை வாழ்ந்து பார்ப்பது, அதில் மூழ்கிப் பார்ப்பது, அது உன்னையே மாற்றினாலும் பரவாயில்லையென்று அதில் நுழைவது கஷ்டமானது.
அதாவது, அன்பை அறிய ஒருவன் அன்பில் ஈடுபட வேண்டும். ஆனால் இது ஆபத்தானது. ஏனெனில் நீ பழையபடி இருக்கமாட்டாய். அந்த அனுபவம் உன்னை மாற்றிவிடும்.
நீ அன்பில் ஈடுபடும் கணமே, ஒரு வேறு மனிதனாய் மாற ஆரம்பிக்கிறாய். எனவே நீ அதிலிருந்து வெளியே வரும் பொழுது, உன்னுடைய பழைய முகத்தை அடையாளம் காண முடியாது. இந்த முகம் உன்னுடையதா யிருக்காது. ஒரு துண்டிப்பு நிகழ்ந்திருக்கும். இப்போது ஒரு இடைவெளி ஏற்பட்டிருக்கும். பழைய ஆன் செந்துப்போய் புது ஆன் வந்திருக்கிறான். இதுதான் மறுபிறப்பு என்பது இரண்டுமுறை பிறந்தவன்.
- ஓஷோ










