ஞான உபதேசப் பதிவு : 498
தொடர்ச்சியான முயற்சிகளால் இதுவரை எதுவும் நிகழவில்லை என்றால், அதற்கு எந்த காரணமும் இல்லை என்று தான் பொருள்.
ஏனென்றால், ஒரு வேளை அதற்கு காரணங்கள் இருந்திருந்தால். அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கும் அந்த அற்புத இயற்கை
& பிரபஞ்ச ஆற்றல், அதை உணரும் படி செய்திருக்கும். உங்களின் திறமையை வளர்த்துக் கொள்ளவும் ,உங்களுக்கு எது
ஒத்துழைக்கும் அல்லது ஒத்துழைக்காத என்பதை பற்றிய புரிதலை உருவாக்குவதற்காகவே இந்த தொடர் நிகழ்வின் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது.
சாதனை படைத்த எலான் மஸ்க் முதல் முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் வரை சாதாரண மனிதர்களுக்கு நிகழக்கூடிய
தோல்விகளை விட மூன்று மடங்கு தோல்விகளை அவர்கள் சந்தித்த பிறகு வெற்றி பெற்றனர் என்பது வரலாற்று உண்மையாக
திகழ்கிறது.
தொடர் தோல்விகள் தோல்விகளாக கருதப்படுவதில்லை.
எடிசன் எத்தனை முறை பல்பைக் கண்டுபிடிக்கத் தவறினார் தெரியுமா ? நாம் ஒரு கடையில் மிகவும் சாதாரணமாக ஒரு விளக்கை வாங்கலாம். இந்த ஒன்றை வாங்க அவர் 2774 முறை தோல்வியடைந்ததை கற்பனை செய்து பாருங்கள். ஆம்! அவர் தனது பதிவுகளின்படி 2774 முறை தோல்வியடைந்தார், பின்னர் ஒரு மின் விளக்கின் வேலை வடிவமைப்பை அடைந்தார்.
மிகப் பெரும் வரலாற்று சாதனை படைத்தவர்களே தோல்விகளை தோல்விகளாக ஏற்றுக் கொள்ளாத போது, சாதாரண மனிதர்களாகிய நாம் நமக்கு ஏற்படும் சிறு சிறு துன்பங்கள் போல தோன்றும் இந்த தோல்விகளை வெற்றிகளின் முதல் படிகளாகவே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அது என்னவென்றால்,
வழியில்லாத நிலையில் இருந்து தான் ஒரு வழி பிறக்கும்.
ஏனென்றால், ஆகாயத்தில் காணும் லட்சோப லட்சம் நட்சத்திரங்களும், அதனை சுற்றி வரும் லட்சம் கோடி கிரகங்களும் இதற்கு முன்பு அங்கு இல்லை. இது முழுவதும் வெட்ட வெளியாக இருந்தது. அனைத்தும் வெற்றிடம் , எங்கும் வெற்றிடம், எதிலும் வெற்றிடம்.
நீங்கள் பிறந்த போது நீங்கள் வெற்றிடமாக இருந்தீர்கள். உங்களிடம் எதுவுமில்லை. ஆனால், இப்போது நீங்கள் நினைத்தால் எதை வேண்டுமானாலும் உருவாக்க கூடிய வல்லமை பெற்ற மாமனிதர்களாக இருக்கிறீர்கள் என்பதை அன்றாட வாழ்வியல் தத்துவ மாயை மறைத்து விடுகிறது.
முடியாது என்பதை தூக்கி சமுத்திரத்தில் எரியுங்கள்.
ஹெர்குலஸ் வழிவந்த ஸ்பெயின் நாட்டைச் சார்ந்த, முற்காலத்தில் ஸ்பார்ட்டா என்று அழைக்கப்படும் 300 வீரர்கள்,தங்களின் எதிரிகளான லட்சோப லட்சம் அக்கிடியன்களை வெற்றி கொண்டனர். பிறகு சூழ்ச்சியால் வீழ்த்தப்பட்டனர். இன்றும் அவர்கள் வரலாற்றில் பேசப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதன் வாயிலாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவென்றால்
பிரபஞ்ச ஆற்றல் உயிருள்ள அனைத்து பொருட்களிலும் நிரம்பியுள்ளது. அது அனைத்தையும் வெல்லும் வல்லமை கொண்டது. இந்த 300 வீரர்களைப் போல.
சில மாதங்கள் வாரங்கள் ஏன் வருடங்களைக் கூட எடுத்துக் கொள்ளுங்கள். வெற்றி என்பது ஓரிரு நாளில் கிடைப்பதில்லை. அது உங்களின் தொடர் முயற்சிகளின் நிகழ்வுகளின் தொகுப்புகள் இருந்து பெறப்படும் ஊதியம் ஆகும்.
இவை அனைத்தையும் செய்து முடிப்பதற்கு முதலில் நீங்கள் இயற்கையின் தகவல் அமைப்புகளில் ஒன்றி இருக்க வேண்டும்.
அனைத்தையும் சூழ்ந்து நிற்கின்ற இந்த இயற்கை ஆற்றல் உங்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவக்கூடும். இயற்கையை புரிந்து கொள்ளாமல் இயற்கையின் நிறைவை அறிந்து கொள்ளாமல், நீங்கள் கேட்டதையும் கேட்காததையும் கொடுக்கும் பிரபஞ்ச ஆற்றலை ஒருபோதும் உங்களால் தொடர்பு கொள்ள முடியாது.










