திருவண்ணாமலையில் ஞானாசிரியனாக வீற்றிருக்கும் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் பாதகமலங்களில் சமர்ப்பணம்.
நாம் எல்லோரும் இறைவனது அருள் பெறத் துடிக் கிறோம். இதனால் பூஜை வழிபாடுகளும் புண்ணிய ஸ்தல தீர்த்த யாத்திரைகளும்
மேற்கொண்டு பலனடைய முயற்சி செய்கிறோம்.
இவற்றினால் இறைவன் அருள் நமக்குக் கிடைக்குமோ, கிடைத்ததோ என்றெல்லாம் குழம்புகிறோம். இறைவன் என்பது என்ன?
இறையருள் என்பது என்ன?
அண்ட சராசரங்களிலும் பரந்து பரமாணுக்களிலும் ஊடுருவி. எல்லையில்லாத, ஆழங் காணமுடியாத, புலன் களுக்கு அப்பாற்பட்ட
நிர்க்குணப் பிரம்மத்தை. உடலெடுத்த நம்மால். புலன்களால் அறிய முடியாது.
இத்தகைய பரப்பிரம்மத்தைப் பூஜித்து அருள் பெறுவதென்பது இயலாத காரியம் என்பதா லேயே பகவான் ஸ்ரீகிருஷ்ணனும்,
பகவத்கீதையில், “நிர்க்குண பிரம்மத்தை நாடும் ஞானிகளின் பாதை மிகவும் கடினமானது; ஏனெனில் உடம்பெடுத் தோருக்கு
அவ்யக்த உபாஸனை மிகவும் கடினம்” எனக் கூறுகிறார்.
இறைவனை ரூபமும் நாமமும் கொண்டவராக எண்ணிப் பக்தி செய்வதே சாத்தியம் எனப் புலப்படுகிறது.
சரி, இறைவன் அருள் என்பது என்ன? விவேக சூடாமணியில் ஆதிசங்கரர், பெறற்கரியவை மூன்று எனக் குறிப்பிடுகிறார்.
“மனிதராகப் பிறப்பது அரிது: அதனினும் அரிது மோக்ஷத்தை விழைவது. விழையும் போது ஞானாசிரியனான ஸத்குரு கிடைப்பது
மிக அரிது” என்கிறார். இறைவனருளால் நமக்கு மனித உடல் கிடைத்திருக்கிறது.
நாம் இறையருள் வேண்டுவது ஆனந்தத்திற்காகத்தான்; பொருளுக்காகவும் புலனின்பத்திற் காகவும் என நம்மை நாமே குழப்பிக்
கொண்டாலும் ஆனந்தத்தின் எல்லையான இறை நிலையடைவதே நாம் விழைவது. இதற்காகவே இறையருள் வேண்டுகிறோம்;
இறைவழிபாடுகள் மேற்கொள்கிறோம். இந்த அருள் பொங்கிப் பிரவகிக்கிற இடங்கள் உண்டு என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
இறைவனை ஏகாக்கிர சிந்தையுடன் வழிபட்டுப் புலன்களை அடக்கி ஜீவன் முக்தர்களாக இருக்கும் மஹான்களிடம் தான் இவ்வருள்
ஊற்றாகப் பெருகுகிறது.
இம்மகான்கள் நம் மிடையே தோன்றியிருப்பது நாம் செய்த பெரும் பாக்கியம். இறைவனே நம் மிடம் கருணை கொண்டு இவர்களை
நம்மிடையே வாழச் செய்கிறான். இல்லை யெனில், சதா சச்சிதானந் தத்தில் திளைத்துக் கொண் டிருக்கும் பகவான் யோகி
ராம்சுரத்குமார் நமது சுகதுக் கங்களில் பங்கெடுத்துக் கொண்டு நம்மை நல்வழிப் படுத்த முனைவது ஏன்?
யோகியாருக்கு நம்மால் ஆக வேண்டியது ஒன்றுமில்லை. அவர்கள் நான் என்ற பிரக்ஞை முற்றிலும் இழந்த நிலையில் விருப்பு வெறுப்
பற்ற நிலையில் உள்ளார்கள். வேண்டியது, வேண்டாதது ஒன்றுமில்லை. உடலின் தேவைகளைப் பூர்த்தி செய்வது கூட இறைவனின்
சித்தம் என்று விட்டுவிடுகிறார்கள். இவர் பரமாத்ம ஸ்வரூபி.
நம்மால் எந்தவித உதவியும் தேவையற்ற நிலையில் நம்மிடையே யோகியார் வாழ்கிறார்கள் என்றால் நம்மிடம் உள்ள எல்லையற்ற கருணையே காரணம். தன்னையே சகலத்திலும் காணும் இவர் நாம் உழன்று கொண்டிருக்கும் தாழ்ந்த நிலை யிலிருந்து நம்மை உய்விக்கவே வந்திருக்கின்றார். நாம் அருளை நாடுவதில் காட்டும் ஆர்வத்தைக் காட்டிலும் இவர்கள் அருளை நமக்கு வழங்க அதிக ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இதை நாம்தான் புரிந்துகொள்வதில்லை.
இவர்களின் அருளைப் பெற நாமும் சிறிதளவாவது முயற்சி செய்ய வேண்டும். கண்ணன் கீதையில் கூறியபடி எல்லோரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே; ஆயினும் பக்தியுடன் உபாஸனை செய்யும் பக்தர்கள் உள்ளத்தில் இறைவனும், இறைவனிடம் இந்த பக்தர்களும் உள்ளார்கள். வற்றாத சுனையாகப் பாயும் அருளைப் பெற, அச்சுனையை நம் பால் ஈர்க்க, நாமும் யோகியாரை நாடிப் பக்தி செய்ய வேண்டும்; எப்படிச் செய்தால் பலன் கிடைக்கும்?
தெளிவு குருவின் திரு மேனிகாணல்
தெளிவு குருவின் திரு நாமஞ் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருஉருச் சிந்தித்தல் தானே.
இப்படி வெகுகாலத்திற்கு முன்பே திருமூலர் தெளிவு படுத்தி விட்டார். இத்தகைய முயற்சியால் யோகியாரின் கவனத்தையும் அருளையும் ஈர்க்க நம்மாலானதைச் செய்ய வேண்டும். நம்பிக்கையுடன் பக்தி செய்பவர்களின் துயரங்கள் நீங்கி இன்புறுவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.
பகவான் யோகி ராம்சுரத்குமார் தமது எல்லையற்ற கருணையால் நம் தீவினைப் பயனைக் களைந்து நமக்கு ஆத்ம சாதனைக்கு வழி காட்டுகிறார். ஆனால் இவரை நாடிவரும் பக்தர்களில் பலர் தங்கள் செல்வ விருத்திக் காகவும் வியாதிகள் நீங்கவும் விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆத்மாபிவிருத்தி என்பது அவர்களின் கடையான எண்ணமே. கண்ணன் கீதையில் கூறியபடி, துக்கத்தால் பீடிக்கப்பட்டவர்களாயினும் பொருளீட்ட விழைபவ ராயினும், ஞான வேட்கையால் உந்தப்பட்டவராயினும் எல்லோரும் எவ்விதத்திலாயினும் இறைவனை வழிபட்டால் இறையன்புக்குப் பாத்திரர்களாகின்றனர். எனினும், இறைநிலையடைய வழிகாட்ட ஆர்வத்துடனும் மிகுந்த அக்கறையுடனும் நம்மிடை யோகியார் அவர்கள் உள்ளபோது.
அவரிடம் பொருள் சம்பந்தமான விஷயங்களை யாசிப்பது எப்படி இருக்கிறதென்றால், லட்சக்கணக்கில் தானம் வழங்கத் தயாராக உள்ள செல்வந்தரிடம் பத்துபைசா, ஐம்பது பைசா கேட்கும் அற்பத்தனமாகவே தெரிகிறது.
கற்பகத் தருவாக நம்மிடம் உலவிவரும் யோகியாருக்குக் கண்ணுங்கருத்துமாக நம்மால் இயன்றவரை சேவை = செய்வது நமது தலையாய கடமை. முப்பத்தைந்து வருடங்களாகத் திருவண்ணாமலை வாசத்திற்குப் பிறகு இப்போது ஒரு ஆசிரமம் கட்டச் சம்மதித்திருக்கிறார் என்றால் இறையருளை வாரி வழங்க ஒரு கருவியாகவே எண்ணுகிறார்.
அவரது எண்ணத்தைப் பூர்த்தி செய்ய எண்ணற்ற பக்தர்களும் அன்பர்களும் முன்வந்து நடத்தி வைக்க வேண்டும். துரிய நிலையில் இருக்கும் யோகியாருக்கு எந்தவித எண்ணமோ விருப்பமோ இல்லை.
அவர் ஒரு சிறு குழந்தைபோல, எந்தவிதமான உள்நோக்கமோ காரியம் செய்யவேண்டுமென்ற திட்டமோ இல்லாமல் உள்ளார். அவரை இயக்குவது அண்டசராசரங் களுக்கெல்லாம் அதிபதியான இறைவனே; இறைவனுடன் சிந்தை ஒன்றிய நிலையில் அவரது எண்ணங்கள் இறைவனின் எண்ணங்களே. இத்தகைய தூய துறவியின் ஆசிரமம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ஆன்ம விழிப்பிற்கு அடிகோலும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
யோகியார் அவர்கள் பக்தர்களிடையே பெரும் புரட்சிகளைச் செய்து வருகிறார். அதிசயம், அற்புதம் என்று கூறத்தக்க பல நிகழ்ச்சிகளை அன்பர்கள் அளவளாவும் நேரங்களில் எடுத்துரைக்கிறார்கள், எழுதுகிறார்கள். இதையெல்லாம் விட மேம்பட்ட புரட்சி மனத்தில் ஊடுருவி அவர்களை வியத்தகு வகையில் மாற்றுவதுதான். பக்தர்கள் தாங்கள் மாற்றப்படுவது தெரியாமல் அருள் மழையில் = நனைந்த வண்ணம் அவரின் அற்புதச் செயல்களில் மனத்தைப் பறி கொடுக்கிறார்கள்.
மென்மையாக ஏற்பட்டு வரும் உள்ளத்தின் மாறுதல்கள் ஓர் ஆன்மீக மறுமலர்ச்சிக்கு அடிகோலி வருகின்றன. சென்ற சில வருடங்களாக நடந்துவரும் மாறுதல்களைக் கண்டு இதை எழுதுகிறேன்.
எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் உள்ளத்தில் கள்ளனைப் போல் புகுந்து நம் சிந்தையை அபகரித்து விடுகிறார். பலருக்கு இது நடந்த பிரக்ஞையே இல்லா திருக்கிறது. அவர்களின் ஆன்மீக வளர்ச்சி இடையறாமல் நடந்து கொண்டிருக்கிறது.
இத்தகைய மென்மையான ஆன்மீகப் புரட்சியின் பரிமாண வளர்ச்சிக்காகவே ஆசிரமம். இதற்கான நம் தொண்டு வளர யோகியாரின் அருளையே நாடுவோம்.
– செல்வி ர.விஜயலஷ்மி ஐ.ஆர்.எஸ்
#Souvenir1995










