கருணை மட்டுமே குணமாக்கும் ஆற்றல் கொண்டது” என்று நீங்கள் கூறினீர்கள். ‘கருணை’ என்ற வார்த்தையைப் பற்றியும், தனக்கான கருணை (Compassion for oneself) மற்றும் மற்றவர்களுக்கான கருணை (Compassion for the other) பற்றியும் நீங்கள் விளக்கம் தர முடியுமா?
ஓஷோவின் பதில்:
ஆம், கருணை மட்டுமே குணமாக்கும் தன்மையுடையது — ஏனெனில் மனிதனுக்குள் இருக்கும் அனைத்து நோய்களுக்கும் காரணம் அன்பின் பற்றாக்குறையே ஆகும். மனிதனிடம் காணப்படும் அனைத்துத் தவறுகளும் ஏதோ ஒரு வகையில் அன்புடன் தொடர்புடையதுதான்.
அவனால் அன்பு செலுத்தவோ அல்லது அன்பைப் பெறவோ முடியாமல் இருக்கிறான். தன் இருப்பைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் அவனால் இயலவில்லை. அதுவே துயரம். இது உள்ளுக்குள் பலவிதமான சிக்கல்களை (complexes) உருவாக்குகிறது.
உள்ளுக்குள் இருக்கும் அந்தக் காயங்கள் பல வழிகளில் வெளிப்படலாம்: அவை உடல்ரீதியான நோயாகவோ, அல்லது மனநோயாகவோ மாறலாம் — ஆனால் ஆழமாகப் பார்த்தால், மனிதன் அன்பின் குறைபாட்டாலேயே துன்பப்படுகிறான். 
உடலுக்கு எப்படி உணவு தேவையோ, அதேபோல ஆத்மாவுக்கு அன்பு தேவை உணவின்றி உடலால் வாழ முடியாது; அன்பின்றி ஆத்மாவால் நிலைத்திருக்க முடியாது. 
உண்மையில், அன்பு இல்லாவிட்டால் ஆத்மா ஒருபோதும் பிறப்பதே இல்லை — அதன் பிழைப்பு என்ற கேள்வியே இல்லை. நீங்கள் மரண பயத்தால் மட்டுமே உங்களுக்கு ஓர் ஆத்மா இருப்பதாக நம்புகிறீர்கள். 
ஆனால் நீங்கள் நேசிக்காதவரை அதை அறிந்திருக்கவில்லை.
அன்பில் மட்டுமே ஒருவன் தான் உடலை விட, மனதை விடப் பெரியவன் என்பதை உணர வருகிறான். 
அதனால்தான் நான் கருணைக்கு குணமாக்கும் ஆற்றல் உண்டு என்று சொல்கிறேன்.
கருணை என்றால் என்ன?
கருணையே அன்பின் தூய்மையான வடிவம்
நீங்கள் கருணையைப் பிரார்தனை என்றும் அழைக்கலாம்.
நீங்கள் கருணையைத் தியானம் என்றும் அழைக்கலாம்.
ஆற்றலின் மிக உயர்ந்த வடிவம் கருணையே
— ஓஷோ










