பத்து பொருத்தம் இருந்தும் விவாகரத்து ஏன்?
பத்து பொருத்தமும் இருக்கிறது ஆனால் திருமண வாழ்க்கை ஏன் முறிந்து போகிறது.
திருமணம் என்பது இரு குடும்பங்களை மட்டுமல்ல, இரு மனங்களையும் இணைக்கும் முக்கியமான வாழ்க்கைத் துணை.
பல நேரங்களில் 10 பொருத்தமும் சரியாக இருக்கிறது என்று பார்த்து திருமணம் செய்து வைத்த பிறகும், சில தம்பதிகளின் வாழ்க்கையில் கருத்து வேறுபாடு, பிரிவு, விவாகரத்து போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை நாம் பார்க்கிறோம்.
அப்படியானால் 10 பொருத்தம் மட்டும் போதுமா?
🔎 இதற்கு மேல் பார்க்க வேண்டியவை என்ன?
திருமணப் பொருத்தம் பார்க்கும்போது “அனுகூலப் பொருத்தம்” என்ற முறையிலும் இருவரது ஜாதகங்களையும் முழுமையாக ஆராய்வது முக்கியம்.
✨ இருவருடைய லக்னம் மற்றும் குண அமைப்பு
✨ 2-ஆம் பாவகம் – குடும்ப வாழ்க்கை
✨ 5-ஆம் பாவகம் – குழந்தைப் பாக்கியம்
✨ 7-ஆம் பாவம் – திருமண வாழ்க்கை
✨ 8-ஆம் பாவம் –ஆயுள்
✨ எட்டு,பன்னிரண்டாம் இடம் சுபத்துவம் இருவருக்கும் இருக்கிறதா?
இதனால் இருவரும் வெளிநாட்டில் ஒன்றாக வாழ்வார்கள்
✨ இருவருக்கும் ஏற்படும் தசா–புக்தி காலங்கள் என்பது இருவருக்கும் பாவத்துவமான ஆறு எட்டாம் அதிபதி புக்திகளின் காலங்கள் தசைகள் வராமல் இருக்க வேண்டும் இதனால் தம்பதியர்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிய மாட்டார்கள்
✨ திருமணத்திற்குப் பிறகு வரும் முக்கியமான திருமண காலத்தில் திருமணத்திற்கு குறிப்பிட்ட பிந்தைய காலத்தில் அஷ்டமத்து சனி வராமல் இருக்க வேண்டும்
✨ இருவருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை யோகம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் உள்ளதா என்பதையும் ஆராய வேண்டும்.
💡 பத்து பொருத்தம் மட்டும் பார்த்து முடிவு செய்யாமல், இருவருடைய முழு ஜாதகங்களையும் ஒப்பிட்டு திருமண வாழ்க்கைக்கு ஏற்ற அனுகூலம் உள்ளதா என்பதை ஆராய்வதே சிறந்த அணுகுமுறை.
“இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒற்றுமையாக நீண்ட காலம் வாழக்கூடியவர்களா?”
என்பதையும் ஜாதக ரீதியாக ஆராய்ந்து திருமணத்தை முடிவு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.










