ஏன் உங்களால் அடுத்த நிலைக்குப் போக முடியவில்லை தெரியுமா?
ஏனென்றால்,
நீ இன்னும் உன்னைப் பற்றிய பழைய கதைகளிலேயே வாழ்கிறாய்.
“நான் இப்படித்தான்”, “எனக்கு இதுதான் எல்லை”, “என்னால் முடியாது” என்று
உன் மனமே உனக்கே ஒரு சிறை கட்டிக்கொள்கிறது.
பிரபஞ்சம் எப்போதும் உனக்கு சைகைகள் அனுப்பிக்கொண்டே இருக்கிறது.
அவை வாய்ப்புகளாகவும், சவால்களாகவும், சில நேரம் வலியாகவும் வரும்.
ஆனால் , நீ அதை புரிந்து கொள்ளாமல், பயத்தோடு தவிர்க்கும்போது,
அதே பாடத்தை கர்மா மீண்டும் மீண்டும் உன் வாழ்க்கையில் கொண்டு வரும்.
கர்மா தண்டனை அல்ல, அது கற்பிக்கும் ஆசிரியர்.
நீ கற்றுக்கொள்ள மறுக்கும் வரை,
அதே நிலை, அதே மனிதர்கள், அதே சூழ்நிலைகள்
வேறு வடிவத்தில் உன் முன் தோன்றிக்கொண்டே இருக்கும்.
அடுத்த நிலை என்பது ஒரு புதிய இடம் அல்ல…
அது பிரபஞ்சத்தோடு உன் எண்ணம் ஒத்திசைவாக மாறும் ஒரு புதிய நீ.
நீ உன் பழைய நம்பிக்கைகளை விட்டுவிட்டு,
சரியான செயலைத் தேர்ந்தெடுக்க ஆரம்பிக்கும் பொழுதுதான்,
கர்மாவின் சக்கரம் உன் பக்கம் சுழலத் தொடங்கும்.
இன்று உன்னிடம் நீ கேட்க வேண்டிய ஒரே கேள்வி..
“நான் எதை மாற்றிக்கொள்ள தயாராக இல்லையோ, அதுதான் என் முன்னேற்றத்தை நிறுத்திக் கொண்டிருக்கிறதா?”
🦚 நல்லவைகள் வாழ்க ! நல்லாற்றல் பெறுக ! 🦚










