இறைவன் வழங்கிய கொடை நம் வாழ்க்கை..!
மிகுந்த கடன் தொல்லையால் மனமுடைந்த ஒருவன் இனி வாழ்வதில் அரத்தமில்லை என முடிவு செய்தான். வாழ்வை முடித்துக் கொள்ள தன் மனைவி குழந்தைகள் இருவருடன்
தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தான்.
முதலில் தன் குழந்தைகள் இருவரையும் இறக்க வைத்தபின் தன் மனைவியுடன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் ஏனெனில் குழந்தைகள் ஒருவேளை சாவிலிருந்து தப்பித்து விட்டால் அனாதைகளாய் கடன்காரன் பெற்ற மகன் என பழிசுமையில் வாழகூடாது.
என நினைத்தான்,
தன் குழந்தைகளை அழைத்து, கடன் சுமையுடன் மானம் இழந்து வாழவேகூடாது,
நாம் தற்கொலை செய்து கொண்டு உயிரை விட்டு விடலாம் மகனே என அழதபடி கூறி, குழந்தைகளையும் சம்மதிக்க வைத்தான்.
எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம்,
கயிற்றில் தொங்கலாமா?
ரயில் தண்டவாளத்தில் வீழலாமா?
தூக்கமாத்திரை ?
எலி பாஷானம் குடிக்கலாமா?
இல்லை மண்ணெண்ணை ஊற்றி பற்ற வைத்து கொண்டு சாகலாமா?
இதில் எதை தேர்வு செய்யலாம் என மனைவியிடம் கேட்டான்.
இதனை அமைதியாக.கேட்டு கொண்டு இருந்த இரண்டாவது மகன் அப்பா செத்துப் போக இவ்வளவு வழி இருக்கும் போது,
கடனை அடைச்சு பொழைக்க ஒரு வழி கூட இல்லையாப்பா, என வெகுளியாக கேட்க,
அவனுக்கு கன்னத்தில் யாரோ பளார் என அறைந்தது போல் உணர்ந்தான்..!
தற்கொலை எண்ணத்தை கைவிட்டு கடன் அடைக்க கடுமையாக உழைக்க தொடங்கினான்.!
இறைவன் வழங்கிய கொடை நம் வாழ்க்கை..!
போராடி வாழ்ந்து காட்டுங்கள்…!
எப்பொழுதெல்லாம் உங்கள் மனம் சோர்வடைகிறதோ..!
தாழ்வு மனபான்மையால் தற்கொலை சிந்தனை தோன்றுகிறதோ..!
அப்பொழுதெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் வணங்கும் உங்கள் இஷ்ட தெய்வத்தின்
மந்திரத்தை மனதில் ஒருமையுடன் உச்சரித்து கொண்டே இருங்கள்..!
உலகமே எதிர்த்து நின்றாலும் நீங்கள் வணங்கும் தெய்வம், உங்களை ஒரு போதும் கைவிடாது என உறுதியாக நம்புங்கள்..!
இறைவனை நம்பி ஏமாந்தோர் இவ்வுலகில் எவருமில்லை..!
இறை உனக்கு துணையாக நின்று வழிநடத்தும்..!
நீ நிச்சயம் வெற்றியடைவாய்….!!!
ஒரு போதும் தற்கொலை முடிவை தேடாதீர்..!










