ஒரு வரையறுக்கப்பட்ட முயற்சியின்
மூலம் தன்னைத் தூய்மைப்படுத்திக்
கொள்வதையே யோகம் என்கிறோம்.
தனது அந்தரங்கத்தில் உறங்கிக்
கிடக்கும் ஆக்கத்திறனை எழுப்பி
அதன் மூலம் செய்யும் முயற்சியே யோகம்.
மனிதனை பரம்பொருளுடன்
ஒன்றச் செய்வதை யோகம் என்கிறோம்.
இவ்வாறு முயற்சியும் அதன் விளைவுமே
யோகம் எனப்படுகிறது.










