அனுதினம் பாடு திருப்புகழை அகன்றிடும் உந்தன் மனக்கவலை!
நம்பிடு முருகனின் கைவேலை நம்மைக் காப்பது அதன் வேலை!
அருணகிரிநாதரும் நமக்கீந்த பாடலே
அதை நீயும் பாடினால் நலம் கூடும் வாழ்விலே!
வேலவனின் புகழ் பாடிடும் நூல் திருப்புகழ்க்கோர் ஈடில்லையே
காலமெல்லாம் நீ பாடி வந்தால் இனி வாழ்வில் இல்லை தொல்லையே
பேரழகன் திருமுருகன்
புகழ் பாடுதல் பரவசமே!
அழகான சந்தம் கொண்ட அருள் பொங்கும் பண்ணிலே
மெழுகாக உருகும் நெஞ்சம் நீர் பெருகும் கண்ணிலே!
சிவனார் ஈன்ற மகனாம் எங்கள் குகனால் வளம் சேருமே
குருவாய் அவனும் வருவான் நேரில் குறைகள் யாவும் தீருமே
கதிர்வேலன் சிவபாலன் மலரடியினைப் பணிமனமே!
அனுதினம் பாடு திருப்புகழை
அகன்றிடும் உந்தன் மனக்கவலை!
வெற்றிவேல்முருகனுக்குஅரோகரா










