5,14,23
புதன் அம்சத்திலும் யோகத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு வளர்பிறை, தேய்பிறை போல் பலன்கள் மாறி மாறி இருக்கும். நடக்குமா நடக்காதா என இழுபறியில் இருந்து வந்த பிரச்னைகள் எல்லாம் சாதகமாக கூடி வரும்.
சரியான வேலை அமையாமல் தவித்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். பெண்கள் உறவுப் பெண்களிடம் வீண் பேச்சுகளை தவிர்ப்பது நலம் தரும்.
பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களின் போது கவனம் தேவை.
பொருட்கள் திருடு போக வாய்ப்பு உள்ளது. அரசு தொடர்பான காரியங்கள் அலைச்சல் முடிவுக்கு வரும். தந்தையின் சொல்லுக்கு செவி சாய்ப்பது நலம் தரும்.
பணிபுரியும் பெண்களுக்கு சில மறைமுக தொல்லைகள் வரலாம். தாயார் உடல்நலனில் கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகளை அலட்சியம் செய்ய வேண்டாம்.
சொந்த பந்தங்களின் வீட்டு விசேஷத்தை முன்னின்று நடத்துவீர்கள். பேரன், பேத்திகள் மூலம் மகிழ்ச்சியும் செலவுகளும் இருக்கும். சொந்த பிளாட், நிலம் வாங்க வேண்டும் என்ற ஆசை. மே மாதத்துக்குள் கூடி வரும்.
உத்யோகம் சாதகமாக இருக்கும். குடும்பத்தை பிரிந்து வெளியூரில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு மாற்றலாகி வருவார்கள்.
அலுவலகத்தில் விடுபட்ட நிறுத்தி வைக்கப்பட்ட சலுகைகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரம் சீராக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பழைய கடன்கள் அடைபடும். புதிய கிளைகள் திறக்கும் யோகம் உள்ளது.
பரிகாரம்:
‘ஸ்ரீமதே ராமனுஜாய நம‘ என தியானம் செய்யலாம். புதன்கிழமை சக்கரத்தாழ்வாருக்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.
சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஆடை, போர்வை வாங்கி தரலாம்.










