6,15,24
சுக்கிர யோகத்திலும் ஆதிக்கத்திலும் பிறந்த உங்களுக்கு இந்த புத்தாண்டு ஏற்ற இறக்கம், விருப்பு வெறுப்பு கலந்த ஆண்டாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசித்து செய்வது நல்லது. அகலக்கால் வேண்டாம்.
குடும்பத்திலும் வெளியிலும் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது அவசியம். மார்ச் மாதத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் சில மாற்றங்கள் வரும்.
புதிய வருமானத்துக்கு வழி பிறக்கும். கர்ப்பிணிகள் உரிய கவனத்துடன் இருப்பது அவசியம். குடும்பத்துடன் பிரசித்தி பெற்ற ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.
மேலும் ஆலய திருப்பணிகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நண்பர்களிடையே அளவோடு பழகுவது நல்லது. உல்லாச பயணங்கள் செல்வதை தவிர்ப்பது நலம் தரும்.
குடும்பத்தில் வளைகாப்பு, காதுகுத்து, நிச்சயதார்த்தம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடந்து முடியும். அடிக்கடி செலவு வைத்த பழைய வண்டியை மாற்றி புது வண்டி வாங்குவீர்கள். மாமியார் உடல்நலத்தில் கவனம் தேவை.
மருத்துவ செலவுகளுக்கும் இடம் உண்டு. மகன் மகளுக்கு பெரிய வசதியான இடத்தில் நல்ல சம்பந்தம் கூடி வரும். விரும்பிய இடம் மாற்றம் கூடி வரும்.
வசதி குறைவான வீட்டில் இருந்து பெரிய வசதியான வீட்டுக்கு குடிபோவீர்கள். உத்யோகத்தில் அதிக கவனம், நிதானம் தேவை.
அலட்சியம், மறதியால் பொருள் இழப்பு உண்டாகலாம். ஜூலை மாதத்தில் புரமோஷன், டிரான்ஸ்பருக்கு வாய்ப்பு உள்ளது. வியாபாரம் அமோகமாக இருக்கும்.
கையில் காசு, பணம் புரளும். பழைய கடன்கள் அடைபடும். உப தொழில்களுக்கு வாய்ப்பு உண்டு.
பரிகாரம்:
‘ஓம் நமோ நாராயணாய‘ என்று தினமும் 108 முறை சொல்லலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வணங்கலாம்.
ஏழை மாணவர் கல்விக்கு உதவலம்










