ஹோகன் என்ற ஜென் குரு, கிராமப்புறத்திலுள்ள சிறிய ஆலயத்தில் வசித்துவந்தார்.
ஒரு நாள், நான்கு துறவிகள் பயணவழியில் அங்கே தங்குவதற்காக அந்த ஆலயத்துக்கு வந்தனர். அவர்கள் குளிர்காய்வதற்காக முற்றத்தில் நெருப்புமூட்டிக் கொள்வதற்கு அனுமதிகேட்டனர்.
நெருப்பு மூட்டிக்கொண்டிருந்தபோது அவர்கள் அகவய, புறவயப் பண்புகளைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பது ஹோகன் காதில் விழுந்தது.
அவர்கள் விவாதத்தில் இணைந்து கொண்ட அவர், “ஒரு பெரிய கல் உள்ளது. அது உங்கள் மனத்துக்குள் இருப்பதாக நினைப்பீர்களா, வெளியில் இருப்பதாக நினைப்பீர்களா?” என்று கேட்டார்.
“பௌத்த பார்வையில், எல்லாமே மனத்தின் புறவயப்பாடுதான். அதனால் கல் என் மனத்துக்குள் இருப்பதாகத்தான் சொல்வேன்” என்று ஒரு துறவி பதிலளித்தார்.
“அவ்வளவு பெரிய கல்லை நீங்கள் மனத்துக்குள் சுமந்துகொண்டிருந்தால், உங்கள் தலை மிகவும் கனக்கும்” என்று சொன்னார் ஹோகன்.









