தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவதால் ஏற்படும் நன்மைகள்.
தேங்காய் தீபம் பெரும்பாலும் ஆன்மீக வழிபாடுகளில் பெரிதாக இடம் பெறுவது இல்லை. தேங்காய் தீபத்தை எல்லா தெய்வங்களுக்கும் ஏற்ற மாட்டார்கள்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான தீபங்கள் ஏற்றுவது சிறப்பான பலன்களை தரும். அதற்கு உதாரணமாக துர்க்கை அம்மனை எடுத்துக் கொள்வோம். துர்க்கை அம்மனுக்கு ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றுவார்கள்.
விநாயகப் பெருமானுக்கு சிதறு தேங்காய் உடைப்பது வெற்றிக்கு வழி வகுக்கும் என்று கூறுவார்கள். இந்த வகையில் தேங்காய் தீபத்தை எதற்காக பயன்படுத்துவார்கள் என்பதை தெரிந்து வைத்திருப்பது நல்லது.
பண ரீதியான வில்லங்கமான விஷயங்களில் மாட்டிக் கொண்டு தவிப்பவர்கள் வீட்டின் பூஜை அறையில் சுக்கிர ஹோரையில் திங்கள் கிழமையில் தேங்காய் தீபத்தை ஏற்றி வழிபடுவார்கள்
அது போல் வேலை இல்லாதவர்கள் வேலை கிடைக்கவும், குழந்தை இல்லாதவர்கள் குழந்தை பாக்கியம் பெறவும், அம்மன் போன்ற பெண் தெய்வங்களுக்கு இரண்டு தேங்காய்களை உடைத்து தீபம் ஏற்றி வழிபடுவார்கள்.
தேங்காய் தீபம் ஏற்றும் பொழுது தேங்காய் உள்ளே நெய் ஊற்ற வேண்டும். தேங்காய் தீபத்தில் நெய் தவிர வேறு எந்த எண்ணெய்களையும் பயன்படுத்துவது கிடையாது. திருமண தடை நீங்கவும், தொழில் வளம் சிறக்கவும், நல்ல வரன் அமையவும், வேண்டுதல்கள் விரைவாகவும் பலிக்கும்.












