தஞ்சை பெரியகோவில் வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.
தஞ்சை பெரிய கோவிலில் வராகி அம்மன் தனி சன்னதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். வராகி அம்மனுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும்.

இதில் அம்மனுக்கு தினமும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. கணபதி ஹோமத்துடன் இந்த விழா தொடங்குகிறது.
அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், இனிப்பு அலங்காரமும் நடைபெறுகிறது.அதன் பின்னர் தினமும் வராகி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறும். இந்த விழா 19-ந் தேதி வரை நடைபெறுகிறது.
10-ந் தேதி மஞ்சள் அலங்காரமும், 11-ந் தேதி குங்கும அலங்காரமும், 12-ந் தேதி சந்தன அலங்காரமும், 13-ந் தேதி தேங்காய்பூ அலங்காரமும், 14-ந் தேதி மாதுளை அலங்காரமும், 15-ந் தேதி நவதானிய அலங்காரமும், 16-ந் தேதி வெண்ணெய் அலங்காரமும் நடைபெறுகிறது.17-ந் தேதி பூ அலங்காரமும், 18-ந் தேதி காய்கனி அலங்காரமும் நடைபெறுகிறது.










