காயப்படுத்தும் உண்மையை விட குணப்படுத்தும் பொய்யே மேலானது.
மகிழ்ச்சியும் துயரமும் அதிக இடைவெளியில் எப்போதுமில்லை.
உங்களுடைய மனப்பாங்கு தான் உங்களின் உயர்வை தீர்மானிக்கிறது.
நினைப்பதை சரியாக நினைத்தால் நடப்பதும் சரியாகவே இருக்கும்.
ஒருவரை எப்படி அளவிட வேண்டும் என்று தெரிந்து கொண்டால், ஒவ்வொரு மனிதனும் ஒரு புத்தகமே.
ஒருவரை நீங்கள் கண்டிக்க நேர்ந்தால் அவரை தனிமையில் கண்டியுங்கள்.
ஆனால், அதுவே அவரை பாராட்ட நேர்ந்தால் பலர் அறிய பாராட்டுங்கள்.
எப்போதும், தேவையான இடங்களில் நன்றியையும் பாராட்டையும் சொல்ல மறந்து விடாதீர்கள்.
வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் என்றும் நாம் கவனமாக இருந்திடல் வேண்டும்.
ஏனெனில், கல் உயிரை கொல்லும்.கடும் சொல்லோ உயிரோடு கொல்லும்.
தண்ணீர் அமைதியாயிருக்கும் போது தூசிகள் அடியில் தானாகவே தங்கி விடும். வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது அமைதியாய் இருங்கள் தானாகவே அடங்கி விடும்.
குறை இல்லாத மனிதன் இல்லை. அதை, குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை. கடவுள் சிலவற்றை தாமதமாக கொடுத்தாலும் தரமானதாக கொடுப்பார். சோர்ந்து போகாதீர்.
எதற்கும் துணிவில்லாதவன். எதையும் எதிர்பார்க்க முடியாது.
உண்மையில் பூனை குறுக்கே போனதை விட நாய் குறுக்கே போனதால் கீழே விழுந்தவர்களே அதிகம்.
திருமணத்திற்கு முன் தாயும், திருமணத்திற்கு பின் மனைவியும், சரியாக அமைந்த ஒவ்வொரு ஆணும் மிகவும் அதிஷ்டசாலி தான்.
ஏமாற்றங்களை யாரும் எதிர்பார்ப்பதில்லை. எதிர்பார்ப்புகள் தான் ஏமாற்றங்களாகின்றன.
ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு இருட்டு கூட அழகுதான். சிரிக்கத் தெரிந்தவர்களுக்கு சோகம் கூட சுகம் தான்.
அருகில் இருப்பதனால் ‘அன்பு’ அதிகரிப்பதுமில்லை. தொலைவில் இருப்பதனால் ‘அன்பு’ குறைவதுமில்லை.
உங்கள் கால்கள் வீங்கி நடக்க முடியாமல் போனாலும் கைகளை கொண்டு முன்னேறுங்கள், உலகம் உங்கள் வெற்றியை பார்த்த பின் தான் உங்கள் கஷ்டத்தை பார்க்கும்.
வீசப்படும் கல்லால், குளம் சில நிமிடங்கள் கலங்கும். ஆனால் வீசப்பட்ட கல்லோ மூழ்கி விடும்.
பேசப்படும் வெற்று வார்தைகளால், வெற்றி வரும். தூற்றப்பட்ட வார்த்தைகள், போற்ற துணை வரும்.
சாட்சிகளை கொண்டு நிரூபிக்காமல், மன சாட்சியோடு நீங்கள் வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்.
💢💢வாழ்த்துக்கள்.💢💢











