ஞாயிற்றுகிழமையோடு கூடிய ஆடிமாத தேய்பிறை அஷ்டமி 27-07-2024 4.30pm to 6.00pm
ஞாயிற்றுகிழமையோடு கூடிய ஆடிமாத தேய்பிறை அஷ்டமியில் இந்த வழிபாடு மேற்கொண்டால் குடும்பத்திலும் தொழிலிலும்
தொடரும் பிரச்சனைக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்.
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
அஷ்டமி என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய தெய்வம் கால பைரவர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து
சிவபெருமானின் அம்சமாக தோன்றியவர்தான் காலபைரவர். அப்படிப்பட்ட கால பைரவர் தான் சனி பகவானுக்கே குருவாக
திகழக்கூடியவர்.
அவரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக
சனியின் தோஷம் நீங்கும்.
மேலும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட காலபைரவரை ஆடி மாதம் வரக்கூடிய தேய்பிறை
அஷ்டமி அன்று வழிபடக்கூடிய எளிமையான முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
☘️
குடும்பத்தில் பிரச்னை வராமல் இருக்க
தொழிலில் தடைகள் உண்டாகிறது அல்லது எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுகிறது, தேவையற்ற வம்பு வழக்குகளில் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கி நிற்பவர்கள் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது அனைத்து விதமான பிரச்சினைகளையும் இருந்தும் வெளியில் வர முடியும். பொதுவாக காலபைரவரை ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் வழிபடுவது என்பது மிகவும் சிறப்பு.
அதிலும் அஷ்டமி தினமே ஞாயிற்றுக்கிழமை வருகிறது என்னும் பட்சத்தில் அதற்குரிய பலன் இன்னும் அதிகமாகவே கிடைக்கும்.
☘️
தேய்பிறை அஷ்டமி சமயத்தில் நாம் காலபைரவரை வழிபாடு செய்யும்பொழுது நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் தேய்ந்துவிடும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட தேய்பிறை அஷ்டமி அன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று காலபைரவரை ராகு காலத்தில் வழிபாடு செய்வது என்பது நல்ல பலனைத் தரும்.
அப்படி அருகில் சிவ ஆலயம் இல்லை என்பவர்கள் தங்களுடைய வீட்டிலேயே காலபைரவரை நினைத்து வழிபாடு செய்யலாம்.
☘️
வீட்டில் கால பைரவரின் சிலை இருக்கும் பட்சத்தில் எலுமிச்சை பழ சாற்றால் அவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும். சிலையில்லை படம் தான் இருக்கிறது என்னும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துவிட்டு வழிபாட்டை செய்யலாம்.
இந்த தேய்பிறை அஷ்டமி சமயத்தில் காலபைரவருக்கு எலுமிச்சை பழ சாதம், மிளகு வடை, சர்க்கரை பொங்கல், புளி சாதம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை நைவேத்தியமாக வைத்து வழிபாடு செய்ய வேண்டும். சிலையோ படமோ இல்லை என்பவர்கள் ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றி அதை காலபைரவர் ஆக நினைத்தும் வழிபாடு செய்யலாம்.
☘️
காலபைரவரின் 108 போற்றிகளை கூறி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். 108 போற்றிகள் தெரியாது என்னும் பட்சத்தில் “ஓம் வைரவாய நமக” என்னும் எளிமையான மந்திரத்தை 108 முறை கூறி அர்ச்சனை செய்யலாம். இவ்வாறு அர்ச்சனை செய்து முடித்து கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால பைரவர் நம்முடைய பாதுகாப்பாக இருந்து நம்முடைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்த்து வைப்பார் என்று கூறப்படுகிறது.
☘️
இதோடு மட்டுமல்லாமல் ஆடி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அம்மனுக்குரிய வழிபாட்டையும் நாம் ஒரு சேர சேர்த்து செய்ய வேண்டும். அம்மனுக்குரிய வழிபாட்டை மாலை 6:00 மணிக்கு மேல் வீட்டில் இருக்கக்கூடிய அம்மனின் படத்திற்கு முன்பாக ஏதாவது ஒரு இனிப்பு பொருளை நெய்வேத்தியமாக வைத்துவிட்டு “ஓம் சக்தி போற்றி” என்னும் மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய அம்மனின் அருளும் பரிபூரணமாக கிடைக்கும்.
☘️
மிகவும் எளிமையான இந்த காலபைரவர் வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்குவதோடு அந்தப் பிரச்சினைகளை நீக்குவதற்குரிய வழிமுறைகளும் கிடைக்கும்.











