• சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • Login
Siddharbhoomi
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact
No Result
View All Result
Siddharbhoomi
No Result
View All Result

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) புனித நாள்

siddharbhoomi by siddharbhoomi
May 10, 2024
in ஆன்மிகம்
0
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) புனித நாள்
0
SHARES
0
VIEWS
Share on WhatsappShare on Facebook

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) புனித நாள்

அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும்.

அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில்

கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய

திருதியை ஆகும்.

இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து

புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர்

திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார்.

இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம்

செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு

வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.

சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள்

அனுசரிக்கப்படுகிறது.

 “அட்சயா” எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது.

குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள்,

வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த

நாளாகவும் கருதப்படுகிறது.

மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக

வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது,

கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர்

விரும்புகின்றனர்.

அள்ள அள்ள பணம் வர அட்சய திருதியை நாளில் அஷ்ட லட்சுமிகளை வீட்டிற்குள் அழையுங்கள்

சுத்தம் உள்ள வீட்டில் செல்வம் பெருகும் என்று சொல்வார்கள். நம்முடைய வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே

போதும் சந்தோஷமும் செல்வமும் தேடி வரும். அட்சய திருதியை நாளில் நாம் என்னென்ன பொருட்கள்

வாங்கினால் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சித்திரை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வளர்பிறையில் 3வதாக வரும் திதி திரிதியை திதி “அட்சய திருதியை”

எனப்படுகிறது. அட்சயம் என்றால் வளர்வது என்று பொருள். அட்சய திருதியை அன்று நாம் என்ன பொருள்

வாங்கினாலும் அது பலமடங்கு வளரும். அன்று தானங்கள் செய்து புண்ணியத்தை வாங்குவது தான் மிகவும் சிறப்பு.

அட்சய திருதியை திதி இந்த ஆண்டு மே 10ஆம் தேதி அதிகாலை காலை 04 மணி 17 நிமிடத்திற்கு தொடங்குகிறது. மே

மாதம் 11ஆம் தேதி அதிகாலை 02 மணி 50 நிமிடம் வரை திருதியை திதி உள்ளது. எனவே இந்த ஆண்டு அன்னை

மகாலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளில் அட்சய திருதியை வருவது சிறப்பானது.

அட்சய திருதியை மகாலட்சுமியை வரவேற்கவும் குபேர பூஜை செய்யவும் ஏற்ற நாள். மகிழ்ச்சிகரமான நாள். இந்த

நாளில் அதிர்ஷ்டங்களை வீட்டிற்குள் வரவழைக்க நாம் சில பொருட்களை வாங்க வேண்டும். அப்படி வாங்கும்

பொருட்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை கொண்டு வரவேண்டும்.

அட்சய திருதியை:  மகாபாரத்தில் பாண்டவர்கள் வனவாச காலத்தில், சூரியப் பகவானை வேண்டி தர்மர் அட்சய

பாத்திரம் பெற்றது இதே நாளில்தான். மணி மேகலை அட்சய பாத்திரம் பெற்றதும் இதே சித்திரை மாத வளர்பிறை

திருதியை நாளில்தான் அன்னபூரணி தாயாரிடம் இருந்து சிவபெருமான் தனது பிச்சைப்பாத்திரம் நிரம்பும் அளவு

உணவைப் பெற்று, பிரம்மஹஸ்தி தோஷத்தில் இருந்து விடுபட்டார் என புராணங்கள் கூறுகின்றன. ஏழையாகப்

பிறந்த குசேலன், தன் நண்பன் கிருஷ்ண பரமாத்மாவைக் கண்டு செல்வம் பெற்றது இந்த நாளில்தான். இன்றைய

தினத்தில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு அவல் படைத்து பூஜை செய்தால் அஷ்டலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும்.

என்ன வாங்கலாம்:

அட்சய திருதியை 3வதாக வரும் திதி. 3 என்ற எண் குரு பகவானுக்கு உகந்த திதி. குரு பகவானை பொன்னவன் என்று அழைக்கின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் பல மடங்கு பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. தங்கம் விற்கும் விலையில் அனைவராலும் வாங்க முடியாவிட்டாலும் வசதிற்கு ஏற்ப உப்பு, அரிசி, ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் வாங்கலாம். அட்சய திருதியை தினத்தில் தொழில் தொடங்குவதும், பூமி பூஜை செய்வதும் நல்ல பலனைத் தரும்.

செல்வ வளம் தரும் :

அட்சய  திருதியை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் முக்கியமானது.  இந்த நாளில் செய்யப்படும் பிதுர் தர்ப்பணம், பல தலைமுறைக்கு முன் வாழ்ந்த மூதாதையர்களுக்கும் சென்றடையுமாம். அதே நேரத்தில் பிதுர் தர்ப்பணம் செய்பவர்களுக்கு, வறுமை நீங்கி வளமான வாழ்வு அமையும்.

வளம் தரும் தானங்கள்:

அட்சய திருதியையன்று செய்யக்குடிய சுபகாரியங்கள் அனைத்தும் மென்மேலும் வளர்ச்சியடையும். தகுதியான நபர்களுக்கு தான, தர்மம் செய்ய வேண்டும் என்பது நம்பிக்கை. பசுமாட்டுக்குக் கைப்பிடி அளவு புல், வாழைப்பழம் கொடுக்க வேண்டும். இதன் மூலம் மகாலட்சுமி தேவியின் அருள் கிடைக்கும்.

தயிர் சாதம் தானம்:

ஏழைகளுக்கு தானம் செய்தால், அது பல மடங்கு புண்ணியத்தை தரும் என்று கூறப்படுகிறது. தயிர் சாதம் தானம் செய்தால் ஆயுள் கூடும். இனிப்பு பொருள் தானம் செய்தால் திருமணத் தடை  நீங்கும். உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம். ஏழைகளுக்கு தயிர்சாதம் தானம் தருவதால் 11 தலைமுறைக்கும் குறைவில்லாத வளமான வாழ்வு அமையும்.  கல் உப்பு மகாலட்சுமியின் அம்சம் கொண்டது எனவே உப்பை யாரும் தானமாகத் தர விரும்ப மாட்டார்கள். அதனால் உப்பு பயன்படுத்தப்பட்ட உணவை தானமாக கொடுக்கலாம்.

தோஷம் நீக்கும் தானங்கள்:

அட்சய திருதியை நாளில் மாங்கல்ய சரடு தானம் செய்தால் தீர்க்க சுமங்கலி வரம் கிடைக்கும். திருமணமாகாத பெண்களுக்கு மாங்கல்ய பாக்யம் உண்டாகும். திருமண தடங்கல்கள் நீங்கும்.

அட்சய திருதியை நாளில் குடை தானம் செய்தால் தவறான வழியில் சேர்த்த செல்வத்தினால் ஏற்பட்ட பாவம் விலகும் . குழந்தைகளுக்கு சிறப்பான எதிர்காலம் உண்டாகும். எண்ணெய் தானம் செய்தால் நாம் அறிந்தும் அறியாமலும் செய்த கர்ம வினைகள் அகலும். கடன்கள் குறையும்.

பாவம் போக்கும் தானங்கள்:

பூ தானம் செய்தால் அந்தஸ்து காரணமாக பிறரை அவமதித்ததால் ஏற்படும் தீவினைகள் நீங்கும். குடும்ப வாழ்க்கை சுகமாகவும், சாந்தமாகவும் அமையும். அரிசி தானம் செய்தால் பயம் நீங்கும், பித்ரு தோஷம் விலகும். வஸ்திரதானம்  செய்தால் ஆயுள் விருத்தி பெறும். தேன் தானம் செய்தால் புத்திர பாக்கியம் பெறலாம். நெல்லிக்காய் தானம் செய்தால் ஞானம், பக்தி, வைராக்யம் கிடைக்கும். தாம்பூல தானம் செய்தால் சுகமான வாழ்வு பெறலாம்.

Previous Post

யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்?

Next Post

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

Next Post
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வரலாறு

Tuticorin cloth envelop, Tuticorin Poly net safety envelop, Tuticorin Kraft paper envelop, Tuticorin multi color envelop
Siddharbhoomi

சித்தர் பூமியின் ஆன்மீக அன்பர்களே..!

உங்களை, சித்தர் பூமி இணையதளத்திற்கு அன்போடு வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

சித்தர் பூமி இணைய தள ஆன்மீக செய்திகள் உங்களின் ஆன்மீக தேடலுக்கு ஒரு படிக்கட்டாக இருக்கும்.

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

உங்களுக்கும் இந்த நிலை வரும் என்பதை மறக்க வேண்டாம்.*

December 4, 2025
கார்த்திகை மாத ராசி பலன் 2025

கார்த்திகை மாத ராசி பலன் 2025

December 3, 2025

சித்தர் வழி, சித்தர் வழி, சித்தர் வழி பாடல் – வெளியீடு சித்தர் பூமி 4K: உடனே கேளுங்கள்!

December 2, 2025
  • About Us
  • Contact

All © 2025 Siddharbhoomi

No Result
View All Result
  • சித்தர்கள்
  • ஆன்மிகம்
  • கோயில்கள்
  • ஜோசியம்
    • ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்
    • எண் கணிதம்
    • குரு பெயர்ச்சி
    • தமிழ் புத்தாண்டு ராசிபலன்!
    • தமிழ் மாத ராசி பலன்கள்
    • பஞ்சாங்கம்
    • ராகு – கேது பெயர்ச்சி
    • புத்தாண்டுப் பிறந்தநாள் பலன்கள்
  • வரலாறு
    • பொன் மொழிகள்
    • கதைகள்
    • வரலாற்றில் அன்று
  • Youtube
  • ஆன்மீக பாடல்கள்
  • Contact

All © 2025 Siddharbhoomi

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Translate »