ஆச்சர்யப்படுத்தும் அமர்நாத் குகைக்கோவில்.
இந்த சிந்தனையை எனக்கு வழங்கியதற்கு நன்றி ஈசனே.. 5000 ஆண்டுகளுக்கு
பழமையான அமர்நாத் குடைவரைகள்.)
செயற்கையான மனிதனையே உருவாக்கும் அளவிற்கு இன்று நாம் அறிவியலில் அசுர
வளர்ச்சி அடைந்திருந்தாலும் கூட, இயற்கை என்ற மாபெரும் சக்திக்குமுன், அதன்
எல்லையில்லா ஆற்றலிடம் மண்டியிட்டு தோற்றுத்துத்தான் போய்விடுகிறோம்
என்பதில் எவர்க்கும் மாற்று கருத்து இருக்காது என்று கருதுகிறேன்.
எங்கும் எதிலும் அறிவியலின் அபிரிமிதமான வளர்ச்சி புரையோடிகிடக்கும் இந்த
காலகட்டத்தில் கூட இன்றைய நவீன விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத
கேள்விகள் இருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே?
அப்படிப்பட்ட கேள்வியில் ஒன்றை பற்றித்தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம். அந்த
கேள்வி ஒளிந்திருக்கும் இடம்தான் சுமார் 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமைமிக்க
இந்துக்களின் புனிததலமான அமர்நாத் குகைக்கோவில் (Amarnath Cave Temple).
விஞ்ஞானத்தால் பதிலளிக்க முடியாத அந்த கேள்வியை பற்றி தெரிந்து கொள்வதற்கு
முன்பு முதலில் அந்த கோவில் இருக்கும் இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம்
வாருங்கள். இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஸ்ரீநகரில் இருந்து சுமார் 141
கிலோமீட்டர் தொலைவில், கடல் மட்டத்தில் இருந்து தோராயமாக 13 ஆயிரம் அடி
உயரத்தில் அமைந்திருப்பதுதான் அமர்நாத் குகைக்கோவில்.
இந்துக்களின் புராண இதிகாசங்களின்படி இங்குதான் உயிர்களின் மூல ஆதாரமான
சிவன், தனது மனைவியான பார்வதிக்கு வாழ்வியலின் ரகசியங்கள் பற்றி போதித்ததாக
கூறப்படுகிறது. இந்துக்களின் சிவ வழிபாட்டு தளங்களில் முதன்மையானதாக
கருதப்படும் இங்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கும் முன்பே பக்தர்கள் யாத்திரையாகவே
வந்து வழிபட்டு சென்றிருக்கிறார்கள் என்று இந்துக்களின் இதிகாசங்களும்
புராணங்களும் குறிப்பிடுகின்றன.
இக்கோவிலை அடைய நாம் முதலில், ஸ்ரீநகரில் இருந்து 95 கிலோ மீட்டர் தொலைவில்
அமைந்துள்ள இமயமலையின் அடிவாரதத்தில் அமைந்துள்ள பகல்காம் (Pahalgam)
என்ற இடத்தை அடைய வேண்டும். பகல்காம் வரை செல்ல சாலை வசதிகள் உண்டு.
இந்த பகல்காம் கடல் மட்டத்தில் இருந்து கிட்டதட்ட 7,200 அடி உயரத்தில்
அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இமயமலையின் அடிவாரத்திலிருந்து
அதாவது பகல்காமில் இருந்து அமர்நாத் பனிகுகைக்கு செல்ல செங்குத்தான
பனிபாறைகளுக்கு நடுவே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும்.
பக்கதர்கள் பெரும்பாலும் பகல்காமில் இருந்து அமர்நாத்திற்கு, மூன்று அல்லது நான்கு
நாட்களில் கால்நடையாக நடந்துதான் செல்கிறார்கள். நடக்க முடியாதவர்கள் குதிரை,
பல்லக்கு, டோலி போன்றவற்றில் பயணம் செய்கிறார்கள்.
சுமார் 150 அடி உயரம் மற்றும் அகலம் கொண்ட அமர்நாத் குகைக்குள், மலையின் மேல்
பகுதியில் இருந்து வரும் தண்ணீர், குகையின் பின்புறம் உள்ள பாறையின் நடுவில்
கொட்டி, அப்படியே உறைந்து பனிக்கட்டியாக மாறி, சிவலிங்கமாக உருப்பெருகிறது.
தண்ணீர் உறைந்து பனிக்கட்டியாக மாறுவது சாதாரண விஷயம்தான்,
வியப்பதிர்க்கில்லை. ஆனால் இங்கே ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டங்களில்
அதுவும் லிங்க வடிவில் தண்ணீர் பனிக்கட்டியாக உறைவதுதான், இதுவரை புரியாத
அதிசயமாக உள்ளது. இதில் எந்த விஞ்ஞானமோ அல்லது செயற்கையோ கிடையாது.
இங்கே இன்னுமொரு அதிசயம் உங்களுக்கு காத்திருக்கிறது, பனிமலை சூழ்ந்த
அமர்நாத்தில் எந்த விலங்கினங்களையும், பறவைகளையும் காண முடியாது. காரணம்
அங்கே எந்த உயிரினமும் வாழ முடியாது என்பதுதான். இங்குதான் நம்
விஞ்ஞானத்தால் இன்றுவரை பதிலளிக்க இயலாத ஆச்சர்யம்
நடந்தேறிக்கொண்டிருக்கிறது. உயிர்கள் வாழ தகுதியற்ற சூழல் நிலவும் அமர்நாத்
குகைக் கோவிலில் இன்றுவரை ஒரு ஜோடி மலைபுறாக்கள் மட்டும் எப்போதும்
வாழ்ந்துகொண்டிருக்கிறது, இவை எப்படி உயிர் வாழ்கிறது என்ற கேள்விக்கு இதுவரை
இன்றைய நவீன விஞ்ஞானத்திடம் இருந்து பதில் இல்லை.
அதிசய பனிலிங்கத்தை தரிசனம் செய்வதோடு அமர்நாத் யாத்திரை நிறைவு
பெறுவதில்லை. அந்தக் குகையில் வசிக்கும் இந்த ஜோடி புறாக்களைப் தரிசித்தால்
மட்டுமே அமர்நாத் யாத்திரை நிறைவு பெறும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
இறைவனும், இறைவியுமே புறாக்கள் வடிவில் காட்சி தருகிறார்கள் என்பது
பக்தர்களின் அசையாத நம்பிக்கை. விஞ்ஞானம் தோற்றுப்போன வெகு சொற்ப
இடங்களில் அமர்நாத்தும் ஒன்று. என்பதே உண்மை.
கங்கைச் சடையன் சிவபெருமானுக்கு தென்னாட்டில் மட்டுமின்றி, வடநாட்டிலும் பல
கோயில்கள் உள்ளன. அதில் உன்னதமான ஒரு சிவஸ்தலம் தெற்கு காஷ்மீர் பகுதியில்
ஸ்ரீநகரில் உள்ள அமர்நாத் குகைக் கோயில்! நெடிதுயர்ந்த இமயமலைத் தொடரில்
கடல்மட்டத்திலிருந்து சுமார் 3888 மீட்டர் (12756 அடி) உயரத்தில் உள்ளது இந்தக் குகைக்
கோயில்.
முழுவதும் பனி மூடி வெள்ளி ஜரிகை ஆடையைப் போர்த்தியது போன்ற விவரிக்க
முடியாத அழகுடன் காட்சி அளிக்கிறது அடர்ந்த மலைத் தொடர். நாங்கள் சென்றபோது
தாங்கக் கூடிய அளவு குளிர்தான். கார்கில், லடாக் பகுதிகள் அருகில் இருப்பதால்
அன்னியர் ஊடுருவும் அபாயம் எந்த நேரமும் இருக்கிறது. அன்னியர்களால்
யாத்ரீகர்களுக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்கு மத்திய ரிசர்வ்
போலீஸ் என, காவல்துறைப் பட்டாளமே பொதுமக்களுக்கு அரணாக நிற்கின்றனர்.
இந்தப் பனி லிங்க வடிவத்துக்கு என்ன விசேஷம்! ஹிமவான் மகளான
உமாமகேஸ்வரிக்கு ஒரு பெரிய சந்தேகம்! உலகுக்கே தந்தையான தாங்கள், கழுத்தில்
பல கபாலங்கள் கோர்க்கப்பட்ட மாலையை ஏன் தரித்திருக்கிறீர்கள்? என்று.
தாக்ஷாயணி ஒவ்வொரு முறையும் நீ மறைந்து மறுபடி அவதரிக்கும்போது ஒரு
கபாலத்தை மாலையில் சேர்த்துக் கொள்வேன் என்றார் பொன்னார் மேனியன்!
அப்படியா! நான் அடிக்கடி மறைந்து விடுகிறேன், தாங்கள் மட்டும் நிலைத்து இருப்பது
எப்படி? என்றாள் பாலாம்பிகை. இது சிருஷ்டி ரகசியம்! சமயம் வரும்போது உனக்கு
எடுத்துரைப்பேன் என்றார் நமசிவாயமூர்த்தி!காலங்கள் உருண்டோடின. மதி அணி
சூலினியான தேவிக்கு சிருஷ்டி ரகசியத்தை உபதேசிக்க எண்ணினார். ஈசன்!
ஈசன், பார்வதி, விநாயகர் சகிதமான நந்தி வாகனத்தில் கயிலை மலையை விட்டுப்
புறப்பட்டுச் சென்றார். சிவபெருமான் உன்னதமான பிறப்புத் தத்துவத்தை
எடுத்துரைக்கும்போது சதிதேவி மட்டுமே தன்னுடன் இருக்க வேண்டும் என்று எண்ணம்
கொண்டார். செல்லும் வழியில் தன்னிடமிருந்து ஒவ்வொரு பொருளையும் களைந்தார்!
அப்படி, நந்தி தேவரை (காளையை) விட்ட இடம் பெயில் காவுன் (ஹிந்தியில் நந்திக்
கிராமம்). இதுதான் திரிந்து பெஹல்காம். சந்திரனை விட்ட இடம் சேஷநாக். விநாயகரை
நிறுத்திய இடம் மஹா கணேஷ் பர்லத்- மஹா குணாஸ். பஞ்ச பூதங்களைத் துறந்த
இடம்- பஞ்சதாரணி. குகைக்கு அருகில் கங்கா நதியைத் துறந்த இடத்திலிருந்து
அமராவதி வருகிறது. உலகின் பற்றுக்களை துறந்து இறைத் தாண்டவம் ஆடிய சிவ
சக்தி ஸ்வரூபங்கள் குகையை அடைந்தனர். மான் தோலை ஆசனமாக இட்டு அதன்
மேல் தான் அமர்ந்து அருகில் தன்னில் பாதியான மங்கை நல்லாளையும் அமர
வைத்துக்கொண்டு சிருஷ்டி தத்துவத்தை விளக்கினார் பிறையணிச் சடையன்.
குகையைச் சுற்றி உள்ள உயிரினங்கள் சிருஷ்டி ரகசியத்தைத் தெரிந்துக் கொள்ளக்
கூடாது என்பதால் இறைவன் பெரிய தீயை (காலாக்னி) உருவாக்கினார். மான்
தோலுக்கு அடியில் ஒரு புறா முட்டை இருந்தது. முட்டை காலக்னியால்
அழியவில்லை. அதிலிருந்த இரு உயிர்களும் கயிலை மலையான் அளித்த
விளக்கங்களைக் கேட்டு, சாகாவரம் பெற்றன!குகையில் லிங்க வடிவங்களாக சூட்சுமப்
பொருளாக உலகை ரட்சிக்க பார்வதியும் பரமேஸ்வரனும் காட்சி தருகின்றனர். பிருகு
முனிவர்தான் முதன் முதலில் அமர்நாத் தரிசனம் செய்திருக்கிறார். பிருகு
ஸம்ஹிதையில் இந்த வரலாறு இடம் பெற்றிருக்கிறது.
இந்தக் குகைக் கோயிலின் வரலாறு 5000 வருடங்களுக்கும் மேலானது போலும்! கி.மு.
300-ல் ஆரிய குல அரசர்களால் பூஜிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரின் வரலாற்றுப் பதிவுகளைக் கொண்ட ராஜதரங்கினி என்ற புத்தகத்தில்
அமரேஸ்வர் என்றும் அமர்நாத் என்றும் இந்த இறைவன் போற்றப்படுகிறார். கி.பி. 11-ம்
நூற்றாண்டில் சூரிய மதி என்ற ஒரு ராணி இந்தக் கோயிலுக்கு திரிசூலங்கள், பூஜைப்
பொருட்கள் போன்றவற்றை அளித்ததாக வரலாறு.
15-ம் நூற்றாண்டில் பூட்டா மாலிக் என்ற இஸ்லாமியச் சிறுவன் ஆடு மேய்த்துக்
கொண்டிருந்தான். அவனிடம் பெரியவர் ஒருவர் கூடை நிறைய நிலக்கரியைக்
கொடுத்து வீட்டுக்கு எடுத்துச் செல் என்றாராம். தமது இல்லத்தை அடைந்த சிறுவனுக்கு
ஆச்சரியம்! கூடையில் தங்கக் காசுகள்! பூட்டா மாலிக்குடன் ஊர் மக்களும் சேர்ந்து
மறுபடியும் மலை மேல் ஏறிப் பார்த்தனர். யாரையும் காணவில்லை! அங்கு ஒரு
குகையில் 3 பனி லிங்க வடிவங்கள் மட்டும் காட்சி அளித்தனவாம். அன்றிலிருந்துதான்
இத்தல ஈசனை மக்கள் தரிசிக்க ஆரம்பித்தனர்.
ஜூன் மாதம் கடைசியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 10-15 தேதிவரை அமர்நாத் யாத்திரை
நடக்கிறது. இதை ச்ரவண மேளா என்கின்றனர்.இந்தக் குகையும், மலையும்
சுண்ணாம்புக் கல் வகையைச் சேர்ந்தவை. பனி உருகிக் கீழே விழுந்து தரையில்
சேர்ந்து, மறுபடி உறையும்போது பல வடிவங்கள் ஏற்படுமாம். இவை எனப்படுகின்றன.
அப்படி ஏற்படுபவை பவுர்ணமி, அமாவாசை கால சுழற்சிக்கு ஏற்ப அளவு அதிகரிக்கும்
அல்லது குறையும். இது அறிவியில் அடிப்படை. குகைக் கோயிலில் இந்த பனியில்
ஊறிய சுண்ணாம்பு சாந்தை பிரசாதமாகத் தருகிறார்கள். பனி நீரையே தீர்த்தமாகவும்
தருகிறார்கள்.
அமர்நாத் குகையை அடைவதற்கு முன்பு சிவபெருமான் செய்த அதிர்ச்சியளிக்கும் 7
விஷயங்கள்!!!
***********************************
சிவபெருமானுக்கு இருக்கும் பல கோவில்களில், அமர்நாத் குகை தான் உலகப் புகழ்
வாய்ந்ததாக விளங்குகிறது. இந்த குகையில் ஐஸ் கட்டியால் உருவான
பனிலிங்கம் மக்களின் நம்பிக்கையை குறிக்கும்.
சின்னமாக கருதப்படுகிறது. இந்த பயணம்
ஆரம்பமாகும் இடத்தில் இருந்து குகைக்கு
சென்றடையும் வரை, வழியில் எண்ணிலடங்கா நிறுத்தங்கள் உள்ளன.
இவையனைத்துமே மிகவும் அழகிய
இடங்களாகும். இவைகள் சிவபெருமானின்
மீதான நம்பிக்கையை இன்னமும் அதிகரிக்க செய்யும்.
அழிவே இல்லாத ரகசியத்தைப் பற்றி
சிவபெருமானின் மனைவியான பார்வதி
தேவியிடம் கூறப்பட்டது தொடர்பான
பழபெரும் முக்கியத்துவத்தை அமர்நாத் குகை கொண்டுள்ளது. அழிவே இல்லாத
ரகசியத்தை பற்றி கூற சிவபெருமானை பார்வதி தேவியை வலியுறுத்திய போது, இந்த
குகையை நோக்கி பயணிக்க அவர் முடிவெடுத்தார்.
குகைக்கு போகும் வழியில் அவர் செய்த சில
விஷயங்கள், பக்தர்களுக்கு மிகப்பெரிய
விஷயங்களாக திகழ்கிறது. இந்த சில
விஷயங்களால், குகைக்கு செல்லும்
முழுமையான பாதையும் பேரின்பத்தை
அளிக்கிறது.
அமர் கதா பற்றிய ரகசியத்தைக் கூற தன் மகன், வாகனம் ஆகியவற்றை
தனிமைப்படுத்தப்பட்ட பல இடங்களில் விட்டார். அதனால் தான் இந்த இடங்கள்
அனைத்தும் புனித ஸ்தலங்களாக
மாறியுள்ளது. அமர்நாத் பயணத்திற்கு
இரண்டு வழிகள் உள்ளது – பஹல்கம் மற்றும் சோன்மார்க் பல்டல். புராணத்தின் படி,
இந்த குகையை அடைய பஹல்கம் பாதையை தான் சிவபெருமான் பயன்படுத்தினார்.
இந்த பாதையில் உள்ள முக்கிய இடங்களை
பற்றியும், அதனை பற்றிய சுவாரஸ்யமான
சில தகவல்களை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்…
அமரத்துவத்தைப் பற்றி கூற பார்வதி
தேவியை சிவபெருமான் குகைக்கு அழைத்து செல்லும் போது, தன் வாகனமான
நந்தியை புறப்பட்ட இடத்திலேயே விட்டு விட்டார்.
இந்த இடம் தான் பின்னாளில் பஹல்கம் என.அழைக்கப்பட்டது. இந்த இடம்
மலைகளால் சூழப்பட்டிருக்கிறது.
பஹல்கமிற்கு அடுத்து வரும் இடம் தான்
சந்தன்பாடி. நம்பிக்கைகளின் படி, இந்த
இடத்தில் தனித்துவமான விஷயம் ஒன்றினை சிவபெருமான் செய்துள்ளார்.
சந்திரமௌலி என அழைக்கப்படும் சிவபெருமான் தலையில் இருக்கும் நிலவை,
இங்கே தான் அவர் துறந்துள்ளார். சிவபெருமான் வரும் வரை அந்த
நிலவு இங்கேயே காத்திருந்திருக்கிறது.
அதனால் தான் இந்த இடத்திற்கு சந்தன்பாடி
என பெயர் வந்தது.
சந்தன்படிக்கு சற்று மேலே தான் பிஸு டாப்
அமைந்துள்ளது. அமர்நாத் தரிசனத்துடன்
தொடர்பை கொண்டுள்ளதால் இந்த இடம்
முக்கியத்துவத்தை பெறுகிறது. அமர்நாத்
தரிசனத்திற்காக கடவுள்களுக்கும்,
அசுரர்களுக்கும் இடையே பெரிய சண்டையே நடந்துள்ளது. அந்த நேரம்
சிவபெருமானுடைய உதவியோடு,
அசுரர்களை அழித்தார்கள் கடவுள்கள்.
அசுரர்களின் சடலங்களை கொண்டு ஒரு
மலையை உருவாக்கினார்கள். அதிலிருந்து
இந்த இடத்திற்கு பிஸு டாப் என பெயர்
வந்தது.
பிஸு டாப்பிற்கு அடுத்து வரும் இடம்
சேஷ்நாக். தன் கழுத்தில் இருந்த பாம்பை இந்த இடத்தில் தான் சிவபெருமான் விட்டுச்
சென்றுள்ளார். இங்கு நீல நிறத்திலான ஏரி
ஒன்று உள்ளது. இந்த இடம் தான் சேஷ்நாக்
என்பதற்கு இதுவே அத்தாட்சியாக
விளங்குகிறது.
தன் மகனான விநாயகரை இங்கே தான்
சிவபெருமான் விட்டு சென்றார் என
நம்பப்படுகிறது. இந்த இடத்தில் பல
நீர்வீழ்ச்சிகளும் அழகிய இயற்கை காட்சிகளும் நிறைந்துள்ளது. குளிர் காலத்தில்
இங்கே கடுமையான குளிர் நிலவும்.
தன்னுடைய ஐந்து பஞ்ச பூதமான ஆகாயம்,
காற்று, நீர், நெருப்பு மற்றும் பூமியை இங்கே
தான் சிவபெருமான் விட்டுச் சென்றார் என
நம்பப்படுகிறது. இந்த இடத்தில் தான் ஐந்து
நதிகள் சங்கமமாகிறது.
சிவபெருமானின் கூந்தல் சடையில் இருந்து தான் ஐந்து நதிகளும் இங்கே பாய்கிறது
என நம்பப்படுகிறது.
இந்த பயணத்தின் கடைசி இடம் தான் இது. 13500 அடி உயரத்தில் அமைந்துள்ளது இந்த
குகை. இந்த குகைக்கு செல்லும் பாதையில் 3கி.மீ. வரை பனியால் சூழ்ந்திருக்கும்.
பனியால் சூழப்பட்டுள்ள ஆற்றை கடந்தவுடன் இந்த குகையை கடைசியாக காணலாம்.
100 அடி நீளமும் 150 அடி அகலமும் கொண்டதாகும் இந்த குகை. இந்த குகையின்
உள்ளே தான் பனியால் உருவான பனி லிங்கத்தை காணலாம்.
இந்த குகையில் தான் அமரத்துவத்தைப் பற்றிய ரகசியத்தை பார்வதி தேவியிடம்
சிவபெருமான் கூறியுள்ளார்.
ஆன ஐந்தெழுத்திலேஅண்டமும் அகண்டமும்..
ஆன ஐந்தெழுத்திலே ஆதியான மூவரும்..
ஆன ஐந்தெழுத்திலே அகாரமும் மகாரமும்..
ஆன ஐந்தெழுத்திலே அடங்கலாவலுற்றதே…
ஓம் நமசிவாய .. ஓம்…











