கொஞ்சம் விளக்கம்
மாதம் ஒருநாள் அமாவாசை அன்று காலம் சென்ற அப்பா அம்மா, தாத்தா பாட்டிகள், கொள்ளு தாத்தா பாட்டிகளுக்கு என்று மூன்று தலைமுறையை நினைத்து அவர்கள் பெயர், கோத்ரம், உறவு முறை சொல்லி நாம் நன்றியோடு, பக்தியோடு இறைக்கும், அர்ப்பணிக்கும், எள்ளும் ஜலமும் தான் பித்ரு தர்ப்பணம். கோத்ரம், வேதம், ரிஷி மூலம், சூத்ரம்
எல்லாம் ஒவ்வொருக்கும் மாறிவரும் என்பதால் நான் அதை தொடப்போவதில்லை.
எள்ளும் ஜலமும் தான் மறைந்த முன்னோர்களுக்கு ஆகாரமாக செல்கிறது. ஆவலோடு இதற்காக காத்தி ருக் கும் வர்கள் அதைப் பெற்று நம்மை வாழ்த்துவது குடும்பத்துக்கு ரக்ஷை.இப்படி தர்ப்பணம் செய்யும் நாட்கள் அமாவாசை . மாதப்பிறப்பு , கிரஹணம், தவிர மஹாளய பக்ஷம், ஸ்ரார்த்தம் திதி அன்று .
இதற்கு தேவை தர்ப்பை புல் , தாம்பாளம், எள் , ஜலம் , மனதில் ஸ்ரத்தை.
முதலில் ஆசமனம் செயது விட்டு, தர்ப்பையால் மோதி ரம் போல் செய்யப்பட்டுள்ள பவித்ரம் என்பதை அணிந்து நம்மை பரிசுத்தமாக்கிக் கொண்டு தர்ப் பணம் செயகிறோம். காலுக்கு கீழே போட்டுக் கொள்ளும் தர்ப்பை தான் நமக்கு தர்ப்பாசனம். ரெண்டு தர்ப்பையை கையில் இறுக்கிக்கொண்டு முதலில் சங்கல்பம் செயகிறோம்.
”சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ன உபசாந்தயே.
ஓம் பூஹு ஓம் புவ: ஓம் சுவ: ஓம் மஹ: ஓம் தப: ஓகும் சத்யம்
ஓம் தத் ஸவிதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோன: ப்ரசோதயாத். ஓமாப: ஜோதீரஸோ அம்ருதம் ப்ரம்மா ஓம் பூர்புவஸ்ஸுவரோம்.
மமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி
மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம்
ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ
ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச
யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
அத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய
ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே
அஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ:
தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே………….. நாம ஸம்வத்ஸரே ……….. அயனே………….. ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம் – ப்ராசீணாவீதி)
இதற்கப்பறம் பூணலை வலமிருந்து இடமாக்கிக்கொண்டு தர்ப்பணம் செய்கிறோம்.
……கோத்ராணாம் ……ஸர்மணாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)….கோத்ரானாம்————
—-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ
ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)
………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய
ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்.
…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ:
மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
கையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.
பூணல் இடம்:
தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும்
அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா அதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை.
தர்பையை எறிந்து விடவும்
கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும்.
இந்த மந்த்ரம் சொல்லி.
அபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:
பூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)
அபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.
பூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் ..
“ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”
அஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்………… கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி.
ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.
மற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………
(அம்மா ஆத்து கோத்ரம்)…………. ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி.
… என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்.
ஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா: பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்
மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.
வர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும்
இடது காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.
1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி .
2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. …………. கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \
மாத்ரூ வர்க்கம்:
…………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி……. (மூன்று முறை)
கோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
கோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
மாதா மஹ வர்க்கம் தர்பணம்:
1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி
3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.
…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை.)
ஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி (மூன்று முறை)
ஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
பூணல் வலம்
நமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை,
நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே
அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.
இதை சொல்லிக் கொண்டே 3 தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.
உத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி
அஸ்மாத் கூர்ச்சாத் பித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.
பவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து,
யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை: குசோதகை: த்ருப்யத த்ருப்யத த்ருப்யத
பின்னர்
ஓம் காயேன வாசா மனஸேந்த்ரி யைர்வா
புத்த யாத்ம னாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்|
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
நாராயணா யேதி ஸமர்ப்பயாமி
ஓம் ஸர்வம் ஸ்ரீ் க்ருஷ்ணார்ப்பணம் அஸ்து!
என்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.என்று சொல்லிக்கொண்டு கையில் இருக்கும் எல்லா கட்டை பில் தர்பத்துடன் ஒரு பஞ்சபாத்ர நிறைய ஜலம் விட்டு தாம்பாளத்தில் ஜலத்தை விட்டு தர்பங்களையும் போட்டுவிடவும்.
பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்செய்யவும்.
பிறகு விபூதி இட்டு கொள்ளவும்.
விபூதி இட்டுக்க மந்த்ரம்.
த்ரயம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டி வர்தனம்/உர்வாருகம் இவ பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம் அம்ருதாத்———————————-
சுருக்கமாக மேலே சொன்ன தர்ப்பண மந்திரம் அர்த்தம் .
அசுத்தமானவனாக இருந்தாலும், சுத்தமானவனாக இருந்தாலும், எந்த நிலையில்ருந்தாலும் , என்னொருவன் தாமரை மலர் திருவடிகள் கொண்ட கோவிந்தனை, கிருஷ்ணனை, நினைக்கின்றானோ, அவன் சுத்தவனாகிறான். மனதாலோ ,வாக்கினாலோ, செயலாலோ வந்தடைந்த பாவம் எல்லாமே ஸ்ரீ ராம ஸ்மரணையால் அழிந்து போகும் . இதில் சந்தேகமில்லை .
ஸ்ரீ ராம ராம எனும்போது,,திதியும் விஷ்ணு ,வாரமும் விஷ்ணு,நக்ஷத்திரமும் ,யோகமும் ,காரணமும் எல்லாம் விஷ்ணுவாகிவிடுகிறது. உலகனைத்தும் விஷ்ணுவே .எல்லாமே ஸ்ரீ கோவிந்த ,கோவிந்த கோவிந்தனே !
இப்போது புருஷோத்தமனனான பகவான் விஷ்ணுவின் கட்டளையால் தொழில் புரியும் பிரம்மாவின் இரண்டாவது பரார்தத்தில், ஸ்வேதவராக கல்பத்தில் வைவஸ்வத மன்வந்தரத்தில் ,இருபத்தி எட்டாவது சதுர் யுகத்தில் ,கலியுகத்தில்,முதல் பாதத்தில் ,ஜம்பூத்வீபத்தில் ,பாரத வர்ஷத்தில் ,பரத கண்டத்தில் ,மேருவின் தெற்குப் பக்கத்தில் ,இப்போது ,நடை முறையிலிருக்கும் சகாப்தத்தில் ,பிரபவாதி தொடங்கி அறுபது ஆண்டுககளில் ,…..இன்ன ஸம்வரத்தில் ,…இன்ன அயனத்தில் ,இன்ன ருதுவில்,இன்ன மாசத்தில் ,கிருஷ்ண , பக்ஷத்தில் , அமாவாசை புண்ணிய திதியில் வசு ,ருத்ர ஆதித்ய ஸ்வரூபிகளாய் இருக்கும்,எங்களுடைய பித்ரு,(அப்பா) பிதாமக( அப்பா வழி தாத்தா), ப்ரபிதாமகர்களுக்கும், (அப்பாவின் தாத்தா) மாத்ரு, பிதாமஹி, பிரபிதாமஹிக்களுக்கும், பத்னிகளுடன் கூடிய மாத மஹர்(அம்மாவின் அப்பா) ,மாதாவின் பிதாமஹர்(அம்மாவின் தாத்தா) ,மாதாவின் ப்ரபிதமஹர்(அம்மாவின் கொள்ளு தாத்தா) ஆகியோருக்கும்,இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் ,அழிவில்லாத திருப்தி ஏற்படும் பொருட்டு ,அமாவசை புண்ணிய காலத்தில் எள்ளினால் தர்ப்பணம் செய்கிறேன்.”பரிஸ்ருதம் ஸ்வதா ஸ்த தர்பயதே மே பித்ரூன்’ — ” ஓ தீர்த்தமே கர்ம வசத்தால் என் முன்னோர்கள் ஒரு வேளை மனுஷ்ய, தேவ, ராக்ஷச, மரம், கொடி, சண்டாளன் முதலிய ஜென்மாவை அடைந்து இருந்தால், அவர்களுக்கு உசிதமான அன்னம், அம்ருதம், நெய், பால்,ரத்தம்,சூரை (கள்) முதலிய அவர்களுக்கு உசிதமான உணவாகி,பித்ரு அன்னமாக இருந்து என் பித்ருக்களை சந்தோஷப்படுத்து.
‘அபே தவீதா விச ஸர்ப்ப தாதோ யேத்ரஸ்த புராணா யே ச நூதனா: அதாதி தம் யமோ வஸானம் ப்ருதிவ்யா அக்ரனிமம் பிதரோ லோகமஸ்மை”
ஹே, யம தூதர்களே நீங்கள் இங்கு யமன் உத்திரவினால் தங்கி இருக்கிறீர்கள் அல்லவா?. வெகு காலம் இருப்பவரும் இப்போது வந்தவர்களுமான நீங்கள் இடத்தை விட்டு தாமே செல்லுங்கள். பித்ரு தர்ப்பணம் செய்யும் வரை எங்களுக்கு இந்த இடத்தை யமன் சொந்தமாக செய்திருக்கிறார். பித்ருக்களும் இந்த இடத்தில் வந்து தங்குவதற்கு தக்க இடம் என எங்களுக்கு தந்தனர்.
‘அபஹதா அஸுரா ரக்ஷாகும் ஸீ பிஶாசா யே க்ஷயந்தி ப்ரித்வீ மனு அன்யத்ரே தோ கச்சந்து யத்ரைஷாம் கதம் மன;” – இந்த இடத்தை அண்டி வசிக்கின்ற அஸுரர், ராக்ஷசர், பிஶாசர், முதலியவர் —பித்ரு கர்மாவுக்கு விக்னம் செய்பவர்கள் –இந்த இடத்தை விட்டு அவர் மனம் எங்கு செல்கிறதோ அங்கு செல்லட்டும்.
”அ பவித்ர: பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர ஸுசி: பூர் புவஸ்ஸுவோ பூர் புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ”
நான் மஹா விஷ்ணு ஸ்மரணையுடன் தெளிக்கும் இந்த தண்ணீர் இந்த இடத்தை பவித்ர மாக்கட்டும். நம் மனது ஒருமுகப்பட்டு பித்ருக்களின் உருவ ஞாபகம் மனதில் தோன்றும். வாய் மந்திரத்தை சொல்லும்.
”ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வை: ப்ரஜா மஸ்மப்யம் ததோ ரயீஞ்ச தீர்காயுத்வஞ்ச ஶதஶாரதஞ்ச”
ஹே, பித்ருக்களே மிக நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு ஸந்ததி, செல்வம், நீண்ட ஆயுள் இவைகளை கொடுத்துக்கொண்டு சிறந்த ஆகாச மார்க்கமாக இங்கு வாருங்கள்.
”அஸ்மின் கூர்ச்சே ———கோத்ரான்——–ஶர்மண: வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ———-கோத்ரா:———-தா: வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபா: அஸ்மத் மாத்ரு பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச ஆவாஹயாமி.’
என்னுடைய இந்த தர்ப்பை புல்லில் எனது இந்த கோத்ரத்தை உடைய இந்த பெயர் உடைய வஸு, ருத்ர, ஆதித்ய ஸ்வரூபர்களான இறந்து போன எனது தகப்பனார், தாத்தா, கொள்ளு தாத்தா , எனது இந்த கோத்திரத்தை உடைய இந்த பெயர்கள் உடைய எனது தாய், பாட்டி, கொள்ளு பாட்டி இவர்களை ஆவாஹனம் செய்ய வேண்டுகிறேன்.
”ஸக்ருதாச்சின்னம் பர்ஹி ரூர்ணா ம்ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்து மே பிதரஸ் ஸோம்யா: பிதா மஹா; ப்ரபிதா மஹா: ச அனுகைஸ்ஸஹ”
‘ஏ, தர்ப்பைப் புல்லே நீ ஒரு முறை என்னால் அறுக்கப்பட்டாய். உன்னை பரப்புகிறேன். எங்கள் பித்ருகளுக்கு அதி ம்ருதுவான ஆஸனமாக இரு. இதில் அனுக்கிரஹ மூர்த்திகளான என் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா அம்மாவின் அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா தங்களை சார்ந்தவர்களுடன் அமரட்டும்.
”1:1 உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமா: பிதர: ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூரவ்ருகா ரிதக்ஞஆஸ் தேனோஅவந்து பிதரோஹவேஷு.”
சிறந்தவர்களான நம் பித்ருக்கள் நாம் அளிக்கும் உணவை ஏற்று அருள் புரியட்டும். நாம் அழைத்து வந்த பித்ருக்கள் நாம் தண்டனை பெறத்தக்க தப்புகள் செய்தாலும் செய்தாலும் , நம்மை கோபித்து சபிக்காமல், நாம் அளித்ததை ஏற்று கருணை உள்ளவர்களாக , நம்மை காப்பாற்றட்டும்.
பித்ருக்களில் திவ்ய பித்ருக்கள்; அதிவ்ய பித்ருக்கள் என இரு வகை படுவர். ஒரு வகையினர் அழைத்தால் மட்டும் வருவர். மற்றொரு வகையினர் உங்கள் வீட்டில் எப்போதுமே இருப்பர். காலை ஸூர்ய உதயத்தின் போது உங்கள் வீட்டிற்கு வருகிறார்கள். அப்போது வீட்டு வாசலில் சாணி தண்ணீர் தெளித்து கோலம் போட்டு வைத்தால் தான் உள்ளே வருகிறார்கள். குடுமி தலைமுடி தண்ணீரையும் , நீங்கள் வஸ்த்ரம் பிழியும் தண்ணீரையும் பருகுகிறார்கள். தற்காலத்தில் குடுமியும் இல்லை. வஸ்த்ரம் மந்திரம் இல்லாமல் வாஷிங் மெஷின் பிழிந்து கொடுக்கிறது.
”ததாஸ்து ததாஸ்து ” அப்படியே நடக்கட்டும் என்று சொல்லி கொண்டிருகிறார்கள் என்று முனிவர்கள் ஞான த்ருஷ்டியில் பார்த்து அந்த காலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள்.’ இதை செய்யாதே வேண்டாம்” என்று நம் முன்னோர்கள் சொல்வது நம் காதில் விழ வில்லை. முற்பிறவிகளில் செய்த பாபங்கள் இது நம் காதில் விழாமல் தடுக்கிறது என்று ரிஷிகள் சொல்கிறார்கள்.
1-2. அங்கிரஸோ ந: பிதரோ நவக்வா அதர்வாணோ ப்ருகவஸ் ஸோம்யாஸ:தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞ்இயானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம: ———-கோத்ரான்——சர்மண: வசு ரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி”.
நமது பித்ருக்களை அங்கீரஸ், அதர்வா, ப்ருகு என்று அழைக்கிறோம் மிக சிறந்த குணமுள்ளவர்கள். ஸந்ததிகளிடம் மங்காத அன்புள்ளவர்கள். யாகத்தினால் ஆராதிக்க தக்க அவர்களது மங்களகரமான மனதில் நாம் இடம் பெற வேண்டும். அதுவே அவர்கள் ஆசியைப் பெற உதவும்.
”:3. ஆயந்துந; பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ்வாத்தா: பதிபிர் தேவ யானை: அஸ்மின் யக்ஞ்யே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான்.——–கோத்ரான்——–சர்மண: வஸுரூபான் பித்ருன் ஸ்வதா நமஸ் தர்பயாமி’
யாகம் செய்யாமல் பித்ரு லோகம் சென்ற அக்னிஷ்வாத்தர் என்பவரும் மனோ வேகம் உள்ளவருமான பித்ருக்கள் தேவ யான மார்கமாக இங்கு வரட்டும். இங்கு நாம் செய்யும் தர்ப்பண யக்ஞ்யத்தில் ஸ்வதா என்று அளிக்கும் உணவினால் சந்தோஷம் அடையட்டும். பர லோகத்தில் நமக்காக பரிந்து பேசட்டும். நம்மை காக்கட்டும்.
” பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: பிதா மஹேப்யஸ் ஸ்வதாவிப்யஸ் ஸ்வதா நம: ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நம: ——-கோத்ரான்——-சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.”
ஸ்வதா என்று கூறி அளிக்கும் உணவை விரும்புவர்களான பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹர் ஆகியவர்களுக்கு ஸ்வதா என்று தர்ப்பணம் செய்து வணங்குகிறேன். பித்ருக்கள் உண்டு களிக்கட்டும்
”யே சேஹ பிதரோ யே ச நேஹ யாகும்ஸ்ச வித்மயாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்கும் ஸ்வதயா மதந்தி.——-கோத்ரான் ———சர்மண: ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.”
எல்லாம் அறிந்த ஓ அக்னியே எந்த பித்ருக்கள் இந்த உலகத்தில் உள்ளனர், எவர் இங்கு இல்லையோ எவரை நாம் அறிவோமோ , எவரை நாம் அறிய மாட்டோமோ அவர் அனைவரையும் நீர் அறிவீர். ஆதலால் அவர்க ளுக்கு ஏற்றதாக இந்த உணவை (எள்ளும் தண்ணீரும்) அவர்களுக்கு அளியும். அதனால் அவர்கள் சந்தோஷ மடையட்டும்.
” மதுவாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ: ———–கோத்ரான்——–ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.”
பித்ரு தர்பணம் செய்கின்ற எனக்கு காற்று நன்மையை தரட்டும். நதிகளும், ஓஷதிகளும் மதுரமானதை அளிக்கட்டும்.
”மது நக்த முதோஷஸி மதுமத் பார்திவகும் ரஜ: மது த்யெள ரஸ்து ந: பிதா.———கோத்ரான்——–ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.”
இரவு, காலை, பகல் ஆகிய திரி காலமும் நமக்கு இன்பத்தை தரட்டும். பூமியின் மண் துகள்களும் இன்பத்தை தரட்டும். ஆகாயமும் கபடமில்லாமல் இன்பம் தரட்டும்.”
”மதுமான்னோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: ———-கோத்ரான்——-ஶர்மண: ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.”
மரங்களும் எங்களுக்கு இன்பம் தரட்டும். ஸுர்யன் அதிக தாபமின்றி ஜீவ சக்தியை அளிக்கட்டும்.பசுக்களும் மதுரமான பால் தந்து இன்பம் அளிக்கட்டும். வேண்டும்.










