நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?
3,12,21,30 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 3 எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர். இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.
சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்.
சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.
மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது. பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும்.
உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள்.
பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.
காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.
- 3ஆம் எண்ணுக்கு உகந்தவை:
- நன்மை தரும் முதல் எழுத்துக்கள்
- : C,G,L,S,A,I,J,Q,Y
- நன்மை தரும் தேதிகள்
- : 1,3,9,10,12,18,19,21,27,28,30
- நன்மை தரும் கிழமை
- : வியாழன், ஞாயிறு, செவ்வாய்
- நன்மை தரும் நிறம்
- : மஞ்சள், இளம் சிவப்பு
- நன்மை தரும் ஹோரை
- : குரு
- நன்மை தரும் திசை
- : கிழக்கு
- நன்மை தரும் தொழில்
- : கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,
- அரசியல், ராணுவம், வங்கி.
3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
- ஜெகதீஷ் சந்திரபோஸ்
- : 30.11.1863
- சர்.சி.வி.ராமன்
- : 12.01.1879
- சுவாமி விவேகானந்தர்
- : 12.1.1863
- அலெக்சாண்டர் கிரகாம்பெல்
- : 3.3.1847
- வீரபாண்டிய கட்டபொம்மன்
- : 3.1.1760
- பகவான் ரமணர்
- : 30.12.1879
- ஞானி சுத்தானந்தபாரதி
- : 12.5.1897
- ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)
- : 12.12.1950
- திப்பு சுல்தான்
- : 21.11.1750
- பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
- : 30.10.1908










