பிரச்சனைகளை பேசி தீர்த்த உறவுகளை விட பேசி தீர்க்காமல் பிரிந்த உறவுகளே அதிகம்.
நம்மை பற்றி மனதில் தவறான எண்ணங்கள் இருந்தால்…
நம் வார்த்தைகள் கூட தவறாகவே புரிந்து
கொள்ளப்படும்…
உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும் தைரியமும் தன்னம்பிக்கையும்
வேறு யாராலும் உனக்கு கொடுத்து விட முடியாது..!
சின்ன சின்ன விஷயத்தை
நினைத்து கவலைப்படாதீர்கள்
இன்னும் வாழ்க்கையில்
பார்க்க வேண்டியது
ஏராளமாக உள்ளது
உன் கடமையை செய். அதில் சிறிதும் குறை வைக்காதே. அதனால் வரும் விளைவுகளை பற்றி கவலை படாதே.
கடவுளுக்கு பயப்படத் தேவையில்லை
கர்ம வினைகளுக்கு பயப்படுங்கள்
ஏனென்றால்…
கடவுள் மன்னித்து விடுவார்
கர்ம வினைகள் உங்களை
திரும்பி வந்தே சேரும்..!
ஒருவன் செய்யும் பாவ வினைகள் அவன் காலடியில் நிழலை போல பதுங்கி இருக்கும். அது வெளிப்படும் போது. அது அவனையே கொல்லும்…!!
தீதும் நன்றும் பிறர் தர வாரா..!!











