மறைஞானசம்பந்தர் (சந்தான குரவா்)
குருபூஜை இன்று 29.08.2022 திங்கள் கிழமை சிதம்பரம் அருகே சிங்காரத்தோப்பு பகுதியில் பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது.
இந்த இடத்தில் பிரம்மபுரீஸ்வரரை வசிஷ்ட முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்துள்ளார். திருக்கயிலாய பரம்பரையில் வந்த ஸ்ரீமெய்கண்டார் அருள் மரபில், மூன்றாவது சந்தானாசாரியராக திகழ்பவர் ஸ்ரீமறைஞான சம்பந்தர்.
ஸ்ரீமறைஞான சம்பந்தர் இக்கோயிலில் வழிபட்டு அங்கேயே முக்தியடைந்தார். அந்த இடத்திலேயே அவருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் திருவாவடுதுறை ஆதீனத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.











