குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா.?!
குடும்பத்தில் ஒரே சண்டை சச்சரவா.?! ஒற்றுமையை ஏற்படுத்தும் சங்கு சக்கர விளக்கு..!
குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் சங்கு சக்கர விளக்கு:
தினமும் கடவுளை வணங்கும்போது விளக்கேற்றி வணங்குதல் வேண்டும். அவ்வாறு விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் தெய்வீக பேரொளியும், லட்சுமி கடாட்சமும் ஒன்று சேரும் என்பது ஐதீகம்.
நோய் தொற்றுகளை பரவவிடாமல் தடுக்கும் சக்தி, சில எண்ணெய் வகைகளுக்கும், தீபத்திற்கும் உண்டு. அதனால்தான் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுங்கள் என நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் தீப ஒளியில் கலைமகள் சரஸ்வதிதேவி வந்து அமர்கிறாள். தீபத்தின் சுடரில் திருமகளான லட்சுமியும், தீபத்தின் வெப்பத்தில் மலைமகளான பார்வதிதேவியும் வந்து குடியிருப்பதாக ஐதீகம்.
பொதுவாக சங்கு சக்கரம் பெருமாளுக்கு உகந்ததாகும். சங்கு சக்கர விளக்கை நாள்தோறும் வீட்டில் ஏற்றி வருவதால் பெருமாளின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று இல்லம் சுபிட்சம் பெறும்.
பித்தளையால் செய்யப்பட்ட சங்கு சக்கர விளக்கை நாள்தோறும் வீட்டில் ஏற்றி வருவதால் குடும்பத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். மேலும், அறிவுத்திறன் மேம்படும்.
சங்கு சக்கர விளக்கினை வீட்டில் ஏற்றி வழிபட்டு வந்தால் அனைத்து எதிர்மறை எண்ணங்களும் நீங்கி வாழ்க்கையில் ஒளி வீசும்.











