பூந்தமல்லி. இந்த ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. இதுவே பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் என்பதாகும்.
இந்த கோவில் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று அங்காரக (செவ்வாய்) நவக்ரக ஸ்தலமுமாகும். இது சென்னை நகரில் உள்ள செவ்வாய்க்க்கான நவக்ரக ஸ்தலமுமாகும் (தொண்டை மண்டலம்).
கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார ஸ்தலமுமாகும்.
இந்த ஸ்தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.
சிவன் சந்நதிக்கு வலப்புறம் மண்டபத்தூண் ஒன்றில் கர்லாக்கட்டை சித்தர் திருவுருவம் உள்ளது.









