திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 10வது குருமூர்த்திகள்
ஶ்ரீலஶ்ரீ வேலப்பதேசிக சுவாமிகள் 320ஆவது குருபூஜை விழா அழைப்பிதழ்
நாள்: ஶ்ரீ சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 8ம் தேதி (24/09/2020) வியாழக்கிழமை
அன்புடையீர்,
நிகழும் மங்களகரமான 1196ம் ஆண்டு ஶ்ரீ சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 8ம் தேதி (26/09/2020) வியாழக்கிழமை மூல நட்சத்திரம் அன்று திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்
10வது பட்டம் ஶ்ரீலஶ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் அவர்களின் குருபூஜை நிகழ்வதை முன்னிட்டு குருமூர்த்திகள் ஜீவன்முத்தராக இருந்து அருள்பாலித்து வருகிற திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில், மேல ரதவீதியில் உள்ள திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன கிளை மடத்தில் அதன்
24வது குருமஹா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் அவர்களின் அருளாசியுடன் அபிஷேக ஆராதனைகள், நூல் வெளியீடு, மாகேஸ்வர பூஜை, சமய சொற்பொழிவு மற்றும் திருமுறை இன்னிசை ஆகிய நிகழ்ச்சிகள் நிகழ்முறையில் குறித்த வண்ணம் நடைபெற உள்ளது.
மெய்யன்பர்கள், சைவ சித்தாந்த செந்நெறியாளர்கள், மற்றுமுள்ள அன்பர்கள் அனைவரும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து குருவருளும், திருவருளும் பெற்று சிவானந்தத்தில் இன்புற்று திளைக்க தெரிவிக்கலானோம்.
அருளாணையின் வண்ணம்,
காறுபாறு−வைத்தியநாதத் தம்பிரான்,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்.
ஶ்ரீ சார்வரி வருடம் புரட்டாசி மாதம் 8ம் தேதி (24/09/2020) வியாழக்கிழமை:
காலை 09:00 மணி:
ஶ்ரீலஶ்ரீ வேலப்ப தேசிக சுவாமிகள் குருமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமுறை பாராயணம்
நிகழ்த்துபவர்:
இ.இராமகிருஷ்ண ஓதுவார்,
திருமுறை ஆசிரியர்,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சைவத்திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு,
சங்கரன்கோவில்.
காலை 10:30 மணி:
வரவேற்புரை:
சைவத்திரு. த.சங்கரநாராயண ஓதுவார்,
சமய பரப்புனர், மற்றும் சைவத்திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு விளக்கவுரை ஆசிரியர்,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்,
நூல் வெளியீட்டு விழா பேருரை:
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீன சீர்மன்னு தம்பிரான் சுவாமிகள் அவர்கள்.
நூல்:
“ஶ்ரீ வேலப்ப தேசிகர் அருள் வரலாறு
ஞான நூல் அர்ப்பணிப்பு:
மெய்க்கண்டார் திருவருட்கழகம்,
சங்கரன்கோவில்.
முதல் பிரதியை பெறுபவர்:
பே.பாடாலிங்கம்,
துணை அமைப்பாளர்,
சைவத்திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு,
சங்கரன்கோவில்.
சிறப்புரை:
சிவஶ்ரீ N.K.S.D.சுப்ரமணியன் B.A.,
தலைவர்,
சைவ சித்தாந்த சபை,
சங்கரன்கோவில்.
சிவஶ்ரீ S.கணேசன் M.Com.,B.Ed.,M.Phil.,
இணைச்செயலாளர்,
சைவ சித்தாந்த சபை,
சங்கரன்கோவில்.
மகிழ்ச்சியுரை:
சிவஶ்ரீ C.இராமச்சந்திரன் அவர்கள்,
தென்மண்டல மேலாளர்,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம்.
நன்றியுரை:
சிவஶ்ரீ இரா.சிவசங்கரன் B.A.,
ஆய்வாளர்,
ஆதீன கிளை மடம்,
சங்கரன்கோவில்.
மதியம் 12:00 மணி:
சிறப்பு தீபாராதனை
மதியம் 12:30 மணி:
மாஹேஷ்வர பூஜை
(அன்னம் பாலிப்பு)
உபயம்:
ஆடித்தபசு திருவிழா அன்னம் பாலிப்பு குழு,
சங்கரன்கோவில்.
மாலை 06:30 மணி:
தேவார இன்னிசை கச்சேரி
துவக்கவுரை:
திருமதி. சண்முகவேலு ஆவுடையப்பன் B.Sc.,
செயலாளர்,
சைவ சித்தாந்த சபை,
சங்கரன்கோவில்.
நிகழ்த்துபவர்கள்:
திருமுறை கலாநிதி, கலைமாமணி,
திருத்தணி N.சுவாமிநாத ஓதுவாமூர்த்திகள்
நிகழ்ச்சி உபயம்:
ஒளி வளர் நிலையம்,
சைவ சித்தாந்த சபை,
சங்கரன்கோவில்.
நன்றியுரை:
சைவத்திரு த.சங்கரநாராயண ஓதுவார்,
சமய பரப்புனர்,
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம். மற்றும்
சைவத்திருமுறை நேர்முக பயிற்சி வகுப்பு திருமுறை விளக்கவுரை ஆசிரியர்.
வாழி நலம் சூழ..!










