சிவதரிசனம்கோடிபுண்ணியம் #சுக்கிரவார பிரதோஷம் #என்னசெய்யலாம்? #என்ன_செய்யக்கூடாது?
☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
சிவனை வழிபட எத்தனையோ முக்கியமான தினங்கள், பண்டிகைகள், விசேஷங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான நாளாக கருதப்படுவது பிரதோஷம் ஆகும்.
☘️
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை என்னும் 2 காலங்களிலும், திரியோதசி திதியில் வருவது vபிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கம்.
☘️
பிரதோஷ நேரம் என்பது மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள நேரமாகும். பிரதோஷ வேளையான sஇந்நேரத்தில் சிவபெருமானையும், நந்திதேவரையும் தரிசிப்பது மிகவும் சிறப்பானது ஆகும்.
☘️
வெள்ளிக்கிழமையில் வரும் பிரதோஷம் ‘சுக்கிர வாரப்பிரதோஷம்” ஆகும். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும் வெள்ளிக்கிழமையில் வரும்m பிரதோஷத்தில், மறக்காமல் சிவதரிசனம் செய்தால் பகைகள் விலகும். குடும்ப பாசம் கூடும்.
☘️
#பிரதோஷநாளில்என்னசெய்யலாம்? #என்னசெய்யக்கூடாது?
☘️
பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம்.
☘️
வில்வ இலைகளை கொண்டு சிவனை வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.
☘️
பிரதோஷ நாட்களில் அன்னதானமாக தயிர்சாதம் வழங்குவது இன்னும் பலம் சேர்க்கும்.
☘️
பசுவுக்கு உணவிடுங்கள். சந்ததி சிறக்க வாழலாம்.
☘️
சிவபெருமானையும், நந்தியையும் வழிபடும்போது யாருடனும் பேசாதீர்கள்.
☘️
எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள்.
☘️
சிவனின் நாமத்தை மட்டும் உச்சரியுங்கள்.
☘️
நந்தியை மறைத்துக் கொண்டு சிவபெருமானை வணங்காதீர்கள்.










